சினிமாவின் நான்காவது விதியாகக் கருத்து ஒருமைப்பாடு (INTEGRITY TO THE CONCEPT) ஆகும். இது நமது தமிழ் சினிமா சூது கவ்வும் திரைப்படத்தில் முழுமையாக எவ்வாறு இருக்கிறது என்பதை இங்கே அறிவோம்.......
கருத்து ஒருமைப்பாடு என்பது பார்வையாளர்களை ஈர்க்கவும் "திருப்தி" படுத்தவும் ஒரு சிறந்த இயக்குனர் திரைப்படத்திற்குரிய உள்ளடக்கத்தைச் சீர்படுத்தி எவ்வித சமரசமுமின்றிச் சுவையற்ற காட்சிகளைத் தவிர்த்துப் பார்வையாளர்களிடம் ஒரு வித எதிர்பார்ப்பை உருவாக்கி ஒரு திரைப்படமாக வழங்குவதே ஆகும்
சூது கவ்வும்- திரைப்படம் தாஸ்(விஜய் சேதுபதி) என்ற சின்னச் சின்ன கடத்தல்கள் செய்தவன் அவனது நண்பர்கள் கேசவன்,சேகர் போன்ற உதவாக்கரைகளுடன் சேர்ந்து ஒரு மந்திரி மகனை கடத்த...யாரும் எதிர்பாராத விதமாகக் கதை மாற்றி யோசி என்ற வகையில் நகைச்சுவையுடன் சொல்லப்படுகிறது....
இதுவரை நாம் தமிழ் சினிமாவில் வழக்கமாகப் பார்த்த ஒரு கடத்தல்காரனுக்கு இருக்க வேண்டிய வீரதீர அதிரடி செயல்கள் கொடூரமான முகபாவங்கள் கவர்சி என்ற போர்வையில்ஆபாசங்கள் குத்து டான்ஸ்கள் கொலைவெறிப் பாடல்கள்...இப்படி தமிழ் சினிமாவுக்கென்று நிறைய இருந்தவைகள் இங்கே இல்லைகளாக இருந்ததால் பார்வையாளர்களுக்குப் படு திருப்தி
இவை எல்லாவற்றுக்கும் உச்சமாக வித்தியாசமான கதைக்கு உயிரோட்டம் தரும் யதார்த்தமான நடிகராக விஜய் சேதுபதியின் தேர்வு இயக்குனரின் திறமைக்கு சான்று.....இந்தப் பதிவுகளையும் இதுவரை வாசிக்காதவர்கள் வேண்டுமெனில் பார்வையிடவும்...
சூது கவ்வும்-படமும் பதிவர்கள் பார்வையும்
விஜய் சேதுபதி-கொஞ்சம் நடிங்க பாஸ்...?
இதுவரை நம்மைத் தாளித்துக்கொண்டிருந்த அதிரடி நடிகர்கள், பஞ்ச டயலாக் பேசி நம்மைப் பஞ்சராக்கிக் கொண்டிருந்த பஞ்ச நடிகர்கள்,விரசமாக டாஸ்மாக் உளறல் காமெடியன்கள்....இப்படி நிறைய நடிகர்கள் இனி விரைவில் மாறுவார்கள் தமிழ் சினிமாவின் தலைவிதியும் மாறும் என நம்புவோமாக
விரைவில்......
எதிர்பாருங்கள்......
(Just press the PLAY button above the audio player...to mach the roaring sound effect of the Tiger)
சசிகுமாரின்...
. குட்டிப்புலி
சினிமா விமர்சனம்
முன்னோட்டம்...
சசிகுமாரின் குட்டிப்புலி-பாயுமா..? பதுங்குமா..?
thanks-YouTube-by IGTAMILMOVIES
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |