google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: சினிமா 420 டிகிரி-சூது கவ்வும்

Thursday, June 13, 2013

சினிமா 420 டிகிரி-சூது கவ்வும் 
(குறிப்பு-இது ஒரு நகைச்சுவை கற்பனைப்பதிவு மட்டுமே யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல)

நமது சினிமா 420 டிகிரி-நிகழ்சிக்கு வந்திருக்கும் சூது கவ்வும் இயக்குனர் நலன் குமாரசாமியையும் நடிகர் விஜய் சேதுபதியையும் வரவேற்று.....
freeonlinephotoeditor வணக்கம்..இயக்குனர் நலன் குமாரசாமி...உங்க சூது கவ்வும் படம் முழுக்க டாஸ்மாக் தண்ணியடிக்கும் காட்சிகளும் புகைபிடிக்கும் காட்சிகளும்  நிறைய உள்ளன என்று பதிவர்கள் புகார் படிக்கிறாங்களே..?

யதார்த்தம்னா அப்படித்தான்..தெருவுக்கு தெரு டாஸ்மாக் இருக்கும்போது தண்ணியடிக்காத கிரிமினல் எங்கே போய் தேடுறது...?

கதைகூட ஆள் கடத்தல் கிரிமினல் பற்றிதான் உள்ளது.படத்தில் பிரம்மான்னு ஒரு பெரிய போலிஸ் அதிகாரியையும் கோமாளியாக கடைசியில் காட்டிப்புட்டிங்க.. இதைப் பற்றி என்ன சொல்றீங்க...?

அப்படினா..இனிமே சாமியார் கதையைத்தான் படம் புடிக்கணும்..அது இதவிட மோசமா இருக்கும்..அப்புறம் அதுக்கும் குறை சொல்லுவாங்க..ஏதோ கொடுக்கிற காசுக்கு சிரிச்சோமா..பொழுது போச்சான்னு பாருங்க...

நீங்க சூது கவ்வும் படத்தில் கடைசியில் இந்த மாதிரி கடத்தல்..மொள்ளமாரித்தனம் செய்றவங்க ஜெயிச்சதா காட்டுறிங்க..அது தப்பில்லையா...? ஒரு முதலமைச்சரைக் கூட ரொம்ப மோசமா  காட்டுறிங்க..?

ப்ளீஸ்..அரசியல் இங்கே வேண்டாம்...சாக்கடைய கிளறாதீங்க...நான் படத்தில இரண்டு டைப் அரசியல்வாதிகளையும் காட்டியிருக்கிறேன்..இப்ப இருக்கிற அரசியல் இதுதான்னு நானே சொன்னால் நல்லாயிருக்காது...அப்புறம் ஊரு ஊரா தியட்டருக்கு அலையலாம்..கோர்ட்டுக்கு அலைய முடியாது.

freeonlinephotoeditor

நீங்க நாட்டு நடப்பை மாற்றி யோசிக்கிறீங்க கவர்ச்சியாகக்  காட்டவேண்டிய  கடத்தல்காரனின் பப்ஸ் அழகியை தாஸ் மடியில வச்சிருந்தாலும்  அவரு மனசுல வச்சிருக்கும் காதலியாகத்தான் காட்டுறீங்க..  அடுத்து உங்க படம் எதைப் பற்றி இருக்கும்...?

யோவ்...நீ சரியான 420 பதிவராக இருப்பாய் போல தெரியுதே..பெரிய தல-களே இன்னும்  படத்துக்கு பெயரைச் சொல்லமாட்டேங்கிறாங்க...நீ என்னடானா கதையே கேட்குற...? ஏதாவது குறும்படத்தை பெரும் படமா எடுக்க வேண்டியதுதான்..ஆங்..ஆளைவிடுங்கப்பா...

http://images.desimartini.com/media/versions/main/original/1e085d53-d26b-4cae-a9b0-b46577ab853a_original_image_500_500.jpg

சரி..விஜய் சேதுபதி..நீங்க சொல்லுங்க...? இப்பலாம் நடிகர்கள் புலி..சிங்கம்...என்று இமேஜ் கிரியேட் பண்ணுறாங்க..நீங்க என்னடானா..நரைச்ச முடியோட...பெப்பெபெனு சூது கவ்வும் படத்தில முழிக்கிறீங்க...உங்களுக்குனு ஒரு இமேஜ் எப்ப கிரியேட் பண்ணுவீங்க...?

எனக்கு நடிக்கலாம் தெரியாது. பூனை வேசம் போட்டா... மியாவ்..மியாவுனுதான் சொல்லணும்..புலி மாதிரி உர்ர்..உர்ர்னு..உறுமக்கூடாது...அதைத்தான் நான் செய்றேன்..அதுதான் என் இமேஜ்..

நடுவுல கொஞ்சம் பக்கத்தைக்காணோம் படம்தான் உங்களுக்கு பெரிய ப்ரேக்..அதுலயும்  நீங்க பிரேம்குமார்னு மனநிலை பாதிக்கப்பட்டவராகத்தான் நடிச்சீங்க... சூது கவ்வும் படத்திலையும் தாஸ்னு மனநிலை பாதிக்கப்பட்ட கடத்தல்காரனாக நடிச்சீங்க..இனி எல்லா படத்திலையும் இப்படித்தான் நடிப்பிங்களா...?

யோவ்..என்னையா உன்னோட பெரிய தொல்லையாப் போச்சு..நான்தான் நடிக்கிறதில்ல..என்ன கதையோ அதுக்கு அப்படியே மாறிடுவேன் பூனைனா..

freeonlinephotoeditor

சரி..சாரி...போதும் போதும்...இதுவரை நம்ம   சினிமா 420 டிகிரி நிகழ்ச்சியில் பொறுமையாக பதிலளித்த உங்களுக்கு நன்றி...விஜய் சேதுபதி நீங்க முதன் முறையாக விஜய் அவார்ட் வாங்கியதைப் பார்த்தபோது..ஒரு குழந்தை மாதிரி துள்ளிக்குதிச்சிங்க... குதிச்சது நீங்க மட்டும் அல்ல ...ரசிகர்கள் நாங்களும்தான் இன்னும் பல விருதுகள் நீங்கள் பெற வாழ்த்துக்கள்..அதுபோல ரசிகர்கள் மன்றம் வேண்டாம் என்று உங்கள் நடிப்பு மீது மட்டுமே நம்பிக்கை கொண்டு  இளைய சமுதாயத்தை நல்வழிப்படுத்தும் உங்களுக்கு ...நன்றி...நன்றி

****************************************************************************
சினிமினி பப்ஸ்...............
****************************************************************************
மீண்டும் இயக்குனர்-நடிகராக அர்ஜுன்

freeonlinephotoeditor

 ஆக்சன் கிங் அர்ஜுன் நடித்து இயக்கிய வெற்றிப்படம் ஜெய்ஹிந்த் ..மீண்டும் அவரது நடிப்பு இயக்கத்தில் ஜெய்ஹிந்த்-2 வாக உருமாறி அதிரடிப்படமாக விரைவில் வெளி வருகிறது.. 

**************************************************************************
சினிமா கவர்ச்சி தேவதைகளின் சமுக ஆர்வம்...

freeonlinephotoeditor

குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கும் நடிகை ஹன்ஷிகா இப்போது மார்பக புற்று நோய் விழிப்புணர்வு தூதுவராக நியமிக்கப்பட்டு உள்ளார் அவரது சமுக பங்கை நாம் பாராட்டுவோம்....
 
சினிமாப் பதிவு...........

                 தீயா வேலை செய்யணும் குமாரு
                              சினிமா விமர்சனம்


LINK-http://parithimuthurasan.blogspot.in/2013/06/theeyavelaiseiyanumkumaru.html

beach

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1