பெரியார்-
கடவுள் இல்லை இல்லவே இல்லை
என்று சொல்பவர்களின் கடவுள்
உண்டியல்-
கடவுள் இருக்கின்றாரோ இல்லையோ
அவர் திருவோடு மட்டும் நிரம்பிவிடுகிறது.
சாதி-
அன்று உயர்ந்தோர் உருவாக்கிய சதி
இன்று அவர்களையே எரிக்கும் தீ.
மந்திரம்-
பாவிகள் பேசும் தாய்மொழி
அப்பாவிகளை ஏய்க்கும் தந்திர வழி.
சாம்பிராணி-
மூளையில்லாதவன் பெயர் மடச்சாம்பிராணி
அடக்கடவுளே..அதை ஏன் புகைமூட்டுகிறார் உமக்கு..?
ஊதுபத்தி-
கடவுள் பிடிக்கும் வாசனைப் புகைப்பான்கள்
கடவுளுக்கு வராதோ புற்று நோய்...?
மதம்-
மதம் பிடித்து மனிதர்களைக் கொன்றது யானை
எந்த மதம் என்றுதான் எவருக்கும் தெரியவில்லை...?
பகுத்தறிவுவாதி-
வயிற்றால் சிந்திப்பவன் மதவாதி
தலையால் சிந்திப்பவன் பகுத்தறிவுவாதி
மதவாதிகள்-
வியாதிகளுக்குப் பலபெயர்கள்l..காலரா,டைபாய்ட்,மலேரியா
அப்படித்தான் மதவியாதிகளுக்கும் பலபெயர்கள்
பேய்-
நடக்கும் நாடகத்தில் கடவுள் ஹீரோ
பேய்கள்,சாத்தான்கள் பெரிய வில்லன்கள்
மூடநம்பிக்கை-
தன்னம்பிக்கை இல்லாதவனுக்குக் கடவுள் நம்பிக்கை
கடவுள் நம்பிக்கை உள்ளவனை அழிக்கும் நம்பிக்கை
thanks-YouTube-by rajshritamil
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |