google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: என்னடா...இந்தத் தலைவா-வுக்கு வந்த சோதனை?

Tuesday, August 06, 2013

என்னடா...இந்தத் தலைவா-வுக்கு வந்த சோதனை?


(குறிப்பு-இது ஒரே நாளில் வெளிவரும் விஜயின் தலைவா (தமிழ்),அண்ணா பார்ன் டு லீட் (தெலுங்கு),மற்றும் ஷாருக்கானின் சென்னை எக்ஸ்பிரெஸ்  ஆகிய மூன்று படங்களுக்குள் நடக்கும் போட்டி...பற்றிய பதிவு)


beach

ஆகஸ்ட் 9 அன்று கோலிவுட் நட்சத்திர நடிகர் விஜய் நடித்து வெளிவரும் தலைவா  திரைப்படத்திருக்கு உலகளவில் மிகப் பெரிய சவால்......
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் தீபிகா படுகோனுடன் இணைந்து நடித்த மெகா பட்ஜெட் 900 மில்லியன் படம் சென்னை எக்ஸ்பிரெஸ்  

http://www.thenewstrack.com/wp-content/uploads/2013/05/Injured-Shahrukh-Khan-Admit-To-Hospital-For-Surgery.jpg

சென்னை எக்ஸ்பிரெஸ் (இந்தி) படத்தின் கதை- மும்பையிலிருந்து ராமேஸ்வரம் பயணம் வரும் ஒர் இளைஞன் உள்ளூர் தாதா ஒருவரின் மகள் மீது காதல் வயப்படுகிறார்...பிறகு என்ன நடந்தது என்பதை நகைச்சுவையாகவும் விறுவிறுப்பாகவும் சொல்கிறது...இன்று உலகளவில் ஷாருக்கான் நடித்த படத்திற்கு அளவில்லா எதிர்பார்ப்பு உண்டு.

http://25.media.tumblr.com/tumblr_mbqk6hrK6z1qikj2so1_500.jpg

விஜய் தனது துப்பாக்கி படத்தின் மூலம் இன்று பாலிவுட் உலகிலும் தனக்கென்று தனியிடத்தைப் பிடித்துள்ளார்....அதை தக்கவைத்துக் கொள்ளவே தலைவா படத்தின் கதை கூட மும்பையில் நடப்பது போல் சித்தரிக்கப் பட்டுள்ளது....அந்த இடம் நிலைக்குமா? தலைவா தாங்கிப் பிடிக்குமா?

freeonlinephotoeditor

விஜயின் தலைவா தெலுங்கில் அண்ணா டு லீட்(ANNAA-BORN TO LEAD) என்றும் அதே தினத்தில் வருகிறது. இதற்கிடையில் டோலிவுட் நட்சத்திர நடிகரார் பவன் கல்யாண் தனது அதிரடி திரைப்படம் அதைண்டிகி டாரேடி (Atharintiki Daaredi)-யை ஷாருக்கானின் சென்னை எக்ஸ்பிரெஸ்-இந்திப் படத்துடன் உலகளவில் மோதி ஏன் மண்டை உடையவேண்டும் என்று வெளியிடும் தேதி தள்ளிவைத்துவிட்டார் 

ஒருவகையில் விஜயின் அண்ணா-பார்ன் டு லீட் தெலுங்கு திரைப்படத்துக்கு நல்ல நேரம் இது என்றாலும்.....இன்று ஆந்திரா-தெலுங்கானா கூறு போடும் சண்டையில் அண்ணா-வின் கதி ஆரோகதியாகிட வாய்ப்புள்ளது 


 
ஒருபுறம் தலைவா உலகளவிலும் பாலிவுட்டிலும் ஷாருக்கானின் சென்னை எக்ஸ்பிரெஸ்-வுடன் நேரடியாக மோதுகிறது...அங்கே யார் தடம் புரளுவார்களோ...? தடுமாறுவார்களோ...? விபத்திலாமல் இருவரும் ஓடுவார்களா...? 

இன்னொருபுறம்...தலைவாவின் தெலுங்கு அண்ணா-வுக்கும் ஆந்திரா பந்தில் பந்தாடப்படும் நிலை..




என்னடா....
இந்தத் தலைவா-வுக்கு வந்த சோதனை? 

 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1