google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: சினிமா-பட்டத்து யானை பட்டையைக் கிளப்புமா?

Wednesday, July 24, 2013

சினிமா-பட்டத்து யானை பட்டையைக் கிளப்புமா?








http://parithimuthurasan.blogspot.com/2013/07/pattathuyaanai-trailer.html






 
(குறிப்பு-இது விரைவில் வெள்ளித்திரையில் 
உலா வரவிருக்கும் படத்து யானை படம் பற்றிய நையாண்டிப்  பதிவு....முன்னோட்டப் பார்வை)

பட்டத்து யானை-
பூபதி பாண்டியன் இயக்கத்தில் விஷால்-ஐஸ்வர்யா அர்ஜுன் நாயகன்-நாயகியாகச் சந்தானத்துடன் இணைந்து நடிக்கும் காதல்- அதிரடி- காமெடித் திரைப்படம் ( இப்பலாம் புலி,சிங்கம்,யானை என்று பெயர் வைப்பது சினிமா உலகச் சென்டிமென்ட்...இப்படியே போனால்...சிவபூஜையில் கரடி என்று படம் வந்தாலும் வரலாம்.)


pattathuyaanai

 
மதுரை-திருச்சி கதைக்களம் உள்ளப் படங்கள் என்றால் கதாநாயகர் விஷாலுக்குக் கரும்பு மாதிரி...அடி ஒவ்வொன்றும் விழும் இரும்பு மாதிரி...படமும் நமக்கு இருக்கும் விரும்பும் மாதிரி..(அண்ணேன்...கத்தாம கத்தியாலப் பேசுங்க...இப்பத்தான் நிறையப் பேரு காதக் கிழிச்சது சிங்கத்தின் கர்ஜனை என்று கம்ளையின்ட்...)


pattathuyanai

படத்துக்கு எதிர்பார்ப்பை உருவாக்கிய நிறையச் சம்பவங்கள் காட்சிகள் இந்தப் படத்தில் ஐஸ்வர்யா அர்ஜூன் மூலம் அரங்கேறியது.........கடல் படத்தில் துளசி போன்று விஷாலுடன் ஐஸ்வர்யா அர்ஜூனும் (Dindugal lip-lock scene) முத்தக்காட்சியில்.......
காதல் கதைக்குத் தேவையான காட்சி என்பதால் அப்படி நடித்ததாக அம்மணியும் அதற்கு விளக்கம் கொடுத்ததை நம்புங்கள் மன்மதக் குஞ்சுகளே......(ஆனால் இப்படிக் கதைக்குத் தேவையான முத்தக்காட்சிகளுடன் வந்த படங்கள் இதுவரை மாபெரும் வெற்றிப் பெற்று அழியாத திரைக் காவியங்களாக இன்னும் ஓடாமல் ஓடிக்கொண்டிருப்பதை மனதில் வையுங்கள்..."இதெல்லாம் படத்தில இப்ப சகஜமப்பா" என்று நீங்கள் கவுண்டர் போல் சொல்வதும் சரிதான்)

திருச்சியில் நடைபெற்ற படபிடிப்பில் நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன் இடைவிடாத படப்பிடிப்பில் கலந்துகொண்டதால் மயங்கி விழுந்தார் என்ற செய்தி....(ஆமாம்..வடிவேலு மாதிரி இத்தனை பேரு...தம்பி கையப்புடிச்சி இழுத்தியா..? கதைபோல..(மேலே படத்தச் சொன்னேன்)அம்மணி மயங்கி விழாம என்ன செய்யும்..பாவம்) அவருக்கு சினிமா மீது உள்ள ஈடுபாட்டை.. அவரது தந்தையாருக்கு உள்ள ஈடுபாட்டை விட 16 அடி அதிகம் என்பதைக் காட்டியது.

 (இயக்குனர் பூபதிபாண்டியன்..
"ஐஸ்வர்யாவுக்குள்ள நடிப்புத் திறமை அவரது தந்தை அர்ஜுனிடமிருந்து மரபுவழியாக வந்துள்ளது" என்று   குறிப்பிடுகிறார்..ஆமாம்..இவரு இயக்குனரா..? அல்லது மரபு ஆய்வு விஞ்ஞானியா...? அப்படியென்றால் அடுத்த ஆக்சன் குயின் ரெடியா..? லேடி-ஜேம்ஸ் பான்ட் விஜயசாந்தி தயாரா...? அப்பா அர்ஜுன் ஆக்சன் கிங் ஆச்சே...ஹா..ஹா)

freeonlinephotoeditor

இயக்குனர் பூபதிபாண்டியனின் இன்னொரு தகவல் ஐஸ்வர்யா அர்ஜுன் இந்தப் படத்தில் பள்ளி மாணவி...அம்மணி எந்த வகுப்பு...? குட்டிப்புலி லட்சுமி மேனன் கிளாஸ்மேட்டா...? அல்லது சிங்கம்-2 ஹன்ஷிகாவுக்கு ஜூனியரா...? என்பது விரைவில் தெரியும்...

(இப்பலாம் படத்தில இப்படி நாயகிகளைப் பள்ளிக்கூடம் அனுப்புறது பெண்கள் கல்வி வளர்ச்சிக்குச் சினிமா செய்யும் சமூகத் தொண்டா...? அல்லது வெற்றிப் படம் செண்டிமெண்டா...?.. ஆனால் அங்கேயும் போய்க் காதலிக்கிறாயிங்க அட...இதுபேரு என்ன தொண்டோ...?)

http://www.musicperk.com/wp-content/uploads/2013/07/Pattathu-Yaanai-420x470.jpg

இந்தப் படத்தில் சந்தானம்.....மிகப்பெரிய எதிர்பார்ப்பு சமீபத்திய படங்களைத் தோளில் அல்ல தலையில் தூக்கி தாங்குபவர் அவர்தான் 

இயக்குனர் பூபதிபாண்டியன் "பட்டத்து யானை படம் உங்கள் விலா எலும்பு நோக கிச்சுகிச்சு மூட்டும் ( a rib-tickling fun film)" என்கிறார். விளம்பரப் பதாகைகளைப் பார்த்தால் அவர் சொல்லுவது உண்மைபோல்தான் தெரிகிறது.(ஆனால்..அப்படியே சகுனிமாதிரி சங்கடப்படுத்தி நம்ம விலா-எலும்பு உடைந்து 
விழும்-எலும்பு ஆகாமல் இருந்தால் சரி)


                            thanks-YouTube-by pattatthu yaanai

எஸ்.தமன் இசையில் ஐந்து பாடல்கள் அதில் "என்ன ஒரு என்ன ஒரு....." என்ற பாடலும் கானா பாலாவின் "பூசணிக்காய்..." பாடலும் ஹிட்....(இப்பலாம் நிறையப் படங்கள் குடுத்த காசுக்கு நாலு பாட்டக் காதுலக் கேட்டுட்டு கண்ணாலப் பார்த்துட்டு ஜொள்ளு வாய மூடிக்கிட்டு போங்கப்பான்னு...ஜொள்ளாம ஜொள்ளுறாயிங்க... சாரி..சொல்லாம சொல்றாயிங்க...அப்படி இல்லாமல் இருந்தால் சரிதான்..)


                                thanks-YouTube- Sony Music IndiaSony Music India

பட்டத்து யானை திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சியைப் பார்த்தால் உண்மையிலையே இது ராஜாவின் யானைதான் என்றும் வெற்றி உலா வந்து பட்டையக் கிளப்பும் என்றும் நினைக்கத் தோன்றுகிறது...(மதம் பிடித்துப் பார்வையாளர்களைத் தூக்கிப் போட்டு மிதிக்காது என்று நம்புவோமாக...வாழ்த்துவோமாக )   


என்ன..பதிவுல ஒரு கவர்ச்சி இல்லையா...?
நன்றி........
சினிமா விகடன்@CinemaVikatan 


சினேகா உல்லால் ஆல்பம்!
sinegaullal

அது சரி....யாருங்க இந்த உல்லால்.....? 
கொஞ்சுண்டு ஆடை உள்ளாள்............?

**********************************************


இன்றைய 5-மணி சிறப்பு பதிவு............

**********************************************



                     பட்டத்து யானை 
                               சினிமா விமர்சனம்




இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1