google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: நரேந்திர மோடியும் ஷங்கரின் அந்நியனும்

Monday, July 08, 2013

நரேந்திர மோடியும் ஷங்கரின் அந்நியனும்


(குறிப்பு-இங்கே நீங்கள் வாசிக்கப் போவது கொஞ்சம் சுட்டது...நிறைய சுடாதது..ஆனால்,எதுவாயினும் உண்மை...உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை) 


எந்த வித அரசியல் அனுபவமும் இல்லாமல் இன்று  நரேந்திர மோடி இந்தியாவில் சிறந்த மாநில நிர்வாகியாக போற்றப்படுகிறார். அவரது ஆளுமையின்  பாணி (style) என்ன...? மோடி-நல்லதும் கெட்டதுமாக இரு வேறு முகங்கள் கொண்டவர் 
1886 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஸ்காட்டிஷ் எழுத்தாளர் ராபர்ட் லூயிஸ் ஸ்டீவன்சன் எழுதிய ஜெகில் அன்ட் ஹைட் (Jekyll and Hyde=someone with two personalities - one good and one evil.) குறுநாவலில் வரும் கதாபாத்திரத்தோடு ஒப்பிடப்படுகிறார்.  டாக்டர் ஜெகில் என்ற நல்ல மனிதருக்குக்குள் ஒளிந்திருக்கும் கெட்ட குணமுள்ள திரு.ஹைட் பற்றிய கதை
ஆனால்,என் பார்வையில்  இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால் ஷங்கரின் திரைப்படம் அந்நியனில் வரும் விக்ரம் கதாபாத்திரம் (One who has a dual personality that alternates between phases of good and evil behavior).....அம்பிக்குள் மறைந்திருக்கும் அந்நியன் 

freeonlinephotoeditor

நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறை எழுதிய நிலஞ்சன் மகோபத்யா (Nilanjan Mukhopadhyay ) ஒருமுறை மோடியிடம்........

"உங்களால் எப்படி அதிகாரத்துவம் கையாளப்படுகிறது...?" என்று கேட்டார். அதற்கு மோடியின் பதில்....."பிரச்சனைகளை சுதந்திரமாக கையாளும் போதும் அதன் வழியிலையே எளிமை படுத்தும் போதும் எப்படி அந்தப் பிரச்சனை தீர்வு அடையாமல் போகும்...? எப்படி அந்த விசயங்கள் முடியாமல் போகும்...?" என்று திருப்பிக் கேட்டார்.

அதற்கு எடுத்துக்காட்டாக...அவர் வீடுகளுக்கு 24 மணி நேர மின்சாரம் வழங்குவதை குறிப்பிட்டு சொல்கிறார்.மேலும்..
"மின்சாரப் பற்றாக்குறைக்கு என்ன பிரச்சனை என்று என் அதிகாரிகளை கேட்டபோது...நமது மின்சாரம் நிறைய திருட்டுப் போகிறது என்றும் நம்மிடம் மின் உற்பத்தி சாதனங்கள் குறைவு என்றும் சொன்னார்கள்...நானோ இருக்கும் நமது மின்சாரத்தை இரண்டாகப் பிரித்து ஒன்றை வீடுகளுக்கும் இன்னொன்றை விவசாயத்திற்குமாக அனுப்புங்கள் என்றபோது அவர்கள் சிரித்தார்கள்...ஆனால் இன்று அதுதான் நல்ல பயன் தருகிறது..." 

modi

இன்னொரு முக்கிய திறன் மோடியிடம் உள்ளது...அது ஒரு வேலைக்கு சரியான நபர்களை நியமிப்பது...அவர் எப்போதும் அவரது வேலையில் ஒரு தீவிரப்  பார்வையுடன் இருப்பார்..அவர் தன்னை அறிவார்ந்த தொழில்நுட்ப வல்லுனராக நினைக்க வில்லை ஆயினும் அந்த ஆற்றல் அவருக்குள் இருப்பதாக உணர்கின்றார்.

நரேந்திர மோடிக்குள் இருவேறு பெர்சனாலிட்டி மனிதர்கள் உள்ளனர் மோடி=அம்பி+அந்நியன் சாதாரனமான அம்பி போன்று மோடி  விரைவு சிந்தனையாளர், மிக வேகமாக சிக்கலான எந்தப் பிரச்சினைகளையும் புரிந்து கொள்ளக்கூடியவர்.சுற்றுச்சூழல் பிரச்சினைகள் பற்றி மென்மையான அதேநேரம் அவரது முடிவுகள் வலுவான, உறுதியான அடித்தளத்தில் இருக்கும் கல்வித்துறையில் அவர் தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் குஜாரத் மிகப்பெரிய வளர்ச்சி கண்டுள்ளது.

அப்படியென்றால் அவரது இன்னொரு முகம் என்ன...? அவரது ஷங்கரின் அசாதரனமான அந்நியன் முகம் அரசியல்வாதி முகம்....அரசியல்வாதி மோடி..எப்படிப்பட்டவர்.? கலவர காலங்களில் அவரிடம் ஒரு முதல் அமைச்சருக்கான ஆளுமை இல்லை அவரது அனுபவமின்மை அங்கே வெட்ட வெளிச்சமானது.
அவருக்கு வேண்டாதவர்களை அந்நியன் போல் துவசம் செய்வாரா...? 

freeonlinephotoeditor

இப்படிப்பட்ட நரேந்திர மோடி பிரதம மந்திரியானால் என்னவாகும்...? அவரது மந்திரி சபையில் சிறந்த சகாக்கள் இருப்பார்கள் ஆனால் அவரோ அவர்களை மதிக்காமல் அவர்களது துறை அதிகாரிகள் மூலம் அனைத்து நடவடிக்கையும் எடுப்பார்....இதைத்தான் இப்போது குஜாராத்தில் செய்துகொண்டிருக்கிறார்.

இந்த அரசியல் நிர்வாக விசயத்தில் குஜாராத் மிக மோசமான மாநிலம்...மோடி அரசியலில் ஒரு சர்வாதிகாரி அப்படிப்பட்டவர் பிரதமராக முடியுமா? அப்படியே ஆனாலும் அவரது சொந்த அரசியல் கட்சியே அவருக்கு எதிராக மாறக்கூடும்  

அப்படியென்றால் இந்திய நாட்டுக்கு விமோச்சனமே இல்லையா...? இதுவரை இந்தியா வளர்ச்சி அடைந்த நாடு என்று முகமூடி அணிந்து அலைகிறதே...அதன் உண்மையான முகம் என்ன...? 

freeonlinephotoeditor

இன்னும் இரண்டு தலைமுறைக்கு இதுவரை ஆண்ட இந்த இரண்டு அரசியல் கட்சிகளும் இல்லாத மூன்றாவது அணியாக ஓன்று முளைத்து சர்வ வல்லமை கொண்ட ஒர் அரசியல்வாதி பிரதமராக வரவேண்டும் அப்படி வந்தால் இந்த நாடு உலகில் உண்மையான மிகப்பெரிய வல்லரசு நாடாக மாறிவிடும்...
இந்த மாற்றத்தை உருவாக்கும் சக்தி இந்திய மக்களாகிய நம்மிடம்தான் இருக்கு.....ஆனால் ஏமாற்றம்தான் மிஞ்சியிருக்கு...

பணத்துக்கும் இலவசங்களுக்கும் ஆசைப்படாமல் தேர்தல் காலங்களில் வாக்குகளை விலை பேசாமல் மக்கள் தங்கள் மனசாட்சியுடன் வாக்களித்தால் நிச்சயம் மாற்றம் வரும்..வாழ்க இந்தியா...வளர்க ஜனநாயகம் 


(குறிப்பு-மீண்டும் சொல்கிறேன் நீங்கள் இங்கே வாசித்தது கொஞ்சம் சுட்டது...நிறைய சுடாதது.Thanks-Firstpost.com for some source taken from the post-Jekyll and Hyde: What is Narendra Modi’s style of governance?)
   
