google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: கணினி! நீ என் நண்பன்டா!

Saturday, July 27, 2013

கணினி! நீ என் நண்பன்டா!

http://i1.sndcdn.com/artworks-000042573878-ooaun9-t500x500.jpg?cc07a88  
(குறிப்பு-இது கணினியுடன் எனக்கு ஏற்பட்ட  பரிச்சயம்..உறவு பற்றிய கொஞ்சம் சுவை நிறைய அறுவை  நிறைந்த நீ..ள..மா...ன...என் அனுபவப் பதிவு)

ஆரம்பத்தில் குத்துப்பாட்டோடு அறிமுகமாகும் நம் தமிழ் சினிமா நாயகர்கள் மாதிரி நானும் ஒரு கவிதை போட்டு..... 

freeonlinephotoeditor

அட..கணினியே!
நீ
பெண் என்றால் 
அறிவாளியான என்னை
முட்டாளாக்கிய மூதேவி!

உன்னை முதல் முதலாக
என்று பார்த்தேனோ
அன்றிலிருந்து பறிபோனது
என் மனது மட்டுமல்ல
என் மூளையும்தான்

நீ
ஆண் என்றால்
என் அறிவைத்
திருடிக்கொண்ட
திருட்டுக் கம்முனாட்டி!

இன்று நான் ஒரு கடனாளியாக
1...2....3....கூட்டுவதற்கும்
உன் தயவை நாடி நிற்கிறேன்
என் எழுதுகோல்
எழுதுபவைகள் எல்லாம்
கோழிக்கிண்டலாக....

(அண்ணேன்...போதும் உங்க அனுபவத்தைச் சொல்லுங்க 
எங்களுக்கு நிறைய வேலை இருக்கு...)

http://ecx.images-amazon.com/images/I/51fvxDzSN5L.jpg

அப்போது வருடம் 1995 என்று நினைவு.கணினி இந்தியாவில் ஓர் அதிசயப் பொருளாகவும் சாப்ட்வேர் இஞ்சினியர்கள் ஏதோ அறிவு உலகத்திலிருந்து வந்தவர்கள் போலவும் நாட்டு நிலவரம் அப்போதே அதன் விலையோ சப்ப கணினி ரூபாய்  1 லட்சத்திற்கு மேல் இருக்கும்...ரொம்ப அபூர்வமாகவே சில மிகப்பெரிய அரசு..தனியார் நிறுவனங்களில் உபயோகத்தில் இருக்கும் அதுவும் CPU வெளியே தெரியாது

நான் வேலை செய்யும் நிறுவனத்தின் முதலாளி (அப்போது இப்போது இருப்பதைவிடப் பாதி வளர்ச்சியடைந்த நிறுவனம் அது)  வாரத்திற்கு ஒரு நாள் அவரது தனியறையில் எங்களுடன் வியாபாரத்தைப் பற்றிக் கலந்துரையாடுவார்.

அப்படி ஒரு நாள் அவரது அறையில் அவரது மேசை மீது  ஒரு கணினியை முழுவதுமாகக் கண்டேன்...அட.. எல்லோரும் மானிட்டரை அவர்கள் பக்கம் அவர்கள் பார்க்க ஏதுவாக வைத்திருப்பார்கள்..இவரோ வித்தியாசமாக இவரைப் பார்க்க வருபவர்கள் பார்க்கும் படி வைத்திருந்தார்...அதில் உள்ள ஸ்கிரீன் சேவரில்  அவரது புகைப்படம் விதவிதமாக....

தொடர்ந்து பத்துக் கலந்துரையாடல்களில் அதையே பார்த்து வெறுப்படைந்து..அவரிடம் கேட்டேன் "முதலாளி..எல்லோரும் கம்ப்யுட்டர அவுங்க பக்கம்தான வைச்சிருப்பாங்க..நீங்க எங்க பக்கம் திருப்பி வச்சிருக்கிங்க..ஏன் இப்படி...?" என்று.
அதற்கு அவரோ சிரித்த படி..."எல்லாம் ஒரு பந்தாவுக்குத்தான்..நம்மளப் பார்க்க பெரிய கம்பெனிகாரங்க வருறாங்க..அவுங்க முன்னாடி ஒரு ஷோ காட்டத்தான்" என்று உண்மையைச் சொன்னபோது....

http://l1.yimg.com/bt/api/res/1.2/fQUvWhOKlzrSIHMGK5G03A--/YXBwaWQ9eW5ld3M7cT04NQ--/http://media.zenfs.com/fr_FR/News/Pampapress/buzz1.jpg
அப்போது எங்கள் நிறுவனத்தில் விற்பனை ரசிது (bill),வரவு-செலவு கணக்கு... அனைத்தும் நோட்டுப் புத்தகத்தில் கையில் எழுதுவதாகத்தான் இருந்தது..அதில் நிறைய அசௌகரியம்..உ.ம்...ஆங்கிலப் புத்தாண்டு தினத்தன்று (JAN 1)  விற்பனை எவ்வளவு என்பதை  ஒரு மாதம் முடிந்தாலும் எங்களால் கணக்கிட கடினம் அதனால் எனது அறிவு மண்டையில் மின்னலடித்தது..எங்கள் கிளையில் கணனிமூலம் விற்பனைப் பில் போட முதலாளியிடம் அந்தக் கணனியைக் கேட்டேன் "அதுலாம் நம்ம ஸ்பீடுக்குச் சரிப்படாதப்பா..அப்புறம் கணணி கையாளும் அளவுக்கு இங்கே வேலையில் யாருப்பா இருக்கா...?"  என்று மறுத்தார்...தொடர்ந்து எனது இடைவிடாத நச்சரிப்பு காரணமாக..சரி எடுத்துட்டுப் போ...என்று சொன்ன அடுத்த நிமிடமே அந்தக் கணணியை அள்ளிக்கொண்டு வந்தேன்.

உடன் எனக்குத் தெரிந்த சாப்ட்வேர் நண்பரை வரவழைத்து..எங்கள் வியாபார நிறுவன வேலைக்குப்  பாதிப்பு இல்லாமல் இரவு நிறுவனம் மூடியப் பிறகு தினமும் நள்ளிரவு 2 மணிவரை பத்துநாளில் அவருக்கு என் தேவைகளைச் சொல்லி அருகில் இருந்து ஒரு பில்லிங் சாப்ட்வேரை உருவாக்கினால்...அது முழுக்கக் கணினி மௌஸ் கொண்டு செயல் படுத்துவதுபோல் இருந்தது...

அப்போது எனக்கும் மௌஸ் செயல்பாடு கைவசப் படவில்லை...நான் ஒரு பக்கம் நகர்த்தினால் அதன் அம்புக்குறி  வேறு பக்கம்  ஓடும்...ரைட்-கிளிக் லெப்ட்-கிளிக் பெரிய தலைவலியாக இருந்தது...மீண்டும் அவரிடம் சொல்லி கீபோர்ட் மட்டுமே உபயோகித்து எளிதாக ஒரு சாப்ட்வேர் செய்ய...இன்னும் இருபது இரவுகள் தூக்கம் தொலைத்து... அப்பாடா...கண்டுபிடித்தார் MS-DOS MODE-ல் ஒரு செயல்பாடு...  

http://sp0.fotolog.com/photo/48/61/47/extracktor_4ever/1181769772_f.jpg

அது கணினி அறிவு அறவே இல்லாத அனைவரும் கணணியை உபயோகித்துப் பில் செய்ய எளிதாகவும் விரைவாகவும் இருந்தது..அப்போது வந்த புத்தாண்டு விற்பனை நிலவரத்தை என் முதலாளி மணிக்கு ஒருமுறை கேட்கும்போதும் துல்லியமாகச்  சொன்னபோது அவர் துள்ளிக் குதித்தார்   எங்களுக்கும் அன்றைய விற்பனை கணக்குகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள உதவியாக இருந்தது....பிறகு என் முதலாளி அவரது அனைத்து கிளைகளுக்கும் இது போன்று கணினிமூலம் பில்லிங் செயல்படுத்தினார்.

http://www.animaatjes.de/cliparts/computer/nerd/173039.jpg
இதனால எனக்கு எப்படி  கணினி அறிவு வந்தது...?
எனக்குத்தான் கற்பூர மூளையாச்சே...கணினி சாப்ட்வேர் நண்பருடன் ஒருமாதகாலம் உடனிருந்து அவரது செயல்பாடுகளைக் கவனித்தேன் அல்லவா அவை அப்படியே என் மண்டையில் ஏறிவிட்டது.

அதற்குப் பிறகு எங்கள் நிறுவனம் மிகப் பெரிய வளர்ச்சியடைந்து..கணக்குப் பிரிவு என்று அவரது அலுவலகத்தில் தொடங்கப்பட்டு... இன்டர்நெட்வுடன் இணைக்கப்பட்டு TOLLY-யுடன் இணைந்து முழுக்கக் கணினிமயமானது 

இப்போது  உலகளவில் பிரசக்தி பெற்ற SAP நிறுவனத்துடன் இணைந்து பலகோடிகள் செலவு செய்து இங்கே சென்னையில் ஒரு வாடிக்கையாளர் ஒரு கிளையில் பில் செய்தால் கன்னியாகுமரியில் அவர் போகாமலே அவர் சொல்லும் விலாசத்தில் பொருள் டெலிவரி செய்யும் நிலையும்..அதேபோல் தமிழ்நாட்டின் எந்த மூலையில் உள்ள கிளையில் பில்செய்த அடித்த நிமிடமே சென்னை தலைமையகத்திலிருந்து அதைத் தெரிந்துகொள்ளும் வசதியும் வந்துவிட்டது  ஆனாலும் அன்று எனது ஐடியாவில் நண்பருடன்  செய்த எளிய  பில்லிங் முறை சில மாற்றங்களுடன்  இன்றும் எங்கள் நிறுவனத்தில் நடைமுறையில் இருக்கிறது..

http://www.picgifs.com/clip-art/computer/nerds/clip-art-nerds-640973.jpg
இப்போது எல்லாமே மாறிவிட்டது...ஆனால் நான் மட்டும் மாறவில்லை  எனது கணினி அறிவுப் பசியும் தீரவில்லை..எனக்கு என்று தனியாக ஒரு கணினி வைத்து எனது கிளையின் செயல்பாடுகளை அதில் லிங்க் மூலம் கண்காணிக்கிறேன் இன்று எனது தலைமையில் நூறு பேருக்கும் மேல் வேலைசெய்கிறார்கள்....உ.ம். இந்த வருட ஜனவரி-1 விற்பனை ஒரே நாளில் ஒரு கோடி ருபாயுக்கும் மேல்..அதை உடனுக்குடன் தெரிந்துகொள்ளவும் கணக்குகளில் எந்தக் குறைபாடும் இல்லாமல் நடைபெறவும் வசதி...நினைத்துப் பார்த்தாலே ஆச்சரியமாக உள்ளது.

http://www.picgifs.com/clip-art/computer/nerds/clip-art-nerds-491966.jpg

என்னிடம் பிரத்தியேகமாக ஒரு கணினி கிடைத்ததால் அதைவைத்து  சென்னை ஹிக்கின்பாதம்ஸ் சென்று சில புத்தகங்களை வாங்கி...ACCESS  C++ போன்று அனைத்தும் தெரிந்துகொண்டு... எனது வேலையை எளிமைப் படுத்திக் கொண்டேன் இன்று நானும் ஒரு கணினி நிபுணர் போல் எந்தத் தவறு நடந்தாலும் நானே சரிபடுத்துகிறேன்  இப்போதைய இன்டர்நெட் வசதியில் இவை எல்லாம் சாத்தியமாகிறது.

