google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: மனிதநேய ஹைக்கூ கவிஞர்

Tuesday, May 28, 2013

மனிதநேய ஹைக்கூ கவிஞர்

freeonlinephotoeditor  

பாராம்பரியமிக்க ஜப்னீஸ் ஹைக்கூ கவிதைகள் எழுதியவர்களில் கோபயாஷி இஸ்ஸா என்பவர் பாஷோ,புசோன்,ஷிகி  போன்றவர்கள் வரிசையில் நான்கு முது நிலைக் கவிஞ்சர்களில் ஒருவராவார்.ஒரு தேநீர் கோப்பை என்று ஜப்பானியர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட இவர் 20,000 ஹைக்கூ கவிதைகளுக்கும் மேல் 
ஹச்சிபன்-நிக்கி,ஓரகாகறு,கூபன்-நிக்கி போன்ற கவிதை தொகுப்புக்கள் வெளியிட்டார்.இவருக்கு இன்றுவரை வாசகர் வட்டம் உள்ளது ஆச்சரியமே.....

http://www.gwarlingo.com/wp-content/uploads/2012/06/issa_the_haiku_poet-by-Hashimoto-Heihachi.jpg
இஸ்ஸா....இவரது முன்னோடி புசோனின் வடிவமைப்பை தனது கவிதைகளில் தொடர்ந்தாலும் இவருக்கென்று இருந்த தனித்தன்மை இவரது படைப்புகளில் மிளிரும் அது ஒருவித மனித நேயமிக்க (humanistic)அணுகுமுறை ஆகும் 
இவரது படைப்புகளில் இவரது வறுமை,சோகம்,கடவுள் பற்று...இப்படி இவரது வாழ்க்கையின் பிரதிபலிப்புகள் தெரியும் இவர் குழந்தைப் பருவத்திலிருந்தே அமைதி தேடி கோதுமை வயல்வெளிகளில் அலைந்து திரிந்த தனிமை விரும்பி.. அவைகள் அவரது படைப்புகளில் அதிகம் மிளிரும் 

freeonlinephotoeditor

ஒ...நத்தையே!
ஃபுஜி மலை மீது ஏறு....
ஆனால் மெதுவாக, மெதுவாக!
...............கோபயாஷி இஸ்ஸா (தமிழாக்கம்-பரிதி.முத்துராசன்)
...என்று நத்தையுடன் பேசிய இவரது படைப்பு உலகப்பிரபலமானது 

நான் மென்மைகொண்டு 
தொட்டவை யெல்லாம்...அந்தோ!
ஒரு முட்செடி போன்ற உறுத்துகிறது.
...............கோபயாஷி இஸ்ஸா (தமிழாக்கம்-பரிதி.முத்துராசன்)
.....என்று வாழ்வின் சோகத்தை நுட்பமான உணர்வுகளால் பிரதிபலித்தார்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhtY6MM8OavzNx80b3V8y4U8JfAcJTwYxgUKR-fdOOLT-mfywyoANQjuZpFPqduxZAAeB6SgUkUi1dng0EHVd68HAP5DB0xqzj6MYVsucQmOfKt6eHtBte5H-DWvcb0GJcg6hfiP-GcLc5O/s400/kobayashi+issa.jpg
நீங்கள் பிறந்த போதும் ஒரு குளியல்,
நீங்கள் இறந்து போதும் ஒரு குளியல்,
எப்படிப் பட்ட முட்டாள்தனம் 

...............கோபயாஷி இஸ்ஸா (தமிழாக்கம்-பரிதி.முத்துராசன்) 


பூச்சிகளுடன் சேர்ந்து 
சிலர் பாட முடியும் 
சிலரால் முடியாது. 
...............கோபயாஷி இஸ்ஸா (தமிழாக்கம்-பரிதி.முத்துராசன்)  
இப்படி இவரது படைப்புகள் விமர்சகர்கள் பார்வையில் "இவரது சுயசரிதை மீது கவனமாக வடிவமைக்கப்பட்ட சுய ஓவியங்கள்...." என்று கருதப்பட்டன  

http://img190.imageshack.us/img190/2403/frogbritmuse.jpg

ஒரு பெரிய தவளையும் நானும்,
ஒருவருக் கொருவர் பார்த்துக் கொண்டே...
நாங்கள் இருவருமே நகரவில்லை!

...............கோபயாஷி இஸ்ஸா (தமிழாக்கம்-பரிதி.முத்துராசன்) 

சிலந்திகளே! கவலைப்படாதீர்கள் 
நான் என் வீட்டை வைத்திருக்கிறேன் 
சாதாரணமாகத்தான்....
...............கோபயாஷி இஸ்ஸா (தமிழாக்கம்-பரிதி.முத்துராசன்)  
...இப்படி அனைத்து உயிர்களையும் அவரது நேசிக்கும் தன்மை அவரது கவிதைகளில்  வெளிப்படுகிறது 

http://farm3.static.flickr.com/2671/3716265624_49472173f4_o.jpg
எல்லா நேரமும் நான் புத்தரை வேண்டுவது 
எந்தக் கொசுக்களையும் கொல்லாமல் 
என்னை வைத்திரு என்று
...............கோபயாஷி இஸ்ஸா (தமிழாக்கம்-பரிதி.முத்துராசன்) 


பார்! அந்த ஈ-யைக் கொல்ல வேண்டாம் 
அது உன்னிடம் பிராத்தனை செய்கிறது.
அதன் கைகளையும் கால்களையும் தேய்ப்பதன் மூலம்.
...............கோபயாஷி இஸ்ஸா (தமிழாக்கம்-பரிதி.முத்துராசன்) 
இங்கே அவரது புத்த மதத்தின் மீது உள்ள கடவுள் பற்று தெரிகிறது 
அதே நேரத்தில் அன்று அவரைப் போன்ற புத்த மதத்தவர்கள் 
ஒர் ஈ-யைக் கொல்வதற்குகூட அஞ்சிய காலக்கட்டம் ...
இன்று நமது அண்டை நாடான இலங்கையில் அதே புத்தமத மனிதர்களின் ஈ-யைவிட ஈனத்தனமான இனவெறியைக் காணும்போது என்னுள்ளும் ஏராளமான கவிதைகள்...

http://farm4.static.flickr.com/3169/2442766360_44f57ec58c.jpg

இன்று இலங்கையில்
புத்தர் இருந்திருந்தால்....
அந்த போதிமரமும் 
அவரது தூக்கு மரமாயிருக்கும்  
....................................(பரிதி.முத்துராசன்) 

இப்படித்தான் எழுத தோன்றுகிறது...இது ஹைக்கூ கவிதையோ இல்லையோ என் உணர்வின் பிரதிபலிப்புகள் உண்மையில் ஈனர்களையும் வீனர்களையும் எழுதுவதைவிட....எழுதாமல் இருப்பதே மேலானது

      
                                ............................(இன்னும் வரும்)     
 
 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1