******************************************************************************
மோடி-ட்வீட்டர்கள் பார்வையில்......... 
********************************************************************************
ஸீரோ-க்ராவிட்டிஸீரோ-க்ராவிட்டி@gauthamism 
அத்வானியும், நரேந்திர மோடியும் தந்தை, மகனும் போன்றவர்கள்: இல. கணேசன் #இது நல்லாருக்கே! எப்டி எல்லாம் யோசிக்கிறாங்க பாருயா!

விகடன்விகடன்@vikatan 
ட்விட்டர் தளத்தில் மிகவும் பிரபலமாக திகழும் அரசியல்வாதிகளில் சசி தரூரை, நரேந்திர மோடி முந்தியுள்ளார்

செந்தழல்_ரவிசெந்தழல்_ரவி @senthazalravi 
நரேந்திர மோடிஜி அலுவலகத்தில் கத்தியுடன் லேடி - பரபரப்பு ! ஏய் ஆங்கில மீடியா பக்கிகளா - சமையக்காரியா இருக்கப்போவுதுடா !!

Doha TalkiesDoha Talkies @dohatalkies 
சமூக வலைதளங்கலான facebook ,ட்விட்டர் போன்றவற்றில் நரேந்திர மோடியின் புகழை பரப்ப 7000 பேரை நியமித்துள்ளது கண்டுபிடிப்பு

அறுந்த வாலுஅறுந்த வாலு @kavi_rrsk 
தமிழகத்தில் பாஜகவை பலப்படுத்த வருகிறார் நரேந்திர மோடி#யாருப்பா அது "கட்சியை கட்டிக்காக்க வரும் கொத்தனாரே"ன்னு பேனர் வைச்சது

ட்விட்டர்MGR 
ட்விட்டர்MGR @RavikumarMGR 
"குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஒரு புலி':#சத்தமா சொல்லாதீங்கடா அப்பரசண்டிகளா!அந்த ராஜபக்ஷே கேட்ரப் போறான்!

ஆல்தோட்டபூபதிஆல்தோட்டபூபதி @thoatta 
பாஜக தலைவராக தேசிய அரசிலில் குதிக்கிறார் நரேந்திர மோடி# ஐயா, என் பேரு இஜாஸ்அகமது இல்லீங்க, இசக்கிமுத்துங்க, கொளுத்திபுடதீங்க.!

சி.பி.செந்தில்குமார்சி.பி.செந்தில்குமார் @senthilcp 
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, இலவசங்களை அறிவித்து, மக்களை பிச்சைக்காரர் ஆக்கவில்லை-சீமான் #அப்போ கலைஞரை பெக்கர் மேக்கர்ங்கறீங்களா?.

பேயோன்பேயோன் @ThePayon 
இலக்கிய பிரியனான ஒரு நண்பனுக்கு நரேந்திர மோடி பிடிக்காது. "உன்னைவிட மோசமான ஒரு ஆள் இருக்கமுடியும் என்றால் அது நரேந்திர மோடிதான்" என்பான்.




***************************************************************************
சும்மா...சிரிங்க...மக்களே...சிரிங்க...
****************************************************************************** 
கடவுள் எப்போ டென்ஷன் ஆவாரு...??

 

கல்யாணம் ஆகாத கன்னிப்பொண்ணு கர்ப்பம் ஆகும்போது, அவ அம்மா, “அடக் கடவுளே, இப்படி பண்ணிட்டியே”ன்னு கேட்கும்போது,,,,

பாவம் ஒண்ணுமே செய்யாத கடவுள் என்ன பண்ணுவாரு.. 

நன்றி...........
கணினி விஜெய்


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1