google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: யார் இந்தப் பெரியார்? என்போரே கேளீர்

Sunday, May 19, 2013

யார் இந்தப் பெரியார்? என்போரே கேளீர்


மதமென்னும்
மதுப்போதையில்
மயங்கிக் கிடந்த
மனிதர் கூட்டம்
மதியற்று செய்த சூழ்ச்சி
உயர்வு தாழ்வு இகழ்ச்சி
மீண்டும்  குரங்காக
மனிதன் மாறும்
பரிணாம வீழ்ச்சி...
freeonlinephotoeditor
அவர்
பிறவியிலேயே
செல்வச் சீமான்
பதவிகள்
பாராட்டுக்கள்
பல கண்ட பண்பாளர்   
ஆயினும் 
எவர் எக்கேடு
கெட்டுப் போகட்டும் 
என்றில்லாமல்....

freeonlinephotoeditor  

கடவுள் இல்லை என்றால்
பழிப்பார் என்று தெரிந்தே
அறியாமை  அகற்ற
பகுத்தறிவு பகலவனாய்.....

அள்ளிக்கொடுப்பது மட்டுமே
அவனியில் தர்மம் அல்ல
சுயமரியாதை  சுடர்விட
பகுத்தறிவுடன் வாழ்ந்திட
சொல்லிக்கொடுப்பதே
அழியாத தர்மம் என்று
எவர் இங்கே
அதர்மத்தை அழித்து 
அறவழி காட்டினாரோ
அவரே பெரியார்...

http://www.periyarthalam.com/wp-content/uploads/2012/11/63150_272307752872733_1800259403_n.jpg
அவரால்
தீண்டாமைக்கு
திண்டாட்டம் வந்தது
பெண்ணுரிமை
முன்னுரிமை கொண்டது
மூடநம்பிக்கை
முகத்தை மூடிக்கொண்டது
அவர் போட்ட
கடவுள் இல்லை கூப்பாட்டில்
கடவுள் எப்போதும் போல 
கம்முனுதான் இருந்தார்
கடவுள் பிரதிநிதிகள்தான்
தம் கட்டி வம்புக்கு வந்தார்

பழிப்போரை புறம் தள்ளி
அறவழி காட்டி
தன்னம்பிக்கை தந்ததாலே
அவரும்  தந்தையானார்
பகுத்தறிவு தந்தையானார்

இன்று யார் இந்தப் பெரியார்...?  
என்று கேட்போரெல்லாம் 
அன்று யாருக்காக அவர் 
பழிசுமந்து வழி காட்டினாரோ 
அவர்கள் வாரிசுகள்தான்
அதை நினைத்தால்தான் 
நெஞ்சு பொறுப்பதில்லை...   

freeonlinephotoeditor

இன்று யார் இந்தப் பெரியார்...?
என்று கேட்போரே....
கேளீர்!
பகுத்தறிவு இல்லாத 
நீவீர் ஒரு வெங்காயம்
உரிக்க உரிக்க உள்ளே
ஒன்றுமில்லாத மாயம் 
பெரியார் வழி போவோருக்கு 
என்றும் வராது பெருங்காயம் 

வழி காட்டினார் பெரியார்
பழி கொட்டினார் சிறியார் 

கவிதை தந்த குறள் 40:


செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி.
கலைஞர் உரை:
பழிக்கத் தக்கவைகளைச் செய்யாமல் பாராட்டத்தக்க அறவழிச் செயல்களில் நாட்டம் கொள்வதே ஒருவர்க்குப் புகழ் சேர்க்கும்.

குறிப்பு-இது குறளுக்கு எழுதிய விளக்கமல்ல...குறள் படித்ததால் என்னுள் எழுந்த உணர்வின் பிரதிபலிப்பு..இலக்கியவாதிகள் தவறாக நினைக்க வேண்டாம்............................பரிதி.முத்துராசன்
 
                    thanks-YouTube by PARITHI MUTHURASAN PARITHI MUTHURASAN·


அண்ணேன்...எனக்கொரு டவுட்டு ....? இது பரிணாம வளர்ச்சியா...?
பரிணாம வீழ்ச்சியா.....?

freeonlinephotoeditor


அடேய் தம்பி....அறிவழகா....
இது பாச உணர்ச்சி...பழைய பாச உணர்ச்சி 
இரண்டு பேர் முகத்திலும் பாரடா.....மகிழ்சி
அதை பார்த்தால் வருது நமக்கும் நெகிழ்ச்சி
நம் இனத்தின் மீது இந்த மனிதர்களுக்கு இல்லை இகழ்ச்சி..நம்மளில் நிறையப்  பேர் இங்கே மந்திரி ஆகியாச்சி

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1