(குறிப்பு-வாங்க...சினிமா காபி குடிக்கலாம்...இது சினிமா செய்திகளும் அதற்கான எனது சிந்தனைகளும்... கொஞ்சம் நகைச்சுவை நிறைய அறுவை..முதல்லேயே சொல்லிப்புட்டேன்...அம்புட்டுத்தான்....அப்புறம் என்னையா காபி போட்டேன்னு சண்டைக்கு வராதீங்க..)
மீண்டும் நரைத்த முடி கெட்டப்பில் அஜீத்
தல' அஜித்-விஷ்ணுவர்த்தன் கூட்டணியில் விரைவில் வரவிருக்கும் ஆரம்பம் படத்தில் தல-யின் தல... மங்காத்தா ஸ்டைல்-ஒ-ஸ்டைலில்....தல-நரைத்த தல' ஆக இன்னொரு மங்காத்தா வெற்றியின் ஆரம்பம்அண்ணேன்...விஷ்ணுவர்த்தன் அண்ணேன்...ஆரம்பம் படம் ஆரம்பம் எப்படி...? குத்துப்பாட்டா...? அதிரடி..அடியா?..அண்ணேன்...பில்லா 2 மாதிரி பன்ச் போட்டு ஆரம்பிச்சிடாதீங்க....இப்பலாம் குத்துப்பாட்டு போட்டு ஆரம்பிச்சாத்தான் படம் செம குத்து குத்துது
நடிகையுடன் பரத் காதலா?
பரத் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்றதும், மணப்பெண் அவருடன் முன்பு நடித்த ஒரு நடிகையாகத்தான் இருக்கும் என்று கோடம்பாக்கம் கிசு கிசுக்கிறது ........ஆனால் பரத் இந்தச் செய்தியை மறுத்துள்ளதுடன், ஒரு நடிகையை எந்தக் காலத்திலும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்றும் கூறுகிறார்...(பரத்...அண்ணேன் நீங்க ஒன்னும் பயப்படாதீங்க...நாங்க யாரும் நம்ப மாட்டோம்..இப்பலாம் கோலிவுட்ல இதெல்லாம் சகஜம்...பப்ளிசிட்டி
படம் புக் பண்ணும்போதே இப்படி நியுஸ் கிசு கிசுக்க ஒப்பந்தம் போடுறாங்களா?)
தேவதாசிகள் பற்றி நடிகை சொர்ணமால்யா பேச்சு
‘’ தேவதாசிகள் கடவுளின் மனைவியர் என்ற முறையில் புனிதர்களாக திகழ்ந்தனர். தேவதாசி முறையை அரசியல் லாபம் கருதியே ஒழித்தனர்.தேவதாசி தொழில் என்பது கடவுளுக்கான அர்ப்பணிப்பு. ’’ .........என்றார் நடிகை சொர்ணமால்யா
(அம்மணி...நீங்க பாரதி கண்ட புதுமைப் பெண்...அது சரி...நீங்க சொன்னா புரியாது படத்தில ஏன் நடிக்கல...? நீங்க முன்னாடியே பெரிய பிரபலம்...இப்படி எதையாவது சொல்லி இன்னும் மேலும் மேலும் பிரபலமாகனுமா...? ஆம்புளனா தேவதாசு...பொம்பளைனா தேவதாசி என்று நினைச்சிங்களா...? அய்யோ பாவம் ...ஒன்னும் தெரியாத பாப்பா...போட்டாளாம் தப்பா தாப்பாள் )

மீண்டும் வருகிறார் நக்மா!
காதலன், பாட்ஷா, சிட்டிசன் படங்கள் மூலம் முன்னணி கதாநாயகியாக இருந்த நக்மா...சினிமாவிற்கு முழுக்கு போட்டு விட்டு அரசியலில் சேர்ந்தார்.அப்போது அரசியலில் குதித்த நடிகை நக்மா, மீண்டும் சினிமாவில்வந்து குதித்தார்.........
(இக்கரைக்கு அக்கரைப் பச்சை...அம்மணி சினிமாவும் அரசியலும் இரண்டும் ஒண்ணுதான்னு இப்போ தெரிஞ்சிருக்குமே...இங்கேயும் நடிக்கணும் அங்கேயும் நடிக்கணும்...அதுதான் சினிமாகாரங்க எல்லோரும் ரிட்டைர் ஆகி அரசியலுக்கு போறாங்க...ஆனால் நீங்க அரசியலுக்கு போயிட்டு மறுபடியும் சினிமாவுக்கு வர்ரீங்க...அதுதான் புரியல...)
தனுஷ் ஜோடியானது மகிழ்ச்சி ------அமலாபால்
" தற்போது நடிகர் தனுஷ் ஜோடியாக நடிக்க’3′ படத்தில் இருந்த அதே குழுவினருடன்
ஒப்பந்தமாகியுள்ளேன்...மேலும் தனுஷ் ஜோடியானது ரொம்ப
மகிழ்ச்சியளிக்கிறது. .....அமலாபால்

(எத்தனை நாயகர்களுடன் நடித்தாலும் அமலாபால்...அம்மணி நீங்க தனுஷோட நடிச்சா..ஸ்ருதி...டாப்சி...மாதிரி நீங்க டோலிவுட்-பாலிவுட்ல பெரிய ஆளாகப் போறீங்க...நீங்க நம்ம ஒஸ்தி நடிகரோடு நடிச்சா...ஹி..ஹி...இன்னும் நீங்க நல்லா வருவிங்க...9-தாரா...gun-ஷிகா மாதிரி..)
ஆர்யா - அனுஷ்கா... !
கோலிவுட்டின் ஹாட் பார்ட்டி ஜோடி!
மிட்நைட் பார்ட்டிகள்+டேட்டிங் பாலிவுட் சினிமா உலகில் பிரபலம் இப்போது அதுவும் டெங்கு போல் கோலிவுட்டிலும் பரவுகிறது...நடிகர் ஆர்யாதான் அதற்கு அச்சாரம் போட்டாவர்...முதலில் டாப்சியுடன் கிசுகிசுக்கப் பட்டு....நயன்தாரா வரை தொடர்ந்து...இப்போது அனுஷ்கா வரை.....இப்படி புதுப்புது கலாச்சாரத்தை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தும் அண்ணன் ஆர்யா-வும் அவருக்கு உறுதுணையாக இருக்கும் அம்மனிகளையும் வாழ்த்துவோம்......ஆக தமிழ் சினிமா கலாச்சாரம் இப்போது மும்பாய் தரத்துக்கும்...இன்னும் சிலகாலங்களில் உலகத்தரத்துக்கும் உயரப் போவது உறுதி.
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |