தில்லு முல்லு என்று பெயர் வைப்பதைவிட
லொல்லு லொல்லு என்று பெயர் வைத்திருக்கலாம்
என்ன கொடுமையடா இது?
ஒரிஜினல் தில்லு முல்லு
பார்த்ததோடு நின்றிருக்கலாம்
விதி யாரை விட்டது...?
இந்த தில்லு முல்லு படத்தை
திண்டுக்கல் லயோனியிடம்தான்
சினிமா பட்டிமன்றம்
பேசச் சொல்ல வேண்டும்...
ரஜினியின் தில்லு முல்லு படத்தைவிட
சிவாவின் தில்லு முல்லு படத்தில்
விஞ்சி நிற்பது நகைச்சுவையா..?
நமச்சல் அறுவையா...? என்று.
கண்ணா லட்டு தின்ன ஆசையா..? என்பது போல் இருக்கும் என்று ஆசையாகப் போனதற்கு கண்ணா அல்வா தின்ன ஆசையா...? என்று கிலோ கணக்கில் அல்வா கிண்டி கொடுத்துவிட்டார் இயக்குனர் பத்ரி..தில்லு முல்லு பெயருக்கு ஏற்ற தில்லு முல்லு படம்...மிகப்பெரிய மினரல் வாட்டர் கம்பெனி கேன் (கேன..?) முதலாளி சிவகுருனாதனை (பிரகாஷ்ராஜ்) பசுபதி என்ற பக்திமானாகவும் கங்குலி கந்தன் என்று கராத்தே மாஸ்டராகவும் (சிவா)ஏமாற்றி அவரது மகள் ஜனனியை (இஷா தால்வார்) லவுட்டிக்கிட்டுப் போவதே கதை....
மூலக்கதையை
உல்டா பண்ணுகிறேன் என்று
ஒன்றுமில்லாமல் பண்ணிவிட்டார்கள்
கதையின் முக்கிய கதாப்பாத்திரமாக
பிரகாஷ் ராஜ் நல்ல தேர்வு
பாவம் அவர் என்ன பண்ணுவார்..?
கதையோடு சேர்த்து அவரையும் சொதப்பிவிட்டார்கள்...
ஆக லோக்கலான கதைக்கு இவர் எதற்கு?
மூலக்கதையில்
தேங்காய் சீனிவாசனை காந்தியவாதியாக... சௌகார் ஜானாகியை நடிகையாக..
ரஜினியை இரண்டு நாகரீக வாலிபராக...காட்டினார்கள்
அந்தக் கதாப்பாத்திரங்கள் இங்கே உல்டாவாக...ஜீரணிக்க முடியவில்லை
பிரகாஸ்ராஜின் கோமாளி நடிப்பு...பேந்த பேந்த விழிப்திலும் சிவாவின் நடிப்பு பூனைக்கண் காண்டக்ட் லென்ஸ் மாட்டுவதிலும் முடிந்துவிடுகிறது .சூரிக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள் கோவை சரளா,மதுபாலா..நடிப்பது போல் கடிக்கிறார்கள் தேவதர்ஷினி அஜய்ரத்தினம்,இளவரசு வந்து போகிறார்கள்...கொடுத்த காசுக்கு சந்தானம் கடைசியில் வந்து கொஞ்சம் கிச்சு மூட்டுகிறார்
பசுபதிக்கு (ப=பழனி,சு=சுவாமிமலை,ப=பழமுதிர்சோலை,.. ) நல்ல விளக்கம் சொன்ன இயக்குனர் அப்படியே முருகபக்தர் பிரகாஷ்ராஜ்க்கு பழனி முருகன் மாதிரி நல்லவேளை கோவணம் கட்டாமல்...கோட்டும் சூட்டும் போடவைத்தார்..அதுதான் லாஜிக் இல்லாமல் இடிக்கிறது.
படத்தின் ஒரே ஆறுதல் இஷா தல்வார்
நல்ல கவர்ச்சி உடம்பில்...நடிப்பில் இல்லை...குரல் டப்பிங் அபத்தம்
படம் என்னவோ நகரவே மாட்டேங்கிறது... சந்தானம் வந்து கஷ்டப்பட்டு முடித்து வைக்கிறார் .
இயக்குனர் பத்ரி பகுத்தறிவு வாதியாக இருப்பாரோ...? முருகப் பக்தர்களை ஆகக் கேனையர்கள் என்று இந்த வாரு வாருகிறார்..
அப்புறம் சென்னை செந்தமிழைக் கூவம் என்கிறார்..அப்படியாவது யாராவது விஸ்வரூபம் எடுத்து வருவார்கள் படம் ஓடும் என்று நினைத்தாரோ..? படம் ஓடலாம்..
பாலச்சந்தர்+விசு இரு சினிமா மேதைகளின் பழைய கூட்டு+பொரியல் பெயருக்கு....
இசைவேந்தர் எம்.எஸ்.விஸ்வநாதன் இளைய இசையரசன் யுவன் சங்கர்ராஜாவுடன் இணைந்து இசையில் கலக்குகிறார்கள் ..ராகங்கள் பதினாறு பாடல் அதே டோனில் அசத்துகிறது...வாலியின் கைபேசி..பாடல் அட்டகாசமான வாலிபத் துள்ளல்
துபாய் காட்சிகள் வேண்டுமென்றே திணிக்கப்பட்டது போல் உள்ளது...துபாய் பாடல்காட்சியில் லட்சுமணன் ஒளிப்பதிவு அருமை.
இயக்குனர் பத்ரியை ஒருவகையில் பாராட்ட வேண்டும்...படத்தை ஒரு மணி நாற்பது நிமிடங்களில் முடித்து நம்மை காப்பாற்றியதற்கு..? வசனங்கள் அத்தனையும் அபத்தம்..இதில வேற விசு கேஸ் போட்டது வேஸ்ட்..
சிரிப்பு.....வரும் ஆனால் வராது......
பாடல்களும் இசையும் அருமை...
அதற்காக வேண்டுமென்றால் படம் பார்க்கலாம்
இங்கே....ஒரிஜினல் தில்லு முல்லு
காமெடியைக் கண்டு களியுங்கள்..
இங்கே....ஒரிஜினல் தில்லு முல்லு
காமெடியைக் கண்டு களியுங்கள்..
thanks-YouTube-mahaavatarbabajee
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |