(குறிப்பு-அதீத வேகத்தில் வரும் ஷாருக்கான் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ்திரைப்படம் பற்றிய ஒரு சிறப்புப் பதிவு இது.....)
சென்னை எக்ஸ்பிரஸ்-இது ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் ஷாருகான்-தீபிகா படுகோன் நடிப்பில் உலகமெங்கும் 10 மொழிகளில் வெளிவரும் அதிரடி நகைச்சுவை திரைப்படம்
ஓம் சாந்தி ஓம் வெற்றிப் படக் கூட்டணியினரின் மிகப் பெரிய பட்ஜெட் படம்.
சென்னை எக்ஸ்பிரஸ் படத்தின் கதை......மும்பையிலிருந்து ராமேஸ்வரம் பயணிக்கும் ராகுல்(ஷாருகான்) என்ற வாலிபன் உள்ளூர் தாதா துர்கேஷ்வர அழகு சுந்தரம் (சத்யராஜ்) என்பவரின் மகள் மீனா (தீபிகா படுகோன்) மீது காதல் வயப்பட....அதனால் உண்டாகும் பிரச்சனைகள்...ராகுல்-மீனா காதல் வென்றதா...? என்று நகைச்சுவை காட்சிகள் நிறைந்த திரைப்படம் (இங்கே கோலிவுட் இயக்குனர்களும் நடிகர்களும் படத்தின் தலைப்பு சொல்வதற்கே வருடக்கணக்கில் ஆகிறது...அய்யோ..இன்னும் சில படங்களின் கதை என்ன என்பதைப் படம் வெளிவந்து பல வருடங்கள் ஆனப் பிறகும் தெரிய மாட்டேங்கிறது.)
சென்னை எக்ஸ்பிரஸ் படத்தின் இன்னொரு சிறப்பு அதில் சத்தியராஜும் மனோரமாவும் நடித்திருப்பதும் .....கதையும் தமிழ் நாட்டில் நடப்பதும் முழுக்க முழுக்க இப்படத்தை நமக்குத் தமிழ் படம் போன்ற உணர்வை ஊட்டும் மேலும் பிரியாமணியின் நம்பர் 2 ஐட்டம் பாட்டு 1..2...3..குதுகலிக்க வைக்கும் குத்து டான்ஸ்
thanks-YouTube-by

படத்தின் இசை இரட்டையர்கள் விஷால்-சேகர் மூலம் அமிதா பட்டாச்சார்யாவின் முத்திரை வரிகளில் பாடல்கள் அத்தனையும் பிரபலம் அதிலும் லுங்கி டான்ஸ் செம கிக்....நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் படப் பேனர்களுடன்.....
சென்னை எக்ஸ்பிரஸ் படம் 8 ஆகஸ்ட் 2013-ல் அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் 9 ஆகஸ்ட் 2013-ல் உலகமெங்கும் இந்திய மொழிகள் தவிர்த்து சர்வதேச மொழிகள் (துருக்கிய, மலாய், ஆங்கிலம், பிரஞ்சு, ஸ்பானிஷ், அரபு, ஜெர்மன், ஹீப்ரூ, டச்சு....) என்றும் வெளியிடப்படுகிறது. உலகமெங்கும் 4200 க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியாகி சென்னை எக்ஸ்பிரஸ் படம் மட்டுமே உலக அளவில் பரந்த விநியோகம் பெற்ற முதல் இந்தியப் படம் என்ற பெருமை அடைகிறது
thanks-YouTube-by

எல்லாவற்றுக்கும் மேலாக நமது தமிழ் கலாச்சாரமும் ராமேஸ்வரம் போன்ற பெருமைகளையும் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தின் மூலம்........
இன்று உலக அளவில் பெருமையாக எடுத்துச் செல்ல பாலிவுட்டிலிருந்து ஒர் இந்தி(ய) நடிகன் வந்ததற்கு.......மனதார வாழ்த்துவோமாக......Ready.....Steady........Po
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |