google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: ஹைக்கூ-என்னைத் தெரியுமா....?

Wednesday, July 10, 2013

ஹைக்கூ-என்னைத் தெரியுமா....?


உண்மையான ஹைக்கூ கவிதைகள்-5
 
20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஜப்பனீஸ் அமெரிக்க அறிஞரும் மொழிபெயர்ப்பாளருமான கென்னெத் யாசுடா (Kenneth Yasuda) ஜப்பனீஸ் இலக்கியத்தில் டாக்டர் பட்டத்துக்கான ஆய்வுப் புத்தகம்-ஜப்பனீஸ் கைக்கூ:அதன் அடிப்படை இயற்கை, வரலாறு, மற்றும் ஆங்கிலத்தில் சாத்தியக்கூறுகளை, தேர்ந்தெடுக்கப்பட்ட எடுத்துக்காட்டுகளுடன்.(1957)..அனைவராலும் பாராட்டப்பட்டது.

மேலும் அவரது மிளகு-நெற்று (A Pepper-pod) ஹைக்கூ கவிதைத்தொகுப்பு கிளாசிக் ஜப்பனீஸ் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பும் அவரது சில ஆங்கில ஹைக்கூ கவிதைகளும் அடங்கியது.

கென்னெத் யாசுடாவின் தொகுப்பு-ஜப்பனீஸ் கைக்கூ (The Japanese Haiku.) அவரது அனைத்து தொகுப்புகளிலும் இன்றுவரை ஆங்கில ஹைக்கூ கவிதைப் பிரியர்களின் விருப்பத்திற்குரியதாகச் சிறந்து விளங்குகிறது.


ஆனால் அவரது பாஷோவின் ஜப்பனீஸ் ஹைக்கூ கவிதைகளின் மொழிபெயர்ப்பு உண்மையில் 'உலர் வாசிப்பு'என்றும் ஜப்பனீஸ் பாரம்பரிய 5-7-5 அசை அமைப்புடன் இறுதியில் ரைம்(rhyme) சேர்த்து எப்படி ஆங்கிலத்தில் எழுத முடிந்தது...? என்றும் விமர்சகர்களால் கருதப்படுகிறது.

How silent and still!
Into the heart of rocks sinks
The cicada's shrill....................kenneth yasuda 


 என்ன அமைதியும் பொறுமையும் !
பாறைபோன்று  கவிழ்ந்த இதயத்தை 
சிள்வண்டுகள் கீறிச் சென்றன

..............இப்படித்தான் still and shrill என்ற வார்த்தைகளின் rhyme-க்காகச் சொதப்பல் மொழியாக்கம் என்று புலம்புகிறார்கள்.
இப்படித்தான் அந்தக் ஹைக்கூ ....

the stillness!
the voice of the cicadas
sinks into the rocks


அமைதி!
சிள்வண்டுகளின் குரல்
பாறைகள் மீது கவிழுந்தும் 

.......................இருக்கவேண்டும் என்போரும் உண்டு.

யாசுடாவின் ஹைக்கூ கோட்பாடு ஆங்கில ஹைக்கூ கவிதைகள் எழுதப்பட உந்துசக்தியாக இருந்தது.ஆயினும்  அவரது புத்தகங்கள் சிறந்த பரிந்துரை அல்ல என்று விமர்சிக்கிறார் அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் சிறந்த ஹைக்கூ  கவிஞர் என்று அங்கீகாரம் பெற்ற டீ எவேத்ஸ் (Dee Evetts)..
அவரது கவிதைகள் சில.....

Yamagata 1989 உலகக் ஹைக்கூ போட்டியில் சிறப்புப் பரிசும் விருதும் பெற்ற.............

     இருண்ட பிறகு வீட்டில்
     ஜன்னல் வழியாக என் குடும்பம்-
     அந்நியர்கள்


1989-கைக்கூ சங்கம் நடத்திய அமெரிக்கா ஹென்டர்சன் போட்டியில் , இரண்டாவது இடத்தில் விருது பெற்ற அவரது ஆங்கில ஹைக்கூ....

freeonlinephotoeditor
    

     மழைக்குப் பிறகு
     என் காய்கறி பயிர்த்திட்டில்
     கற்கள் புதிய பயிர்கள் 


1990-பாஸ்டன் கைக்கூ சங்கம் நடத்திய சென்றியு (Senryu) கவிதைப் போட்டியில் முதல் இடத்தில் விருது பெற்ற அவரது ஹைக்கூ கவிதை...
freeonlinephotoeditor

     அந்த மலர் போன்ற

     வேலைக்காரி விட்டுச் செல்கிறாள்
     புதுமையான நறுமணத்தின் அழுக்கு.
 


 
இப்படி  டீ எவேத்ஸ் ஆங்கில ஹைக்கூ கவிதைகளில் சீரான அமைப்பும் தூய உணர்வும் இருக்கும் அவரது கவிதைகளில் உருவங்களின் பிரதிபலிப்புகள் மற்றும் நகைச்சுவையும் மிளிரும் அவரது நகைச்சுவை பாணி சென்றியு கவிதைகள் அவருக்குக் கவிஞர்கள் வரிசையில் முக்கிய இடத்தைப் பெற்றுத்தந்துள்ளது.

1998-ல் அமெரிக்கக் கைக்கூ சங்கத்தின் மெரிட் புத்தக விருது அவரது Endgrain என்ற கவிதை தொகுப்புக்கு வழங்கப்பட்டது.


எவ்வளவுதான் நெருக்கமாக 
            நாங்கள் ஒன்றாகப் படுக்கைகளைத் தள்ளினாலும்
                  எங்களுக்கு இடையே இடைவெளி

                                  ..............Endgrain, க். 18

  
எது எப்படியோ அன்று கென்னெத் யாசுடா (Kenneth Yasuda)விதைத்த ஆங்கில ஹைக்கூ (க)விதைகள் இன்று முளையிட்டு வளர்ந்து ஹைக்கூ கவிதைப் பூக்களாகச் சிரிக்கின்றன 

                     ....................................(இன்னும் வரும்) 
 


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1