மாசாணி-
படம் துவங்கும்போதே சிலை செதுக்கும் சிற்பியின் உளிச்சத்தம்..நள்ளிரவு இடி மழை...இடையிடையே பிரசவ வேதனையில் ஒரு பெண் குரல்...குழந்தை அழுகை...அதைத் தொடர்ந்து ஆ...அதி பயங்கரமாக ஆரம்பிக்கும் பேயின் ஆட்டம் இடைவேளை வரை நீடிக்கிறது....
சேலம் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் நாட்டாமை சரத்பாபு எவ்வளவோ முயன்றும் அரைகுறையாக வடிக்கப்பட்டு நிற்கும் அம்மன் சிலையை முடிக்க வரும் எல்லாச் சிற்பிகளையும் ஒரு பேய் விரட்டியடிக்கிறது...அதனால் சரத்பாபுவின் மச்சான் ஆடுகளம் நரேன் புது நாட்டாமையாகப் பதவியேற்று..ஒரு வாலிப சிற்பியை அழைத்துவந்து அம்மன் சிலையை முழுமையடையச் செய்கிறார்...அந்த வாலிபன் யார் என்பதும் மாசாணியாக அலையும் பேய்க்கும் அவனுக்கும் என்ன உறவு...? அவனை மட்டும் அந்தப் பேய் எப்படி அனுமதிக்கிறது...? என்பதும்தான் படத்தில் சஸ்பென்ஸ்...மர்மம் தெரிந்துவிட்டால் உங்களுக்குப் படம் பார்க்கும் சுவாராசியம் பேய்..ச்சே....போய்விடும்
முதல் நாட்டாமை சரத்பாபுவின் தம்பியாக முன்னால் செந்தூரப்பூவே நாயகன் ராம்ஜி மீண்டும் வந்து அதே இளமைத் துள்ளலுடன் ஆனால் கொஞ்ச நேரமே வரும் பிளாஸ்பேக் இனியாவுடன் காதலில் கலக்குகிறார்...
சரத்பாபு மனைவியாக வரும் ரோஜா வில்லியாக நடித்து...ராம்ஜியை காதல் கவுரவக்கொலை செய்யும் நிகழ்ச்சி மனதை வருடும் காட்சி...ஆனால் மைனர்...? சிட்டிபாபுக்கு அம்மா என்பதை நம்மால் ஜீரணிக்க முடியவில்லை
அகில்- ஸ்ரீஜா ரோஸ்..ராம்ஜி-இனியா ...இப்படி அதி பயங்கரப் பேய்க்கதை ஊடே மென்மையான காதல் கதை...பேயின் அதிரடித்தனத்திலிருந்து நமக்கு ஆறுதல்..இல்லையேல் நமக்குத் தலைவலி வந்திருக்கும்..N.பாசில் இசையில் மல்லி மல்லி பாடலும் ஏதோ...ஏதோ..பாடலும் கேட்கலாம்
போண்டா மணி,மனோபாலா,பாண்டி,..இப்படி பலர் பேய்க்கு பயந்து நடுங்கி நம்மைச் சிரிக்க வைக்கப் படாத பாடு படுகிறார்கள்..சிட்டிபாபு அம்மா அம்மா என்று ரோஜாவை அழைப்பதில் அரசியல் வடை..ச்சே...வாடை வீசுகிறது.
பத்மராஜ்-L.G.ரவிச்சந்திரன் இயக்கிய மாசாணி பார்பதற்கு ஆன்மீக பக்திப்படம் போன்று இருந்தாலும் அதனுள்ளும் சில பகுத்தறிவு சிந்தனைகள், தீண்டாமை சாதிக்கொடுமைகள், காதல் கலப்புத் திருமணம்,ஊரை விட்டு ஒதுக்கி வைத்தல்...இபோதைய பிரச்சனைக்குரிய காதல் கவுரவக் கொலை போன்றவைகள் நாசுக்காக விதைக்கப்பட்டுள்ளன
நடுவுல கொஞ்சம் பக்கத்தைக்காணோம் ப்பே..பே..ய் ரசிகர்கள் இந்த மாசாணி பேயை ரசிப்பார்களா...? தெரியவில்லை ஆனால் கிராமத்து கதை...தந்தை பெரியார் பிறந்த தமிழ் நாடாயினும் நமது கிராமங்கள் இன்னும் முழுவதுமாகப் பேய்களின் பொய்த்தொல்லையிலிருந்து விடுபடவில்லை எனவே ஜெகன் மோகனி காலக்கட்டத்தில் வரவேண்டிய மாசாணி இப்போது முனி..1 ..2..3..காலகட்டத்தில் வந்திருந்தாலும் பேய் படங்களுக்கும் சாமி படங்களுக்கும் கிராமங்களில் நல்ல வரவேற்பு எப்போதும் உண்டு ..அதில் மாசாணியும் விதிவிலக்கல்ல
மாசாணி-
பயங்கரமான.....?
காதல்....பேய் படம்
கவுரவக் கொலை
சாதிக்கொடுமை
தீண்டாமை பேய்களின் படம்
Just press the PLAY button above audio player for ghost sound effects.....ha...haa
***********************************************************************
மாசாணி- சினிமா விமர்சனம்
(அப்பாடா...எப்படியோ நல்லபடியாக மாசாணி சினிமா விமர்சனம் எழுதிவிட்டேன் அந்த மாசாணிப் பேயிடமிருந்தும் தப்பிவிட்டேன்)
thanks-YouTube-SaregamaTamil
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |