google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: மரியான்-வெற்றிப்படமா? (கருத்துக்கணிப்பு)

Monday, July 22, 2013

மரியான்-வெற்றிப்படமா? (கருத்துக்கணிப்பு)

(குறிப்பு-இது உர்ர்....உர்ர்...மரியானைக் கடித்து குதறும் விமர்சனப் புலிகளின் உறுமல்கள்...ட்வீட்டர்கள்,பதிவர்கள்..பார்வைகள்    நிறைய நீளமான (எனக்கு) சிரிப்புப் பதிவு.)

மரியான் படத்தில் வயிறு நிரம்பிய இரண்டு சிறுத்தைப் புலிகள் கொலைவெறிப் பசியில் உள்ள மரியானைச் சுற்றிச் சுற்றி வரும்..ஹி...ஹி.... ஆனால் மரியானைப் பார்த்து பயந்து (பக்கத்திலப் போனா விழுங்கிடுவாரோ...? என்று நினைத்தனவோ...?)  ஓடிவிடும்   மரியானும் அவைகளிடமிருந்து தப்பிவிடுவார்..ஆனால் இந்த விமர்சனப் புலிகளிடமிருந்து அந்தோ...பாவம் அவர் தப்பிக்க முடியவில்லை   

மரியான் படத்திற்கு இரு வேறுபட்ட  விமர்சனங்கள்  ஒரு கூட்டம் உலகத்தரத்தில் ஒரு தமிழ் திரைப்படம் என்றும் இன்னொரு கூட்டம் அவ்வவ்...என்றும் அலப்பறையும் செய்கின்றார்கள்


இப்போதெல்லாம் படம் பார்ப்பவர்களை விட படத்துக்கு விமர்சனமும் கருத்தும் எழுதுபவர்கள் அதிகம் ட்வீட்டர்,முகநூல்,பிளாக்கர்... என்று  இவ்வளவு பேர் விமர்சனங்கள் எழுதுகிறார்களே அவ்வளவு பேரும் படம் பார்த்திருந்தாலே அந்தப் படம் BOX OFFICE வெற்றியாகும்...ஆனால் நிலவரம் கலவரம்

http://www.yespunjab.com/images/bollywood/Raanjhanaa-Bol.jpg

என்னடா இந்த மரியானுக்கு வந்த சோதனை....? தனுஷ் பாலிவுட்டில் அசால்ட்டா சிக்ஸ்செர் அடிச்சாரு...ராஞ்சனா சோனம் கபூர் புண்ணியத்தில்...அம்மணியும்  

குந்தன் மரியானாகிவிட்டான்..
குட் லக்
நீயொரு கலக்கல் நட்சத்திரம்........என்று ஹைக்கூ கவிதை  கீச்சியது.   

Sonam Kapoor@sonamakapoor 
Kundan becomes mariyaan today! Break a leg @dhanushkraja , you are a rock star!!

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கும் வாழ்த்துக்கள் குவிந்ததாக....  
"மரியான் இசைக்கு கிடைத்த கருத்துக்களாலும் மதிப்புகளாலும் நான் அதீத சிலிர்ப்பும் மகிழ்ச்சியும் அடைந்தேன்...எல்லாப் புகழும் இறைவனுக்கே!" என்று தனது ட்வீட்+முகநூலில் சொல்கிறார்...


A.R.Rahman @arrahman 
I am super thrilled and happy with the kind comments on Maryaan songs and score...
... and the success of the movie... Ellapugazhum irraivanukke...!

அதானால நான் ஒரு முடிவுக்கு வந்து அந்த மால் தியேட்டர் வாசலில் இவ்விடம் சினிமா கிளி ஜோதிடம் சொல்லப்படும் என்று ப்ளெக்ஸ் பேனர்வுடன்  குந்திக்கிட்டு இருக்கிற சினிமா கிளி ஜோதிடரிடம் ஆருடம் கேட்க போனேன்.........



அந்த கிளிஜோதிடரோ-கிளியே... பச்சக் கிளியே....மரியான்பேருக்கு நல்ல சீட்டு ஒன்னு எடுத்து ஈசிட்டு போ.....ஆங்..என்று சொல்ல....அந்தக் கிளியோ கிலி பிடித்தது போல் விழித்தது..கூண்டை விட்டு வரமறுத்தது...நானோ என் மொபைல் போனில் இருந்த தனுஷ் படத்தைக் காட்டினேன்...ம்கூம்..ஆனால் பார்வதி மேனன் படத்தைக் காட்டியதும் பாயிந்து வந்து எடுத்தது...ஐந்து  அதிஷ்ட சீட்டு அட்டைகள் (எல்லா கிளியும் ஒன்னுதான எடுக்கும் இது ஏன் அஞ்சு எடுத்துச்சு..? ஆண் கிளியாக இருக்குமோ...? அச்சச்சோ...பார்வதி கிளி மீது பச்சைக் கிளிக்கும்  ஜொள்ளு........? கிழிஞ்சது கிருச்ணகிரி!)

MARIYAAN

அந்த கிளிஜோதிடர் திறந்த முதல் அட்டையில் கேமரா  படம் இருந்தது...அதற்கு அவரோ இது ஒளிப்பதிவு உலகத்தரம் A-சென்டரில் சூப்பரா ஓடும்ப்பா என்றும் இரண்டாவது அட்டையில்  கீபோர்ட் படம் இருந்தது...அடடா...இது ஒலிப்பதிவு... B-சென்டர்ர்ர்ரர்...படம்ப்பா என்றும் மூன்றாவது அட்டையில் தனுஷ் படம் இருந்தது...அதனால் இது C-சென்டரில் ஓடும்படம்ப்பா என்றும்  அடுத்த அட்டையில் பார்வதி மேனன் படம்...அதனால இது D-சென்டரில் செம கிக் படம்பா என்றும்..சொல்லிக்கொண்டு போனார்...யோவ்..கிளி ஜோதிடரே உம்ம கிழிச்சிப்புடுவேன் கிழிச்சி..விட்டா ABCDE-னு பாடமா நடத்திக்கிட்டு இருக்க......?.என்று தட்சணை கொடுக்காமல் ஓடிவந்தேன் 


மரியான் படம் சிறப்பாக சென்று கொண்டிருப்பதாகவும்  விமர்சகர்கள் பார்வையில் பாராட்டு பெற்றதாகவும் சந்தேகம் இல்லாமல் பாக்ஸ் ஆபிஸ் வெற்றிபெறும் என்றும் oneindia ஆங்கில விமர்சனத்தில் எழுதியுள்ளது.

ஒட்டுமொத்தமாக மரியான் நிச்சயம் பார்க்கவேண்டிய படம் (Overall Mariyaan is definitely worth a watch.) என்றும்

மரியான்-அனைத்து வழிகளிலும் இதயத்தை திருடிக்கொள்ளும் (a heart stealer all the way!) என்றும்

மரியான்-ஒரு தொழில்நுட்பம் நிறைந்த அற்புதமான காதல் கதை (‘Maryan’ is a technically brilliant love story.) என்றும்  

சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் மூன்று கதாநாயகர்கள் 1-தனுஷ் மரணமில்லாத மரியானாக 2-ஏ.ஆர்.ரகுமான்-சிறந்த மதிப்பெண்கள் பெற்றவராக 3-மார்க் கொநின்க்கக்ஸ்க்(Marc Koninckxx ) ஸின் கூத்தாடும் ஒளிப்பதிவு  (This superbly crafted film has three heroes- Dhanush as Maryan (Man without death), AR Rahman’s outstanding score and Marc Koninckxx evocative cinematography.)   என்றும் 
..........................நிறைய சினிமா வலைதளங்கள் வாழ்த்துகின்றன

http://img703.imageshack.us/img703/1562/gea7.jpg

Rediff.com எஸ் சரஸ்வதி,படத்தின் இரண்டாம் பாதி கொஞ்சம் இழுவையாக இருப்பினும் "படத்தின் தொழில்நுட்பம் பெரிய அளவிலும் இசை குறிப்பிடத்தக்கதாகவும் உள்ளது மேலும்   முன்னணி நடிகர்களின் நடிப்பு விதிவிலக்காவும் உள்ளது" என்று எழுதுகிறார் 

மரியான் படத்தின் நடிகர்களை பாராட்டிய Indiaglitz சினிமா வலைத்தளம் தனுஷை ஒரு சாதாரணமான நடிகர் அல்ல (no more an ordinary actor ) என்று எழுதுகிறது.

Behindwoods விமர்சனகுழுவின் கருத்து....."படத்தின் நிதானமான வேகம் வேண்டுமென்றே இயக்குனர் பரத்பாலா பார்வையாளர்களை கதையின்  ஆத்மார்த்தமான(to feel the intensity of the emotions) உணர்வுகளை உணரச் செய்யவே" என்று தீர்மானிக்கிறது.

அழகிய கடல் மற்றும் உலர் ஆப்பிரிக்க பாலைவனங்கள் பின்னணியில் தொழில்நுட்ப அம்சங்களுடன் பரத்பாலா மரியானைப் படைத்திருப்பதாக பாராட்டுகிறது sify.com

ஆக்சனுக்கெல்லாம் முன்னுரிமை கொடுக்காமல் எதார்த்தமாக காட்சிகளை அமைத்திருக்கிறார் பரத்பாலா...என்றைக்குமே சொல்லிக் கொள்ளுகிற மாதிரியான ஒரு படைப்பை தமிழ் சினிமாவிற்கு கொடுத்திருக்கிறார் பரத்பாலா....என்று தமிழ்நியுஸ் விமர்சிக்கிறது.

படத்தின் இன்னொரு ஹீரோ ஒளிப்பதிவாளர் மார்க் கோனின்க்ஸ். ஒவ்வொரு ஷாட்டும் ஒரு கவித்துவமான போட்டோ ப்ரேமாய் இருக்கிறது. பரத்பாலாவும் இவரும் சேர்ந்து படம் முழுவதும் ஒரு விஷுவல் விருந்து படைத்திருக்கின்றனர்...என்றும் Sound Camera Action 

இப்படி நிறைய வலைதளங்களின் பாராட்டு மழையில் மரியான் நனைந்து கொண்டிருக்கும் போது.............

mariyaan

நீரோடியில் இடைவேளை வரை ஒரு காதல்.. சூடானில் ஒரு ஆள் கடத்தல்.. இந்த இரண்டையும் எவ்வளவு இழுக்க முடியுமோ அவ்வளவு இழுத்திருக்கிறார் பரத்பாலா. அதிகபட்சம் முக்கால் மணி நேரத்துக்குள் முடிய வேண்டிய கதையை, இரண்டரை மணி நேரத்துக்கு இழுத்தால்... மே மாத வெயிலில் வேலூரிலிருந்து கோயம்பேட்டுக்கு நடந்தே வந்த எஃபெக்ட்!.......என்று எஸ்.ஷங்கர் (tamil.oneindia) அலுத்துக்கொள்கிறார் 

ஆக மொத்தத்தில் ‘மரியான்’ பார்க்கப்போனா கைவசம் தேவை ஒரு ‘சாரிடான்!’............என்று தினமலர் விமர்சனம் 

சி.பி.கமெண்ட் :  ஹீரோ, ஹீரோயினுக்கு விருது நிச்சயம். ஸெம ஆக்டிங் - ஆனா படம் அட்டர் பிளாப் - தனுஷ்  ரசிகர்கள் பார்க்கலாம். பார்வதியை மேலோட்டமா ரசிக்க நினைப்பவர்கள் பார்க்கலாம். மற்றவர்கள் டி.வி.யில் போட்டபின் பார்க்க....என்று அட்ராசக்க சி.பி.செந்தில் குமாரின் விமர்சனம்

மொத்தத்தில், இந்த ‘மரியானும்’ நம்மை சோதனைக் ‘கடலில்’ மூழ்கடித்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்!....என்று வருத்தப்படும் டாப் 10 சினிமாவும் 

கொஞ்சம் 'ரோஜா', கொஞ்சம் 'நீர்ப்பறவை', கொஞ்சம் 'கடல்' - இவைகளை எல்லாம் சேர்த்துக் கொண்டால் இந்த மரியான் கிடைக்கும்..!
என்று ஆரம்பித்த உண்மைத்தமிழன் 'மரியான்' - ஒரு முறை பார்க்கலாம்..! என்று முடித்திருக்கிறார்.

freeonlinephotoeditor

போதாக்குறைக்கு நம்ம கீச்சுக்குருவிகளோ....
கொஞ்சம் விருப்பு நிறைய வெறுப்பு 

நீசன்@NeesaN07
மரியான்  படத்துக்கு போய் மரிக்காமல் வீடு திரும்பியதே பெரிய விசயம்

ஆல்தோட்டபூபதி@thoatta 
டேய் தம்பி, முடிஞ்சா என்னை 3 ஓவருக்குள்ள அவுட்டாக்கிக்கோ, இல்ல உன் சங்க அறுத்திடுவேன் - முரளி மரியான் விஜய்
Rajkumar@RomanticRaj 
பார்வதி - செம அழகு+ நடிப்பு. தனுஷ-் ஏற்கனவே பார்த்த நடிப்பு தான். படம் மொக்கை... எப்படா முடியும்னு இருந்தது. --மரியான்
தமிழ்ப்பறவை@Tparavai 
பரதேசி ,மரியான் விமர்சனங்கள் சொம்பின் புதுவகை...(கொஞ்சம் அடிவாங்கி நெளிந்திருப்பதும் புது டிசைந்தான்)
Usharani M@usharanims 
முன்பாதி கடலும் பின்பாதி மணலும் # மரியான் இசையை கேட்டு எல்லாம் படத்திற்கு போக கூடாது என்று புரிந்து கொண்டேன்
இளநி வியாபாரி @Pithalasombu 
மரியான் பிரஸ்மீட்ல @thatsTamil மசால்வட கேட்டதுக்கு மெதுவடைய கொடுத்த ஒரே காரணத்துக்காக விமர்சனத்துல இப்புடியாயா கழுவி ஊத்துவீங்க ?
Arun Kumar@Elamejoramigo 
Life of PI படத்த இங்கிலிஷ்காரன் எடுத்தா சூப்பர்னு சொல்லுற அதே கும்பல் தானே இப்போ ''மரியான்'' படம் நல்லா இல்ல, மொக்கனு சொல்லுது...

param@cheliyans 
மரியான் வெளியான பிறகு ,தனது காதலை உறுதிபடுத்தி, மீடியாவின் பார்வையை திசை திருப்பியது,சிம்புவின் ராஜ தந்திரங்களில் ஒன்று 
மைந்தன் சிவா@mynthanz 
மைந்தன் சிவா@mynthanz 
மரியானில் ரசிப்பதற்கு ஏராளமான விடயங்கள் இருக்கின்றன.வெறும் 'மொக்கை'என்று வரும் விமர்சனங்களை தவிர்த்துவிட்டு படத்தை பாருங்கள்!


இதுவே போதுமென்று நினைக்கிறேன் 
ஆக மொத்தத்தில்............
இப்போது பாக்ஸ் ஆபிஸில்  மரியான் நிலை கவலைக்கிடமா...? என்னவென்றுத் தெரியவில்லை... 

நீங்கள் படம் பார்த்தவராக இருந்தால் உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.....

மரியான்-படம் பற்றிய உங்கள் கருத்து என்ன...?


ஒருவர் ஒரு காரணம் மட்டுமே வாக்களிக்க முடியும் முடிவு- 23/07/2013

mariyaan

  மரியான்-படத்தில் உங்களுக்கு என்ன பிடிப்பு?


ஒருவர் எத்தனைக் காரணங்களுக்கும் வாக்களிக்கலாம் 
வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி...முடிவு-23/07/2013
 



 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1