google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: வந்தவைகளில் வென்றவைகள்(2013 கோலிவுட் சினிமா)

Tuesday, May 28, 2013

வந்தவைகளில் வென்றவைகள்(2013 கோலிவுட் சினிமா)

கோலிவுட் திரைவானில் 2013- ஜனவரியிலிருந்து மே 24-க்குள் இதுவரை  65 திரைப்படங்களுக்கும் மேல் வெளிவந்துள்ளன அவைகளில் 7 படங்கள் மட்டுமே வெற்றிப் பெற்று மக்கள் மனதில் நிற்கின்றன.........இவைகள் பிரபல இணையதளங்களில்  பார்வையாளர்களிடம் பெற்ற 6.5/10 -க்கு மேல்  ரேட்டிங் மூலமே வரிசைப்படுத்தப் பட்டுள்ளன


http://thedipaar.com/new/gallery_images/kamal%20hassan%20_actor/viswaroopam-Thedipaar.com-01%20(4).jpg
 1-விஸ்வரூபம்
விஸ்வநாதன் என்ற ஒரு பரதநாட்டிய கலைஞர் விஸ்வரூபமாக மாறி பயகரவாதிகளை வேட்டையாடுபவராக  இயக்கி  நடித்த கமல் ஹாசனின் இத்திரைப்படம் வசூலில் சாதனைப்படைத்து முன்னணியில் உள்ளது. இது விமர்சகர்களால் "கோலிவுட் தமிழ் சினிமாவை உலகளவில் அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் அற்புதமான படம்" என்றும் பாராட்டப்பட்டது.

freeonlinephotoeditor
2-பரதேசி
சுதந்திரத்துக்கு முற்பட்ட  1940- காலகட்டத்தில் கவலையற்ற கிராமவாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் எப்படித் தேயிலை தோட்டங்களில் வேலைக்குச் சென்று கொடுமையாக வாழ்வின் எஞ்சிய காலங்களையும் அடிமையாக நம்பிக்கையற்று வாழ்ந்தார்கள் என்பதைத் தத்ரூபமாக நடிகர் அதர்வா முரளி மூலம் இயக்குனர் பாலா பார்வையாளர்களை இனம்புரியாத ஒன்றை இதயத்தில் உணரவைத்த திரைப்படம்    

freeonlinephotoeditor
3-சென்னையில் ஒரு நாள்
சென்னையில் ஒரு விபத்தில் மூளைச் சாவு ஏற்பட்ட  ஒரு வாலிபரின்  இதயத்தை 170 கி.மீ. தொலைவில் உள்ள வேலூரில் இருக்கும் ஒரு மருத்துவமனைக்குக் குறிப்பிட்ட காலத்திற்குள் சாலையின் வழியே கொண்டு செல்லும் நிகழ்வாக....பார்வையாளர்களை இருக்கையின் மூலைக்கு இழுக்கும் த்திரிலர் திரைப்படம்

http://www.ultraimg.com/images/tN9ng.jpg
4-சூது கவ்வும்
தனியாகச் சின்னச் சின்னக் கடத்தல்கள் செய்து கொண்டிருந்த ஒரு நடுத்தர வயது கடத்தல்காரன் தனது நண்பர்களுடன் பெரிதாக ஒரு மந்திரி மகனைக் கடத்தும் முயற்சியும் அதனால் ஏற்படும் குழப்பங்களுமாகக் காட்சிகள் பார்வையாளர்களைக் குழப்பாமல்....  அவர்கள் எதிர்பார்க்காத வண்ணம் அமைக்கப்பட்டு நகைச்சுவை உணர்வுடன் சொல்லப்பட்ட இத்திரைப்படம்  நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதியின் யதார்த்தமான நடிப்பில் தமிழ் சினிமா உலகுக்கு ஒரு புது வெற்றி முயற்சி   

freeonlinephotoeditor
5-எதிர்நீச்சல்
ஒர் இளைஞ்சன் தன் வாழ்க்கையில் ஏதேனும் சாதிக்க வேண்டும் என்று ஊக்குவிக்கும் படமாகவும் அதே நேரத்தில் ஒர் அருமையான காதலையும்  எவ்வித பகட்டுமின்றி  ரொம்ப யதார்த்தமாகச் சொல்லி நடிகர் சிவ கார்த்திகேயன் இயல்பாக நடிக்க துரை செந்தில்குமார் இயக்கிய இத்திரைப்படம் வெற்றிவரிசையில் சேர்ந்துள்ளது.

freeonlinephotoeditor
6-கேடி பில்லா கில்லாடி ரங்கா
அப்பா சொல் கேளாமல் வீட்டுக்கு அடங்காத உதவாக்கரை நண்பர்கள் இருவராக விமலும் சிவ கார்த்திகேயனும் நடித்த இத்திரைப்படம் அவர்கள் விரும்பிய வண்ணமே அரசியலில் நுழைந்து வெற்றி பெறுவதாகச் சொல்கிறது இயக்குனர் பாண்டிராஜ் இப்படத்தில் காதல்-நகைச்சுவை-சென்டிமென்ட்  என்று முக்கனி சுவையை அமிர்தமாகப் படைத்திருந்தார்.

http://www.tamilthiraiulagam.com/films/2013/images/kannaladduthinnaasaiya.jpg
7-கண்ணா லட்டு தின்ன ஆசையா
சந்தானம்-பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன்-சேது என்ற மூன்று கோமாளி மனிதர்கள் விஷாகா சிங் என்ற பெண் மீது காதல் என்ற போர்வையில் வடிக்கும் ஜொள்ளு காட்சிகளே இத்திரைப்படம்....ஆயினும் ஒரிஜினல் திரைப்படம் இன்று போய் நாளை வா படத்திலிருந்து நிறைய மாறுபட்ட காட்சிகளும் கோமாளி நடிகர்களின்  கூட்டணி செயல்பாடுகளும் பார்வையாளர்களைக் குஷிப் படுத்தியது.

தமிழ் சினிமா 2013-ல் இதுவரை வந்தவைகளில் விஸ்வரூபம் படத்தைத் தவிர மற்றவைகள் எந்த நட்சத்திர அந்தஸ்து கொண்ட நடிகர்களை வைத்தும் வெற்றிபெறவில்லை என்பதும் கதை-யதார்த்தம்-நகைச்சுவை இவைகளை வைத்தே வெற்றிப் பெற்றுள்ளன என்பதும் நிதர்சனமான உண்மையாகும்

இன்னும் மிகப் பெரிய நட்சத்திர நடிகர்களின் படங்கள் ஜல்லிக்கட்டு மாடுகள் போல் பந்தய வாசலில் வரிசையில் நிற்கின்றன... சில பாய்ந்து வருகின்றன சில  பதுங்கி விழிக்கின்றன...எப்படியும்  அவைகள் களம் இறங்கத்தானே வேண்டும்...அப்போது தெரிந்துவிடும் வாழ்க தமிழ் சினிமா ரசிகர்கள்...வளர்க தமிழ் சினிமா நடிகர்கள்!

http://cinemalead.com/photo-galleries/singam-2-movie-poster/wmarks/singam-2-movie-poster05.jpg

அண்ணேன்....எனக்கு ஒரு டவுட்டு.....? நீங்க என்னவோ ஜல்லிக்கட்டுனு சொல்லுறீங்க...இங்கே இப்ப வருபவைகள் எல்லாம் (குட்டிப்)புலி....சிங்கம்(2)...அய்யோ ...பயமாயிருக்குது...அண்ணேன்  
**************************************************************************
வா...வா....என் வெளிச்சப் பூவே வா......
Just PLAY tha audio player below the post for the real effects of....
 வெளிச்சப் பூ....






















நண்பர்களே!...உங்கள் பொன்னான வாக்கை அளித்து........ 
இந்த ஏழு திரைப்படங்களில் 
எது உங்களுக்குப் பிடித்தது....?
என்று   தெரியப்படுத்துங்கள்      


வாக்களித்த அனைவருக்கும் நன்றி.............



 விரைவில் பயங்கரப் பேய்....பதிவு.....

                           மாசாணி
                    சினிமா விமர்சனம்
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1