google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: பிரியாணி-சிறப்புப் பார்வை

Tuesday, August 20, 2013

பிரியாணி-சிறப்புப் பார்வை


(குறிப்பு-இது விரைவில் வரவிருக்கும் கார்த்தியின் பிரியாணி திரைப்படம் பற்றிய சிறப்புப் பார்வை.........பிரியாணி போல் சுவையாகவும் இருக்கலாம் )



வெங்கட் பிரபு இயக்கத்தில் வரும் பிரியாணி திரைப்படம்.... (சிக்கனா..? அல்லது வெஜிடபிளா...? ஹன்ஷிகா இருப்பதால் சிக்கனாகத்தான் இருக்கவேண்டும்...?) உண்மையான சாப்பாடு பிரியாணி செய்வது போல்.....


briyani


16 ஜூலை 2012 -ல் பூஜை போட்டு அடுப்பு மூட்டப்பட்ட பிரியாணி நவம்பர் 2012 வரை எந்த வேலையும் நடக்கவில்லை........முதலில் சிங்கம் சூரியாவுக்காகத் தயாரிக்கப்பட்ட பிரியாணி....அப்புறம் தலைவா விஜய்-க்காகத் தயாரிக்கப்பட்ட பிரியாணி...கடைசியில் பருத்தி வீரன் கார்த்தி-க்காகப் படைக்கப்பட்டது.(இவர் பிரியாணியை செம கட்டு கட்டுவார்ர்....ர்)  

http://timesofindia.indiatimes.com/photo/18087756.cms

(அண்ணேன்...விடுங்க...ண்ணேன் 
ஒஸ்தி நடிகர் கோவிச்சிக்கிட்டு குஸ்தி போடப்போறாரு...)  
அதனால்...திரைக் கதை மசாலாவில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டு இப்போது காரசாரமான காமெடி த்திரிலராகப் பரிமாரப்படவுள்ளது.



பிரியாணி படத்தில் கார்த்தியின் ஜோடியாக ஹன்ஷிகாவும் மற்றும் சைடிஸ் வகையறாக்களாகப் பிரேம்ஜி,ராம்கி,நிதின் சத்யா,மதுமிதா,மாண்டி தாக்கர்...என்று நடிகர்கள் பட்டாளமே நடித்துள்ளது. இன்றைய காமெடி கிங் சந்தானத்தின் வேலையைப் பிரேம்ஜி......கார்த்தியின் நண்பனாகச் செய்வாதாக தெரிகிறது.அதற்குக் கார்த்தியே சிறந்த நகைச்சுவை கதாநாயகர்என்பதால்...பிரியாணி நல்ல (நகைச்)சுவையாக இருக்கலாம் 

freeonlinephotoeditor

இந்தக் கவர்ச்சிப் பிரியாணியில் கதாநாயகி தேர்விலும்.....சமந்தாவில் ஆரம்பித்து...பாலிவுட் நடிகை பரிநீட்டி சோப்ரா...இலியானா டி குரூஸ்...என்று தொடர்ந்து பெங்காலி நடிகை ரிச்சா கங்கோபாத்யாயா-வில் நின்று..பிறகு நயன்தாரா என்று ஆரம்பித்துக் கடைசியில் ஹன்ஷிகா மூலம் பரிமாறப்படுகிறது 

http://www.cinemalead.com/photo-galleries/biryani-on-location-stills-/wmarks/biryani-on-location-stills-03.jpg

அதேப்போல் இன்னொரு கவர்ச்சி இணை நாயகி பாத்திரத்திற்கு நீது சந்திரா என்று துவங்கி...பாலிவுட் நடிகை டயானா பெண்டி தொடர்ந்து... வாய்ப்புக் கவர்ச்சிக் கன்னி மாண்டி தாக்கரிடம் ஒண்டிக்கொண்டது. நடிகை மீனாகூட ஒரு முக்கியப் பாத்திரத்திற்கு அழைக்கப்பட்டு...மறுத்துவிட்டதாகக் கேள்வி.......பிரசனாவுக்கு வந்த வாய்ப்பு ராம்கியிடம் போனது. இப்படிப் பிரியாணி செய்வதற்குள் வெங்கட்பிரபு நொந்து நூடுல்ஸ் ஆகிவிட்டார்.

http://chennaionline.com/images/articles/July2013/098d2ef5-3159-45af-a284-27482d3b57eaOtherImage.jpg

பிரியாணி படத்தின் இசை யுவன் சங்கர்ராஜாவுக்கு நூறாவது படம் என்பதால் அவர் பின்னணி இசையிலும் பாடல்களிலும் நல்ல இசை  வாசனை உண்டாக்கியுள்ளார் என்றும் அதற்குள் யாரோ வாசனையை மோப்பம் பிடித்து youtube-ல் பரப்பிவிட்டதாக.....(கார்த்தியும் ஒரு பாடல் பாடியுள்ளார்....)


                                thanks-YouTube-by matineeonline com

பிரியாணி என்ற பெயருக்கு ஏற்ப இந்தப் படமும் பிரியாணிக்கு பெயர்பெற்ற சென்னை,ஆம்பூர்,ஹைதராபாத்...போன்ற இடங்களில் செய்யப்பட்டது..அதே நேரத்தில் இரண்டு பாடல்கள் ஸ்பெயின்,போர்ச்சுகல் நாடுகளில் சுடப்பட்டது....


karthi

பிரியாணி படத்தின் போஸ்டர் படங்கள்...முன்னோட்டம் காணொளி காணும் போது நல்ல நகைச்சுவை வாசனை வீசுகிறது...ஆனாலும் சாப்பிட்டப் பிறகுதான் அதன் சுவையைச் சொல்ல முடியும்..அப்புறம் அலெக்ஸ்பாண்டியனுக்கு ஆனமாதிரி தொண்டையில் விக்கிக்கொல்லக்....கொள்ளக் கூடாதல்லவா...?
  

****************************************************************************

இங்கே..........
நடிகை வீணா மாலிக் உடலோவியங்கள் 


 
(குறிப்பு-இங்கே நீங்கள் பார்க்கப்போவது தன் உடலை  ஓவியம் தீட்டும் திரைச் சீலையாக மாற்றிய....நடிகை வீணா மாலிக் )....மேலும்


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1