https://si0.twimg.com/profile_images/3417155628/f579132314315cd208d2df3dad2cc932.jpeg
நான் வலைப்பூ ஆரம்பித்தது எப்படி என்றால்.........
காலை 9-மணிக்கு துவங்கும் எனது வேலை இரவு 10 மணிவரை இந்தக் கணினியுடன் மாரடித்து ஒரு கட்டத்தில் அதைப் பார்த்தாலே வெறுப்பாகிவிட்டது...ஒருமுறை மயக்கம் வருவது போல் இருந்ததால் தெரிந்த மருத்துவரிடம் போனேன்...அவரோ நீ பார்க்கிற வேலைக்கு மயக்கமென்ன..இப்படியே ஒய்வு இல்லாமல்  வேலை செய்தால் நீண்ட மயக்கம் (மரணம்) விரைவில் வரும்...மனசுக்குப் பிடித்த காரியங்களில் மனதை செலுத்தி ரிலாக்ஸ் செய்து கொள் என்ற அறிவுரையின் படி...
அலுவலக வேலைதவிர எனக்குக் கிடைக்கும் சிறிது ஒய்வு நேரத்தில் YOUTUBE-ல் படம் பார்ப்பது...விடியோ கேம் விளையாடுவது... வலைத்தளங்கள் வாசிப்பது என்று மீண்டும் கணினி என்னுள் அயிக்கியமானது 

http://www.picgifs.com/clip-art/computer/computers/clip-art-computers-070264.jpg
அப்படி வாசிக்கும் போது என்னுள் எழும் உணர்வுகளை சில தளங்களில் எழுதிப் பார்த்தேன் -ஒரு மலர் உதிர்ந்தக் கதை என்ற முதல் கவிதை  ஒரு வலைதளத்தில் வெளிவந்து சிலர் கருத்திட்டார்கள்..
அது என்னுள் புகைந்து கொண்டிருந்த எழுத்து ஆர்வத்தை எரியவைத்தது...அப்படியே இன்னொரு  தளத்தில் தொடர்ந்து எழுதினேன்..அங்கே உடனுக்குடன் வெளியிட்டார்கள் நிறையக் கருத்திடும் நண்பர்கள் கிடைத்தார்கள்..அங்கேயும் வினை ஆரம்பித்தது சிலர் கருத்தால் தாக்கவும் அந்த வலைதளமும் சில விதிமுறைகள் சொல்லி என்னையும் என் எழுத்துச் சுதந்திரத்தையும் சிதைக்க ஆரம்பித்தது...

https://sphotos-a.xx.fbcdn.net/hphotos-frc1/p480x480/396128_366085416751326_1879082927_n.jpg
எனவே நானாக யார் தயவுமின்றி ஒரு வலைப்பூ (இப்போது வாசிக்கின்றீர்களேஇதுதான்) ஆரம்பித்து..அதற்குப் பிறகு சில தமிழ் ஆங்கிலம்  வலைதளங்கள் உதவியுடன் அதைச் சீர்படுத்தி...
சொல்லப்போனால்...என் வாழ்வின் பெரும்பகுதியை   இந்தக் கணினி 18 ஆண்டுகளாக விழுங்கிவிட்டது இன்னும் தொடர்கிறது.....
பதிவின் ஆரம்பத்தில் நீங்கள் படித்தது என் ஆதங்கம் ஆனால் இது நிஜமல்ல... ஒரு சொகுசு சிறைக்குள் அடைத்துகிடந்த எனக்கு இன்று ஒரு வலைப்பூ ஆரம்பித்தப் பிறகு நிறைய நண்பர்கள்...

http://www.orkugifs.com/en/images/i-love-my-online-friends_2541.gif

அத்தனையும் வாடாத..நறுமணம் வீசும்  வலைப்பூ நண்பர்கள்.. அத்தனையும் மலர்ந்தது இந்தகணினி பூந்தோட்டத்தில்தான் (வலைப்பூ வைத்திருக்கும் அனைவரும் நண்பர்களே! யாரையும் இங்கே பெயர் குறிப்பிட்டு அப்புறம் எதிர்களை கூட்டிக்க கூடாது அல்லவா...?) அதனால்...........  கணினி! நீ என் நண்பன்டா!...நிறைய நண்பர்களைத் தந்த நண்பன்டா,,,,இதுதான் நிஜம்
     

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1