ஆரம்பமே சிங்கத்தின் பாய்ச்சல் அதிரடியாக இருக்கும் என்று நினைத்தால்....அய்யோ..அய்யயோ அஞ்சலியுடன் படகில் குத்து (போட்டு) பாட்டுக்கு வாலே...வாலேன்னு கூத்தடிக்கிறது....அடுத்த நிமிடமே,உப்பளத்தில் அதிரும் அடியாக கும்மாங்குத்து போட்டு அய்யோ...அம்மான்னு அலற அலற எல்லோரையும் துவசம் பண்ணுது...சிங்கத்தின் அடி ஒவ்வொன்றும் திரையரங்க QUBE ஒலியில் திரையை கிழித்துக்கொண்டு நம்மீது விழுவது போல் பிரமையூட்டுகிறது.
கதை-கடமை உணர்வுள்ள காவல்துறை அதிகாரி துரைசிங்கம் ஸ்கூல் NCC மாஸ்டராக வேலை செய்துகொண்டு தூத்துக்குடி கடல் பகுதியில் நடைபெறும் போதைப் பொருள் கடத்தல் செய்யும் சகாயம்,தங்கராஜ்,பாய் போன்ற சுறாமீன்களையும் அவர்களுக்கு தலையாக இருக்கும் திமிங்கலம் போன்ற டேனி என்ற வெளிநாட்டு கடத்தல் காரனையும் வேட்டையாட மீண்டும் போலிஸ் அதிகாரியாக மாறி..சமுக எதிரிகளை (OPERATION-D) துவசம் செய்யும் கதைதான் (நிறைய அதிரடி திருப்பங்கள் விறுவிறுப்பு நிறைந்த காட்சிகளால் சொல்லப்பட்டிருப்பதால்...முக்கியமாக ஹன்ஷிகா கதாபாத்திரம் வித்தியாசமானது..படம் பார்க்கும் உங்களுக்கு சுவராசியம் குறையக்கூடாது என்று...கதையை மேலும் தொடரவில்லை)
இயக்குனர் ஹரி ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் அழகாக கதைக்குள் கொண்டுவருகிறார்..ஹன்ஷிகாவை நள்ளிரவில் சுவர் ஏறிக்குதித்து ஸ்கூலில் கேள்வித்தாள் திருடும் காட்சி...சந்தானத்துக்கு மோப்ப நாய்களுடன் துப்பறியும் எந்திரன் ஸ்டைல் ரஜினி கெட்-அப்... அனுஷ்காவை சந்தானத்துடன் கற்பனை தேவதையாக டூயட்..
டேனி சபானி விஷப் பாம்புடன் அதிபயங்கரமாக அறிமுகம்..இப்படி நிறைய சொல்லலாம். மேலும் 2.45 மணி நேரம் அடுத்து என்ன..? என்ற எதிர்பார்ப்புடன் படத்தை சிறு தொய்வும் இல்லாமல் நகர்த்தி செல்லும் இயக்குனரை பாராட்டலாம்
நடிகர் சூர்யாவுக்கு முதல் சிங்கத்தை விட சிங்கம் இரண்டில் இரண்டு லட்டுகள்..ஹன்ஷிகாவும் அனுஷ்காவும்..டான்ஸ்...அதிரடி என்று இரண்டிலும் நல்லாவே கும்மாளமிடுகிறார்...கும்மியடிக்கிறார்...சிங்கம் மூன்று வந்தால்...கண்ணா..மூணு லட்டு தின்ன ஆசையா...?
படம் முழுக்க அவரே அதுவும் நியாயமே..சிங்கத்துக்கு நல்ல வேட்டை....உப்பளத்திலாகட்டும் பள்ளிக்கூடத்திலாகட்டும் டர்பன் நகர் வீதியில்...கப்பலில் டேனியுடன் சண்டை போடுவதிலாகட்டும் அதிரடியில் பின்னிப் பிடலேடுக்கிறார்.. உண்மையான நேர்மையான போலிஸ் அதிகாரியாக வாழ்ந்திருக்கிறார்.
