google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: மெட்ராஸ் கஃபே-சிறப்புப் பார்வை

Monday, August 19, 2013

மெட்ராஸ் கஃபே-சிறப்புப் பார்வை


(குறிப்பு-இது விரைவில் திரைக்கு வரவிருக்கின்ற.....பிரச்சனைக்குரிய திரைப்படம் மெட்ராஸ் கஃபே.....பற்றியது.)



ஷூஜீத் சிர்கார்(Shoojit Sircar) இயக்கத்தில் நடிகர் ஜான் ஆபிரகாம், நடிகை நர்கிஸ் பாக்ஹ்ரி,அஜய் ரத்தினம்,ராஷி கன்னா... ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடிக்க... முன்பு வடக்கு இலங்கை நகரம் Jaffna  என்று பெயரிடப்பட்டு..... இப்போது  மெட்ராஸ் கஃபே (Madras Cafe) என்று வரும்  ஓர் அரசியல் உளவுத்துறைப் பற்றிய திரைப்படம்

இப்படம் 1980-க்குப் பிறகும் 1990-ன் ஆரம்பக் காலகட்டத்திலும் நிகழ்வுகளான இலங்கை உள்நாட்டுப் போர் மற்றும் அன்றைய இந்தியப் பிரதமரான ராஜீவ் காந்தியின் படுகொலைப் பற்றியும் விவரிப்பதாகச் சொல்லப்படுகிறது.

இப்படம் ராஜிவின் படுகொலை சென்னையில் திட்டமிடப்பட்ட இடம் சென்னை என்பதாகவும் அதனால் மெட்ராஸ் கஃபே என்று பெயரிடப்பட்டுள்ளதாக....ஆயினும் சென்னையில் குறிப்பிட்டு எந்த இடம் என்றும் சொல்லப்படவில்லை என்று இயக்குனர் ஷூஜித் சொல்கிறார்.

அதேநேரம் "மெட்ராஸ் கஃபே இந்திய அரசியல் வரலாற்றில் நடந்த மாற்றத்தை நெருக்கமாகக் காண்பிக்கும்."என்கிறார் நடிகர் ஜான் ஆபிரகாம் 

http://i1.ytimg.com/vi/bL_yqgd10P8/hqdefault.jpg?feature=og

 
இந்தியாவிலும் இலங்கையிலும் நடப்பதாகக் காட்டப்படும் இந்தப் படத்தில்... இந்திய அமைதிப்படை திரும்ப அழைக்கப் பட்டப் பிறகு இலங்கையில் நடப்பதை இரகசியமாகக் கண்காணிக்க இந்திய அரசு உளவு அமைப்பால் அனுப்பப்படும் இந்திய சிறப்பு ராணுவ அதிகாரி விக்ரம் சிங் (ஜான் ஆப்ரஹாம்) அவரது பயணத்தில் அங்கே ஒரு போராளிக் குழு  பாதிக்கப்பட்டுள்ள மிகப்பெரிய பிரச்சனையை அறிவதாகவும் பின்னர் ஒரு பிரிட்டிஷ் பெண் பத்திரிகையாளரை(நர்கிஸ் பாக்ஹ்ரி) சந்திப்பதாகவும் அவர்கள் அறிந்த ஒரு சதித்திட்டத்தை உலகுக்கு வெளிப்படுத்த இருப்பதாகவும்...இப்படிப் படம் செல்வதாக சொல்லப்படுகிறது.

madrascafe

 
சென்னை கஃபே படம்-இலங்கை, மலேஷியா, தாய்லாந்து, லண்டன்இந்தியா என்று நிறைய இடங்களில் படம்பிடிக்கப்பட்டது...படத்தின் சண்டைக்காட்சிகள் உண்மையான இயந்திரத் துப்பாக்கிகள் (AK-47s, 9mm Berettas and M60s) உபயோகித்துப் பாங்காக்கில் சுடப்பட்டன.

freeonlinephotoeditor
 
பிரச்சனை.........இப்படத்தில் இலங்கை உள்நாட்டுப் போரில் பங்குகொண்ட தமிழீழ விடுதலைப்புலிகளையும் போராளிகளையும் மிகவும் பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கப் படுவதாகவும் இப்படத்தில் தமிழ் நடிகர் அஜய் ரத்தினம் கதாபாத்திரம் தமிழீழ தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களை ஒத்திருப்பதாகவும் நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் சீமான் சர்ச்சை செய்வதுடன் இப்படத்தைத் தமிழ்நாட்டில் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்கிறார்.

freeonlinephotoeditor

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், இயக்குனர் ஆர்.கே. செல்வமணி ஆகியோர் தலைமையில் பிரத்தியேகக் காட்சியாக திரையிடப்பட்ட மெட்ராஸ் கஃபே-இலங்கை தமிழர்களின் வாழ்க்கைக்காகப் போராடி தனது வாழ்க்கையை இழந்த ஒர் இயக்க தலைவரை பயங்கரவாதியாக சித்தரிக்கப் பட்டுள்ளது....என்றும் தமிழர்கள் எதிர்ப்பு உள்ளுணர்வுடன் படம் செல்வதாகவும் தலைவர் சீமான் தடை கேட்கிறார்.
vaigo

 
"ஈழத்தில் நடத்திய படுகொலைகளை மறைப்பதற்காக சிங்கள அரசும் செய்த துரோகத்தைத் தொடர்ந்து கொண்டு இருக்கும் இந்திய அரசும் திட்டமிட்டு இந்தியாவில் உள்ள ஒரு திரைப்பட நிறுவனத்தைப் பயன்படுத்தித் தயாரித்த படம்தான் மெட்ராஸ் கஃபே எனும் திரைப்படம் ஆகும்"...என்று கோபக்கனலை அள்ளி வீசி கொந்தளிக்கிறார் மதிமுக தலைவர் வைகோ  

                                 thanks-YouTube-by Viacom18Movies

ஆனால் கொடுமையிலும் கொடுமை இப்படம் பிரத்தியேகமாகத் தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஆகஸ்ட் 23-ல் வெளிவர அடம்பிடிக்கிறது 

http://zookorm.org/wp-content/uploads/2011/04/16028501-santa-snake-on-a-white-background-illustration.jpg

பணம் சம்பாதிக்க எத்தனையோ நல்ல வழிமுறைகள் இருக்கும் போது இங்கே சினிமாவில் இப்படிச் சில விஷப்பாம்புகள் இப்போதெல்லாம் பிரச்சனைகளுடன் படமெடுத்து ஆடுவதே வழக்கமாய் ஆனது....அடக்..கன்றாவியே 

 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1