google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: ஹைக்கூ-புதியவானம்

Thursday, July 11, 2013

ஹைக்கூ-புதியவானம்


உண்மையான ஹைக்கூ கவிதைகள்-6

இங்கே இன்று ஜப்பானில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஆறு  நவீன ஜப்பனீஸ் ஹைக்கூ கவிஞர்களையும் அவர்களது சில கவிதைகளையும் காண்போம்....

freeonlinephotoeditor

ஜப்பனீஸ் ஹைக்கூ அங்கே இங்கே அலைந்து திரிந்து தன்முகத்தைப் பலமுறை மாற்றிக்கொண்டு சமீப காலத்தில் (நவீன ஹைக்கூ) Gendai haiku என்று சிரிக்கிறது..ஜென்டாய்(Gendai) ஹைக்கூ என்றால் நவீன அல்லது தற்கால ஹைக்கூ என்பது பொருள் (இது ஜென் கவிதைகள் அல்ல)
இதற்கும்  சென்றியு ஹைக்கூ கவிதைக்கும் நிறைய வேறுபாடுகள் கிடையாது...இவைகள்-.புதுமைவிரும்பிகள் பாராம்பரிய 5-7-5 என்ற வார்த்தை அசைகளின் கோட்பாட்டை உடைத்தும் இயற்கை பற்றிய கருப்பொருள் இருக்கவேண்டும் என்ற விதியை மீறியும் சுருக்கமாகச் சொன்னால், மனிதர்களைப் பற்றி நெஞ்சில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் நவீன ஹைக்கூ கவிதைகள்..........அன்றாட மனித உணர்வுகளின் பிரதிபலிப்புகள் 

freeonlinephotoeditor
1-யுடா கியோகோ (Uda Kiyoko)- ஹைக்கூ கவிதாயினி...நவீன கைக்கூ சங்கத்தின் தலைவரான இவருக்கு 2002 ஆம் ஆண்டு ஜப்பான் ஹானர் பதக்கம் (Japan Medal of Honor) வழங்கப்பட்டது.
இவரது சில கவிதைகள்.....

கோதுமை -
மரணத்தை உணர்த்தும் வர்ணம்
 

தங்க நிறம் 
.........என்று மரணத்தை எளிமையாக ரசனையாக எடுத்துக்கொள்கிறார்

மீண்டும் கொண்டுவருகின்றன 
காட்டு சாமந்திப்பூக்கள்-
எதிரிகளின் எண்ணிக்கைகளை மட்டுமே 
...............என்று அநாகரீகத்தில் வாழும் மனிதர்களை வசைபாடுகிறார்.


2-ஹோசினாகா புமியோ (Hoshinaga Fumio)-
ஜப்பானில் சமீபத்திய 12 சிறந்த தேசிய gendai ஹைக்கூ கவிஞர்களில்  ஒன்றாகத் தேர்வு செய்யப்பட்ட இவரது கவிதைகளில் பழங்குடியினர் வரலாறும் அக்கறையும் மிளிரும்

மெல்லும் கோந்தை மென்றுகொண்டே
பகையையும் மென்று சாப்பிடுங்கள் -
கோடையின் கிளர்ச்சி

...........ஆத்திரத்தையும் கோபத்தையும் கோடைகால வெப்பத்தின் கொடுமையாக உருவகப்படுத்தி அவரது கவியுணர்வை வெளிப்படுத்துகிறார்.
 

நிலையம் அருகே 
இந்தச் சகாப்த்தத்தின் குழப்பத்தைக் 
குடித்துக்கொண்டு.....
...........என்று அவர் அவரது "Fellow Travelers:" ஹைக்கூ தொகுப்பில் வாழ்வின் பயணத்தில் களைப்படைந்து நிறுத்தத்தில் நிலை தடுமாறிக் கொண்டிருப்போரைக் கண்முன் காட்டுகிறார்  

ஹோசினாகா தனது கவிதைகளில் மனித இயல்புகளின் இருண்ட பக்கங்களையும் அழிவு அரசியல் நிகழ்வுகளையும் இருண்ட முரண்பட்ட நகைச்சுவைகளையும் பிரதிபலிப்பார்.

அந்தக் கேளிக்கை பூங்கா
நாஜிக்கள் நிறைந்திருந்தது -
இலையுதிர்காலம் 

........என்றும் 

பாதப்படைக்கான அரிப்புகள் -
இன்னும் முடியாதது
ஹிட்லர்

.............என்றும் அழிவு அரசியல் நிகழ்வுகளை வார்த்தைகளில் படம் பிடித்தார்  
நவீன ஹைக்கூ கவிதை வடிவம் அவருக்குக் கிடைத்த மிகப்பெரிய சக்தியும் சுதந்திரமும் ஆகும் அவர் பல பரிசோதனைகள் செய்தார் 

தாழை மலர்ந்ததிலிருந்து 
1....2 ...3......எண்ணினால் 
மரணம் வரும் 
............என்று பிறப்பு-இறப்பு தத்துவ ஊகங்கள் இங்கே மலர்கள் மூலமும் கணித எண்ணிக்கை மூலம் வாழ்க்கை நிலைகளையும் விவரிக்கின்றார்.

மூடுபனி உள்ளே
ஐந்து கொடூர கிருமிகள் உள்ளன;
கருப்பையில் உள்ள மிருதுவான கரு
 


..என்று பிறக்கப் போகும் குழந்தைக்கு வெளியே என்ன கொடூரங்கள் காத்திருக்கிறது என்பதைக் காட்டும் மர்மமான ஆழ்வுணர்வு தரும் ஹைக்கூ கவிதை இது.

3-ஒனிஷி யாசுயோ(Ônishi Yasuyo)- 
ஜென்டாய் ஹைக்கூ வரிசையில் சென்றியு கவிதைகள் படைக்கும் கவிதாயினி. ஹைக்கூ எழுதுபவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் Nakaniida Haiku Prize வென்றவர் இவரது கவிதைகளில் நையாண்டித்தனமும் நகைச்சுவையும் மேலோங்கி இருக்கும்
1-என் எலும்புகளும் செர்ரி பூக்களும்
    அடைந்தன முழு மலர்ச்சி 

2-என் பிரேத பரிசோதனை
ஒரு தாவரவியல் விளக்கம் -
அப்போது சந்தேகமின்றி மழைவரும் 


http://i.ytimg.com/vi/AtsRpu43gn4/0.jpg

3-குருட்டு வழியில் 
புரண்டு வரும் காட்சி 
கடல். 
4-பின்புறமிருந்து 
கேட்கும் நீரொலி ஓசையில்
வருகிறது மரணத்தின் செய்தி.

4-பேராசிரியர் ஹசேகவா காய் (Professor Hasegawa Kai)-
20 க்கும் மேற்பட்ட ஹைக்கூ விமர்சன நூல்கள் எழுதிய இவர் ஹைக்கூ கவிதைகளுக்காகப் பல விருதுகள் பெற்றுள்ளார்.பல தேசிய ஹைக்கூ போட்டிகளில்  நடுவராக இருந்துள்ள இவர் யோமியூரி(Yomiuri ) செய்தித்தாளில் இலக்கியம் மற்றும் கலாச்சாரப் பணியில் உள்ளார்  இவரது கவிதைகளில் சில...
1-வரண்டுபோகாத 
ஈரமான தண்ணீர் 
வசந்த நீர் 
..........இந்த ஹைக்கூ கவிதைக்கு ஹசேகவா தரும் விளக்கம்....இந்த உலகில் நீர் எல்லாவற்றையும் ஈரப்படுத்திவிடும்,ஆயினும் ஈரப்படுத்த முடியாதது ஓன்று உண்டென்றால் அது நீர் மட்டுமே (Hasegawa comments.
Almost anything in this world can be wetted by water. However, the one thing that cannot be wetted in this way is water itself.) என்ன நண்பர்களே! தலை சுற்றுகிறதா...? ஆனால் வசந்த நீருக்கு மட்டும் அது நீராக இருந்தாலும் ஈரப்படுத்தும் தகுதி உண்டு என்கிறார்....இப்போது கொஞ்சம் தெளிவு நிறையக் கலங்கள்

2-இருண்ட கோடை 
செந்தலை நாரையின் தாலாட்டு 
நான் போகும் வழியெங்கும் 
3-ஒளிவீசும் கோடை சூரியன் 
உள்ள இந்த உலகில் 
ஒரு வண்ணத்துப்பூச்சி மறைகிறது
.............இங்கே வானவில்லை பற்றிச் சொல்லியிருப்பாரோ..?
4-வெட்டப்படும் மூங்கில் 
நிலவு ஒளி .
வேலைநிறுத்தம் 
.....இப்படி இந்த நவீன ஹைக்கூ கவிஞர்கள் எதையோ ஒன்றை நினைத்து நையாண்டியாகச் சொல்வார்கள் அதீத ஈர்ப்புடன் படித்தால் மட்டுமே நையாண்டிக் கவிதைகள் கொஞ்சம் புரியும் 

பேராசிரியர் சுபௌசி நேண்டேன்(Professor Tsubouchi Nenten)-  
Bukkyo பல்கலைக்கழகத்தில் பணியில் இருக்கும் இவர் பல புதுமைகளைப் புகுத்திய ஹைக்கூ கவிஞர். இவரது பார்வையில் ஹைக்கூ அப்பாவித்தனமான குழந்தைப் பேச்சு....உடைந்த மொழி (மழலை...?). இவரது கவிதைகளில்  சில............
1-அம்மாவின் இறப்பு
மூலிகை மருத்துவம் 
சிதறியது வசந்த காற்று  
2-சேற்றில் புரளும் நீர்யானை 
உண்டாக்கிய தீக்காயங்கள்-
பனிக்கட்டி துகள்கள் 


5-டாக்டர் யாகி மிகாசோ (Yagi Mikajo)-கண் மருத்துவரான இந்த ஹைக்கூ கவிதாயினி தன் அனுபவங்கள் மூலம் சமகால ஹைக்கூ  கவிதைகளுக்குப் புதிய பரிமாணங்களை வழங்கினார்.இவரது கவிதை தொகுப்புகள் இவரது அனுபவங்கள், பெண்களின் பிரச்சனைகள், கலாச்சாரப் போராட்டம்,...இவைகளின் பிரதிபலிப்புகள் ஆகும் இவரது the scarlet mushroom என்ற ஹைக்கூ பிரபலமானது......
இன்னொரு கவிதை........... 
ஒரு குழந்தையுடன் 
அமைதியான தருணங்கள் 
நட்சத்திரங்கள் பெருக்கெடுக்கும் 
.....என்ற ஹைக்கூ கவிதைக்கு kuni_san என்பவர் வரைந்த கலைவேலைப்பாடுதான் இந்த ஓவியம்.

இவைகளிலிருந்து நாம் அறிவது....ஹைக்கூ கவிதைகளின் பாராம்பரியம் பூர்வீகம் ஜப்பனீஸ் மொழி...ஆயினும் அங்கேயே இன்று அது பல பரிணாமங்கள் அடைந்து முழுச் சுதந்திரமாக உலா வருவதை அறிகிறோம்
என் பார்வையில்.... நாம் உணரும் நிகழ்வு எப்படி எழுதப்படுகிறது என்பதைவிட எப்படி வெளிப்படுத்தப்படுகிறது என்பதே முக்கியம்

இந்தக் கவிதைகளைப் படித்தபோது என்னுள்ளும் சில கவிதைகள் பூத்தன...............


அந்நியன்-
என் மீது யாரும்
எச்சில் உமிழாதீர்கள் 
அரசியல்வாதி 





ஆசை-
என் தாய் தந்தையிடம்
நானும் ஒரு மிருகம்-
நாய்க்குட்டி





கோபம்-
அடிக்கடி என்னுள் மலரும்
மலர்ந்த வேகத்தில் உதிரும்
கடுப்பூ
 

                       


                        .........................(இன்னும் வரும்) 

freeonlinephotoeditor  
 (குறிப்பு-நண்பர்களே நீங்களும் உங்கள் எண்ணங்களை முடிந்தால் இங்கே கருத்துப் பெட்டியில் ஹைக்கூ கவிதையாக   எழுதிவையுங்கள் அவை என் அடுத்த பதிவுக்கு பயன்படலாம்....
எதைப் பற்றி எழுதுவதா....?
நீங்க கேட்டது...பார்த்தது...உணர்ந்தது அதனால் உங்கள் இதயம் என்ன சொல்லுதோ அதை எழுதுங்கள்.
மறந்தீடாதீங்க....நன்றி)

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1