அனுஷ்கா...பாடல்களுக்கு டான்ஸ் ஆடுவதற்காகவே இந்தப்படத்தில் அப்படியே வந்து ஆடிவிட்டு போகிறார்...அழகுக்கு அழகூட்டும் மேக்கப் அழகோ அழகு அம்மணி...திரையுலகில் இன்னும் மார்கட் தொய்யாது நீடிக்கும் ஆனால் சிங்கம் 1-ல் கொஞ்சம் நடிக்க சான்ஸ் இருந்துச்சு...அது இதில் இல்லை...சிங்கி நல்லாவே சிங்கத்தோடு சிங்கி அடிக்கிறது
ஹன்ஷிகா-நன்றாகவும் நடிக்கிறார் கதைக்கு தேவையான கதாபாத்திரம் சிங்கத்தை காதலித்து கடைசியில் தோல்வி...ஆனால் தூத்துக்குடியில் இப்படியொரு கொழு கொழு பள்ளி மாணவியா..? நம்பவே முடியவில்லை (நான் தூத்துக்குடியில் இருந்தவரை எல்லாமே வத்தலும் தொத்தலுமாகத்தான் இருந்தன)
சந்தானம்-இதுவரை நாம் பார்த்த காமெடியர்களில் இவர் உச்சத்தை நோக்கி போய் கொண்டிருக்கிறார்...இரட்டை அர்த்த வசனங்களைகூட இயல்பாக பேசி கலகலப்பு ஊட்டுகிறார்...சூசையாக நடித்துள்ள அவர் படத்தில்... "பரலோகத்திலிருக்கும் பிதாவே..." என்று ஆரம்பித்தாலே போதும்..அரங்கமே சிரிப்பால் அதிர்கிறது.கடைசியில் கமலின் விஸ்வரூபம் போல் பிரேயர் பண்ணும் காட்சி...(நமக்கும் விஸ்வரூபத்தில் கமல் விஸ்வரூபமாக மாறி சண்டையிடும் நிஜக் காட்சியை மீண்டும் காண வாய்ப்பு...)அவரது குடுகுடுப்பைகாரன் வேடம் செம கலக்கல்...அடுத்து திரையில் எப்போ வருவார் சந்தானம்...? என்று ஏங்க வைக்கிறார்.
டேனி சபானி-இவர் வரும் காட்சிகள் அத்தனையும் நாம் ஒரு ஹோலிவுட் படம் பார்க்கும் நினைவு வருகிறது..அந்த அளவுக்கு பிரமாண்டம்...அதிலும் அவரது ஆக்ரோஷமான பாடி-லாங்வேஜ் இதுவரை தமிழ் திரையுலகம் கண்டிராதது...சகயத்துடன் அவர் யாரென்று தெரியாமலேயே துரைசிங்கம் கைது செய்யும் காட்சியில் அவரது முகபாவனைகள் அருமை...இயக்குனரின் தேர்வு பெருமை.
இன்னும் நாசர்,ராதாரவி,விஜயகுமார்,ரகுமான்,..மனோரமா என்று மிகப்பெரிய கூட்டமே இருக்கிறது...ஆயினும் அவரவர் கதாபாத்திரம் கச்சிதமாக உள்ளது.விவேக் கொஞ்ச நேரமே வந்தாலும் கொஞ்சம் கலக்கல்..லொள்ளு தாதா மன்சூர் அலிகான் நல்ல நடிப்பு
தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்கள் வெளியே கேட்பதைவிட திரையில் காட்சிக்கும் நடனத்துக்கும் அருமையாக இருக்கிறது...சண்டை காட்சிகளில் கும்மாங்குத்து குத்துகிறார்.
பிரியனின் ஒளிப்பதிவில் பாடல்கள் அத்தனையும் காண்பதற்கு நன்றாக உள்ளது...கடலில் எடுக்கப்பட்ட நடுக்கடல் கப்பல் (Aerial view) காட்சிகள் ...டர்பன் நகர வீதியில் டேனியை சிங்கம் விரட்டி துரத்தும் காட்சிகள் நல்ல தெளிவாக இருக்கின்றன
எனது பார்வையில் இது ஒரு மசாலா படமே என்றாலும் காவல்துறை பிரதிநிதிபோல் இயக்குனர் ஹரி சமுக சிந்தனையுடன் எடுத்துள்ள காவல்துறையினருக்குப் பெருமையூட்டும் சிறந்த படம் என்பேன்..ஆனால் நிஜத்தில் எப்படியோ...?
எல்லா தரப்பு ரசிகர்களையும் மனதில் வைத்துதான் இயக்குனர் ஹரி சிங்கம்-2 எடுத்துள்ளார்...எல்லோருக்கும் இந்த சிங்கத்தைப் பிடிக்கும்..முதல் சிங்கத்தின் வெற்றியை விட சிங்கம்-2 வின் வெற்றி பல மடங்கு அதிகமாக இருக்கும்... சினிமா ரசிகர்களுக்கு சிங்கம்-2 நல்ல ரசனை-வேட்டை
.
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....கதை-கடமை உணர்வுள்ள காவல்துறை அதிகாரி துரைசிங்கம் ஸ்கூல் NCC மாஸ்டராக வேலை செய்துகொண்டு தூத்துக்குடி கடல் பகுதியில் நடைபெறும் போதைப் பொருள் கடத்தல் செய்யும் சகாயம்,தங்கராஜ்,பாய் போன்ற சுறாமீன்களையும் அவர்களுக்கு தலையாக இருக்கும் திமிங்கலம் போன்ற டேனி என்ற வெளிநாட்டு கடத்தல் காரனையும் வேட்டையாட மீண்டும் போலிஸ் அதிகாரியாக மாறி..சமுக எதிரிகளை (OPERATION-D) துவசம் செய்யும் கதைதான் (நிறைய அதிரடி திருப்பங்கள் விறுவிறுப்பு நிறைந்த காட்சிகளால் சொல்லப்பட்டிருப்பதால்...முக்கியமாக ஹன்ஷிகா கதாபாத்திரம் வித்தியாசமானது..படம் பார்க்கும் உங்களுக்கு சுவராசியம் குறையக்கூடாது என்று...கதையை மேலும் தொடரவில்லை)
இயக்குனர் ஹரி ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் அழகாக கதைக்குள் கொண்டுவருகிறார்..ஹன்ஷிகாவை நள்ளிரவில் சுவர் ஏறிக்குதித்து ஸ்கூலில் கேள்வித்தாள் திருடும் காட்சி...சந்தானத்துக்கு மோப்ப நாய்களுடன் துப்பறியும் எந்திரன் ஸ்டைல் ரஜினி கெட்-அப்... அனுஷ்காவை சந்தானத்துடன் கற்பனை தேவதையாக டூயட்..
டேனி சபானி விஷப் பாம்புடன் அதிபயங்கரமாக அறிமுகம்..இப்படி நிறைய சொல்லலாம். மேலும் 2.45 மணி நேரம் அடுத்து என்ன..? என்ற எதிர்பார்ப்புடன் படத்தை சிறு தொய்வும் இல்லாமல் நகர்த்தி செல்லும் இயக்குனரை பாராட்டலாம்
நடிகர் சூர்யாவுக்கு முதல் சிங்கத்தை விட சிங்கம் இரண்டில் இரண்டு லட்டுகள்..ஹன்ஷிகாவும் அனுஷ்காவும்..டான்ஸ்...அதிரடி என்று இரண்டிலும் நல்லாவே கும்மாளமிடுகிறார்...கும்மியடிக்கிறார்...சிங்கம் மூன்று வந்தால்...கண்ணா..மூணு லட்டு தின்ன ஆசையா...?
படம் முழுக்க அவரே அதுவும் நியாயமே..சிங்கத்துக்கு நல்ல வேட்டை....உப்பளத்திலாகட்டும் பள்ளிக்கூடத்திலாகட்டும் டர்பன் நகர் வீதியில்...கப்பலில் டேனியுடன் சண்டை போடுவதிலாகட்டும் அதிரடியில் பின்னிப் பிடலேடுக்கிறார்.. உண்மையான நேர்மையான போலிஸ் அதிகாரியாக வாழ்ந்திருக்கிறார்.
அனுஷ்கா...பாடல்களுக்கு டான்ஸ் ஆடுவதற்காகவே இந்தப்படத்தில் அப்படியே வந்து ஆடிவிட்டு போகிறார்...அழகுக்கு அழகூட்டும் மேக்கப் அழகோ அழகு அம்மணி...திரையுலகில் இன்னும் மார்கட் தொய்யாது நீடிக்கும் ஆனால் சிங்கம் 1-ல் கொஞ்சம் நடிக்க சான்ஸ் இருந்துச்சு...அது இதில் இல்லை...சிங்கி நல்லாவே சிங்கத்தோடு சிங்கி அடிக்கிறது
ஹன்ஷிகா-நன்றாகவும் நடிக்கிறார் கதைக்கு தேவையான கதாபாத்திரம் சிங்கத்தை காதலித்து கடைசியில் தோல்வி...ஆனால் தூத்துக்குடியில் இப்படியொரு கொழு கொழு பள்ளி மாணவியா..? நம்பவே முடியவில்லை (நான் தூத்துக்குடியில் இருந்தவரை எல்லாமே வத்தலும் தொத்தலுமாகத்தான் இருந்தன)
alt="hanshika">
சந்தானம்-இதுவரை நாம் பார்த்த காமெடியர்களில் இவர் உச்சத்தை நோக்கி போய் கொண்டிருக்கிறார்...இரட்டை அர்த்த வசனங்களைகூட இயல்பாக பேசி கலகலப்பு ஊட்டுகிறார்...சூசையாக நடித்துள்ள அவர் படத்தில்... "பரலோகத்திலிருக்கும் பிதாவே..." என்று ஆரம்பித்தாலே போதும்..அரங்கமே சிரிப்பால் அதிர்கிறது.கடைசியில் கமலின் விஸ்வரூபம் போல் பிரேயர் பண்ணும் காட்சி...(நமக்கும் விஸ்வரூபத்தில் கமல் விஸ்வரூபமாக மாறி சண்டையிடும் நிஜக் காட்சியை மீண்டும் காண வாய்ப்பு...)அவரது குடுகுடுப்பைகாரன் வேடம் செம கலக்கல்...அடுத்து திரையில் எப்போ வருவார் சந்தானம்...? என்று ஏங்க வைக்கிறார்.
டேனி சபானி-இவர் வரும் காட்சிகள் அத்தனையும் நாம் ஒரு ஹோலிவுட் படம் பார்க்கும் நினைவு வருகிறது..அந்த அளவுக்கு பிரமாண்டம்...அதிலும் அவரது ஆக்ரோஷமான பாடி-லாங்வேஜ் இதுவரை தமிழ் திரையுலகம் கண்டிராதது...சகயத்துடன் அவர் யாரென்று தெரியாமலேயே துரைசிங்கம் கைது செய்யும் காட்சியில் அவரது முகபாவனைகள் அருமை...இயக்குனரின் தேர்வு பெருமை.
இன்னும் நாசர்,ராதாரவி,விஜயகுமார்,ரகுமான்,..மனோரமா என்று மிகப்பெரிய கூட்டமே இருக்கிறது...ஆயினும் அவரவர் கதாபாத்திரம் கச்சிதமாக உள்ளது.விவேக் கொஞ்ச நேரமே வந்தாலும் கொஞ்சம் கலக்கல்..லொள்ளு தாதா மன்சூர் அலிகான் நல்ல நடிப்பு
தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்கள் வெளியே கேட்பதைவிட திரையில் காட்சிக்கும் நடனத்துக்கும் அருமையாக இருக்கிறது...சண்டை காட்சிகளில் கும்மாங்குத்து குத்துகிறார்.
பிரியனின் ஒளிப்பதிவில் பாடல்கள் அத்தனையும் காண்பதற்கு நன்றாக உள்ளது...கடலில் எடுக்கப்பட்ட நடுக்கடல் கப்பல் (Aerial view) காட்சிகள் ...டர்பன் நகர வீதியில் டேனியை சிங்கம் விரட்டி துரத்தும் காட்சிகள் நல்ல தெளிவாக இருக்கின்றன
எனது பார்வையில் இது ஒரு மசாலா படமே என்றாலும் காவல்துறை பிரதிநிதிபோல் இயக்குனர் ஹரி சமுக சிந்தனையுடன் எடுத்துள்ள காவல்துறையினருக்குப் பெருமையூட்டும் சிறந்த படம் என்பேன்..ஆனால் நிஜத்தில் எப்படியோ...?
Thanks-YouTube-by HD Cinema Company
.
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |