இவர்கள் சொல்வது போல் சிங்கம்-2 படத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பு ஓவர்-ஆக்டிங்கா....? கொஞ்சம் நடிங்க பாஸ்...? என்ற நடிகர்கள் மத்தியில் அவரது நடிப்பு...கொஞ்சமா நடிங்க பாஸ்...என்று கேட்க தோன்றுகிறதா...?
சிங்கம்-2 பற்றிய பத்திரிகைகள்,வலைதளங்கள்,பதிவர்கள் ட்வீடர்கள் முகநூல் பக்கங்கள் அனைவரும் படத்தை பாராட்டினாலும் நடிகர் சூர்யாவின் நடிப்பை நிறையவே கிண்டல் செய்கின்றார்கள் இங்கே அவரது நடிப்பை பற்றிய சில நக்கல்களையும் நையாண்டிகளையும் காண்போம்.......
படத்துக்கு தலைப்பு சிங்கம் என்று வைத்துவிட்டதாலோ என்னமோ, சண்டைக் காட்சிகளிலெல்லாம் சூர்யா பாய்ந்து பாய்ந்து தாக்குகிறார். சிங்கம் நகங்களால் கிழிப்பது போல கிராபிக்ஸ் வைத்திருக்கிறார்கள். இன்னும் ஓரிரு சதவீதம் ஓவராகிப் போயிருந்தால் கூட, ரசிகர்கள் சீரியஸ் காட்சிகளிலெல்லாம் சிரித்து வைத்திருப்பார்கள்........என்று ONE INDIA நக்கல் அடிக்கிறது
அதேநேரம்.....ராதாரவியுடன் போனில் பேசும்போது மட்டும் ஒரே ஒரு காட்சியில் சற்று அமைதியாக இருக்கிறது சூர்யாவின் வேகம். மற்ற நேரமெல்லாம் ராக்கெட்தான்!..............என்று 4தமிழ்மீடியாவுக்காக அபிஷேக் பாராட்டுகிறார்.
கஞ்சி போட்ட துணிக்குப் போட்டியாக விறைத்த உடம்போடு அவர் எகிறி அடிக்கும் அடி ஒவ்வொன்றும் செம வெய்ட்டு. ஆனால், அவருக்கும் வாய் வலிக்க, நமக்கும் காது வலிக்க... உறுமிக்கொண்டேடேடேடே இருப்பதுதான்... ஸ்ஸ்ஸப்பா! ..........என்று அங்கலாயிக்கிறது ஆனந்த விகடன் சினிமா விமர்சனம்
பஞ்ச் என்ற பெயரில் சூர்யா அப்பப்ப எதையோ கத்துகிறார். அதுக்கு எக்கோ எஃபெக்ட் வேற போட்டுவிட்டுட்டாங்க.. ஐயகோ..!! “ஓடுமீன் ஓடி உறுமீன் வரும்வரைக்கும்...” சூர்யா சொல்ல பக்கத்தில இருந்த நண்பன் “ என்னடா.. இப்ப பஞ்ச் எங்கிற பேரில பழமொழி எல்லாம் சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க: என்றான்..........என்று விமர்சனம் வித்தியாசமான பார்வையில் சிறகுகள் மதுரன்
சூர்யாவின் நடிப்பை எந்த விதத்திலும் குறை சொல்ல முடியாது… அவருக்கு கொடுத்த போலீஸ் பணியை மிக நேர்த்தியாக செய்திருக்கிறார். என்ன… சாதாரண விஷயத்திற்கு கூட முகத்தை கடுமையாக வைத்துக் கொண்டு பல்லையும் கடித்துக் கொண்டே துப்பாக்கியை தூக்கி கொள்வதை மட்டும் குறைத்திருக்கலாம்…என்று அட்வைஸ் பண்ணுகிறார் ஆந்தை ரிப்போர்ட்டர் கோடாங்கி
போலிஸ்னா மிடுக்குதான். சிங்கம் முதல் பார்ட்டில் அந்த மிடுக்குதான் நிமிர்ந்து உட்கார வைத்தது. ஆனால் அதுக்காக மனிதர் இந்தப் படம் முழுவதுமே கஞ்சி போட்டு காயவைத்தவராய் திரிகிறார். பாத்ரூம் கூட இப்படித்தான் போவாரோ என பயப்படும் அளவுக்கு....என்று கலாய்க்கிறது SOUND CAMERA ACTION சினிமா வலைதளம்
இதோ மனதில் உறுதிவேண்டும் பதிவர் மணிமாறன்.....படம் முடிந்து வெளியே வரும்போது " தோ..டிக்கெட் கொடுக்கிறானே இவன தூக்கி உள்ளே போடு..." ," தோ.. பப்ஸ் விக்கிறானே அவன தூக்கி லாக்கப்புல போடு..","படம் பாத்துட்டு வர்றவங்க ஒருத்தர் விடாம எல்லோர் மேலயும் லத்திசார்ஜ் பண்ணு....பாக்கிறிய..பாக்கிறியா..ஓ....ய்ய்.." னு கத்தனும் போல இருக்கு.படம் முழுவதுமே சூர்யா இதைத்தான் செய்திருக்கிறார்.....என்று அவரால் முடிந்ததை எழுதியுள்ளார்.
ஆனால் எனது பார்வையில்....
நாம் தங்கப்பதக்கம் சினிமாவில் நடிகர்திலகத்தை எஸ்.பி.சௌத்திரியாக கம்பீரத்தையும் கடமை உணர்வு மிக்க உயர் போலிஸ் அதிகாரியாகவும் பார்த்திருக்கிறோம் அதில் அவர் குடும்பத்தலைவராகவும் பாசமுள்ள தந்தையாகவும் அதிக நேரம் நடிக்க காக்கிசட்டையில் வரும் போது மட்டுமே விறைப்பாக வருவார்.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் போலீஸ் நடிப்பு படத்தில் பாதிநேரம் ரகசியமாகவும் அதே நேரம் இதயக்கனி நாயகிகளுடன் காதல் செய்வதிலேயும் காலத்தைப் போக்குவார்...கிளைமாக்ஸ் காட்சியில்தான் நிறையப் படங்களில் அவர் போலிஸ் அதிகாரி என்பதை காட்டிக்கொள்வார்
உலகநாயகர் கமலஹாசன் நிறையப் படங்களில் போலிஸ் அதிகாரியாக நடித்தாலும் அவரது நடிப்பு காக்கிச்சட்டை படத்தில் வருவது போன்று காதலும் காவலும் என்ற கதையாகத்தான் இருக்கும்
ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மூன்று முகம் படத்தில் ஒருமுகமாக போலிஸ் அதிகாரி வேடத்தில் விறைப்பாக தூள் பண்ணுவார்...கொஞ்ச நேரமே....ஆங்...நம்ம கருப்பு எம்ஜியாரும் நிறைய படங்களில்...அதிலும் அவரது போலீஸ் நடிப்பு புலன் விசாரணையில் செம கலக்கல்..அதுவும் கொஞ்ச நேரமே
இளைய தளபதி விஜய் பாதி நேரம் அசினுடன் கொஞ்சிக் குலாவிக்கொண்டு மீதி நேரம் மின்னலென பாய்ந்து கலக்குவார் போக்கிரியில்...ஹி..ஹி...தல அஜித்தின் மங்காத்தா போலீஸ் நடிப்பு ரொம்ப சிரிப்பு...திரிசாவுடன் குடியும் குடித்தனமாக... ஹாய்..விக்ரம்...போலீஸ் வேடத்தில் சாமியாட்டம் ஆடினாலும் அதுவும் அம்மணி திரிஷாவுடன் பாதிநேரம் ஓடிப் போயி கல்யாணம்தான் கட்டிக்கலாமா....? என்ற்படித்தான் இருந்தது.
இவர்களது அரைகுறை போலி(ஸ்) நடிப்பு சிங்கம் 2 படத்தில் சூரியாவின் முழு நேர போலீ...லீ...ஸ் நடிப்போடு ஒப்பிடும் போது கொஞ்சமல்ல நிறையவே அதிகமாகத் தெரிகிறது..............
ஆனால் சிங்கம் படத்தைவிட சிங்கம்-2 வில் நடிகர் சூர்யா ஆரம்பம் முதல் கடைசி வரை காவல் அதிகாரியாக கம்பீரம் காட்ட வீராப்பும் தோரணையும் ...நடிப்பிலும் பேச்சிலும் ...அதற்கு ஏற்றாற்போல் அவரது முகபாவனை...நடை...ஆனால் படம் பார்ப்பவர்களுக்கு பார்த்துக்கொண்டு இருக்கும் வரை எந்த சந்தேகமும் வெறுப்பும் வராத நடிப்பு...ஆனால் படம் முடிந்தப் பிறகுதான் நமக்கு யோசனை வருகிறது இப்படி நிஜத்தில் ஒரு போலிஸ் அதிகாரி இருக்க முடியுமா...? நடிப்பு ரொம்ப விறைப்பு....கொஞ்சமா நடிங்க பாஸ் என்று கேட்கத்தோன்றுகிறது.
இப்படி நிறைய சொல்லிக்கொண்டு போகலாம் இன்னும் வேண்டுமெனில் இதையும் பார்வையிடுங்கள்
சிங்கம் 2-சில ட்வீட்டர்களின் புலம்பல்கள்l
(இவர்களின் விமர்சனங்கள் ஒருவகையில் சிரிப்புதான் வருகிறது...ஒரு படத்தில் வெண்ணிற ஆடை மூர்த்தி மருதமலை மாமணியே....என்று உச்ச கட்டையில் பாடிக்கொண்டு கச்சேரி செய்யும் போது போது எதிரில் அமர்ந்து இருந்து வடிவேல் சைகையால் செய்யும் காமெடி போன்று...........)
ஆனால் நமது வலைப்பதிவில் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவோ..........
சிங்கம்-2 வெற்றிக்கு காரணம் நடிகர் சூர்யா என்று தெரிவிக்கிறது....
சிங்கம்-2 வெற்றிக்கு யார் காரணம்?
இயக்குனர் ஹரியை விடவும் படத்தின்திரைக்கதையை விடவும் அதிக வாக்குகள் பெற்று நடிகர் சூரியாவும் அவரது கர்ஜனை மிகுந்த நடிப்பே
சிங்கம்-2 படத்தின் வெற்றிக்கு காரணம் என்று தீர்பளித்த சினிமா வாக்காளப் பெருமக்களுக்கு நன்றி
thanks-YouTube-by vikatanwebtv
(ஏலே....நாட்டாமை தீர்ப்பை மாத்துல.... என்று யாரோ கர்ஜிப்பது காதில் விழுகிறது...அண்ணேன் இது நம்ம அரசியல் தேர்தல் மாதிரி இல்ல...அப்புறம் நம்ம ஊர் மரத்தடி பஞ்சாயத்தும் இல்லிங்கண்ணா....நிறைய பேரு படிச்சுபுட்டு கொஞ்ச பேரு வாக்களித்தாலும் இது கூகுள் சர்வரில் இணைக்கப்பட்ட நியாயமான கருத்துக்கணிப்பு....நன்றி)
காணத்தவறாதீர்.......................
கோபிசந்த்-டாப்ஸி நடிக்கும்
சாகசம் (தெலுங்கு)
சினிமா விமர்சனம்
http://parithimuthurasan.blogspot.in/2013/07/sahasam-tamilreview.html
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |