(எச்சரிக்கை-இது நகைச்சுவைப் பதிவு.
யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல)
டெங்கூ..கடி கவிதை
(ஒரு கொசுவின் கோரிக்கை)
ஏழையின் இரத்தம்
எனக்கு இணிக்கும்
ஏனென்றால்....
'ஏழையின் சிரிப்பில்
இறைவன் இருக்கிறான்'
என்று சொன்னார்
அறிஞர் அண்ணா
ஆனால்
அந்தோ..பாவம்
அவன் இரத்தத்தை
அளவுக்கு மீறி
குடித்து விட்டார்கள்
அவர் வழி வந்த
அரசியல்வாதிகள்
இருக்கும்
கொஞ்ச ரத்தமும்
டாஸ்மாக் நாற்றம்
பணக்காரன் இரத்தமோ
அய்யோ...பாவம்
உயர் அழுத்தம்
உடல் முழுக்க
வியாதி நாற்றம்
விதவிதமான
மருந்து வாசம்
விதிவசத்தால்
ஒருவனைக் கடிக்க
என் உடம்பிலும்
கெட்ட இரத்தம்...
இறைவா!
இந்தத் தோஷத்தை
எங்கே தொலைப்பேன்..?
இரத்தத்தின் இரத்தம்
வழி வந்த அம்மா..
மின்சார வெட்டு
இல்லாமல் போனால்
எப்படித்தான்
நான் உயிர்வாழ்வது?
கோரிக்கையோடு
கோட்டைக்கு வந்தால்...
நான் எழுதியவை
டெங்கூ.......?
கடி கவிதை என்று
என்னையே.....
அ(க)டிக்க வருகிறார்கள்
இது நியாயமா...?
அம்மா!...தாயே!
அம்மா உணவகத்தில்
இட்டலியும் தயிர்சாதமும்
போட்டால் போதுமா...?
ஆட்டுகால் பாயாவும்
ஆப்பமும் போட்டால்தானே
ஏழைகள் உடம்பில்
இரத்தம் ஊரும்
எங்கள் உயிரும்
இனிதே வாழும்..
இப்படியே
நீங்கள் தொடர்ந்தால்
நாங்களும்
சங்கம் வைப்போம்
போராடுவோம்.........
'வேண்டும் வேண்டும்
எங்களுக்கும் வேண்டும்
விலையில்லா இரத்தம் வேண்டும்'
*************************************************************************
சினிமினி பப்ஸ்............
****************************************************************************
சிங்கம்-2 இசை வெளியீட்டு விழா....
ஜூலை 5-லிருந்து ஒரு பய தப்ப முடியாது...?
வாங்கலே.....இசையா...? சிங்கத்தின் கர்ஜனையா...?
இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்துக்கே வெளிச்சம்
நிகழ்ச்சி முழுக்க அவரது ஆட்டம் பாட்டம் ஆர்பாட்டம்..
கர்ஜனை செய்யவேண்டிய சிங்கம் (சூர்யா)..........
பாவம் கம்முனு இருந்தது..
(அண்ணேன்...
உங்க டெங்கூ....
கடி...கவிதையைவிட ..
பெரிய கடி..அண்ணேன்..........
சிங்கூ....கூ....கூ....)
நயன்-அனுஷ்கா காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்.....
அம்மணிகள் இருவரும் ரூ.1 கோடியிலிருந்து ரூ.2 கோடியைத் தாண்டி
ஒரு படத்துக்கு தங்கள் சம்பளத்தை உயர்த்திவிட்டார்களாம்...
முன்பெல்லாம் நடிகைகள் பிழைக்கத் தெரியாமல்...பாவம் தெருக்கோடியில் பரிதவித்தார்கள்...ம்..யாரிடமும் முத்தமாக...சாரி...மொத்தமாககொடுத்து ஏமாறாமல் இருந்தால் சரி...

வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |