google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: சினிமா 100-தமிழ் சினிமாவுக்கு வந்த ஜுரம்?

Monday, September 23, 2013

சினிமா 100-தமிழ் சினிமாவுக்கு வந்த ஜுரம்?


(குறிப்பு-இது முதல் தமிழ் சினிமா காளிதாஸ் முதல்....இன்றைய 
6 மெழுகுவர்த்திகள் வரை.................... ஒரு சிறு அலசல் )


cinema

சினிமா என்ற அந்தக் குழந்தை பிறந்தபோது முதலில் பேசாமடந்தையாக... அப்புறம் கொஞ்சம் குவா குவா சப்தம்..பிறகு மழலைப் பேச்சு... அதுவும் பக்தி பரவசமாச்சு..அப்புறம் அதுவும் போச்சு..வாலிபனாக அதிரடிவீரன்...கவர்ச்சிக்காதல்...முத்தம்... அப்படியே போய்...இன்று அவனுக்கு நூறுவயது........இங்கேதான் கேள்விக்குறி? இப்போது அவனது நிலை... நிலைமை எப்படி?  

freeonlinephotoeditor

இந்திய சினிமாவுக்குத்தான் நூறு வருடம் ஆகிறதாம்...முதல்முதலாக சென்னைவாசிகளுக்கு 1982-ல்  ஏதோ ஓர் அசையும் உருவங்களை நகரும் படம் காட்டியிருக்கிறார்கள்......1931 ல் ஆர் நடராஜர் முதலியார் என்ற புண்ணியவான் கீச்சக வதம் என்று ஊமைப்படம் காட்டி வதைக்க... 1931-ல்தான் முதல் பேசும்படம் காளிதாஸ் பல மொழிகள் பேசி அங்கே இங்கே என்று டென்ட் கொட்டகைகளில வெளிவந்த உண்மையான தமிழ் சினிமாக் குழந்தை 1912-ல் வெங்கையா நாயுடு கட்டிய கெயிட்டி திரையரங்கில் வளர்ந்து இன்று 2013-ல் நூறு வயதானது.
காளிதாஸ் என்ற முதல் தமிழ் சினிமாவின் கதை......தேசாவதி நாட்டு அரசன் விஜயவர்மன் அரசவையில் உள்ள ஒரு வஞ்சக மந்திரி அரசரின்மகள் இளவரசி(நடிகை டி.பி.ராஜலக்ஷ்மி) வித்யாகரியை தன் மகனுக்கு மனம் செய்வித்து நாட்டை கைப்பற்ற நினைக்க...இளவரசியோ அதை மறுத்து ஆடு மேய்க்கும் ஒரு வாலிபனைக் (நடிகர் பி.ஜி.வெங்கடேசன்) காதலிக்க....அதனால் வஞ்சக மந்திரியால் பல இடையூறுகளை சந்திக்க....துயரத்தில் இளவரசியும் காளிதேவியை நினைத்து வேண்ட...காளிதேவியின் அருளால் அந்த ஆடுமேய்க்கும் வாலிபனும் அறிவிற்சிறந்த கவி காளிதாஸ் என்று மாறிவிட...

http://www.selliyal.com/wp-content/uploads/2013/07/100_years_of_south_cinema.jpg

எந்த நேரத்தில் இப்படி கதை எழுதி படம் காட்ட ஆரம்பிச்சாயிங்களோ...அன்றிலிருந்து....அடுத்து எம்.கே.தியாகராஜ பாகவதர்  மன்மத லீலையை வென்றார் உண்டோ...? என்று உச்சத்தில் ஆரம்பிக்க...அப்புறம் எனக்கு விவரம் தெரிய எம்.ஜி.ஆர்....சிவாஜி...ரஜினி...கமல்...விஜய்...அஜித்.... அன்றிலிருந்து இதே கதையைத்தான் வேறு வேறு கெட்டப்புல இன்னும் படம் காட்டுராயிங்க... அவியிங்கதான் நல்லப் புள்ளைகளாம்...இருந்துட்டுப் போகட்டும் 

http://www.happylounge.net/index.php?attachments/thalaiva4-jpg.2971/

இந்த காளிதாஸ் படம் அந்தகாலத்தில் 8 ஆயிரம் ரூபாய் பட்ஜெட்டில் எடுத்து 75 ஆயிரம் ரூபாய் வசூல் பண்ணி...வெற்றி அறுவடை ஆனால் இன்று நம்ம சினிமா நட்சத்திர நடிகர்கள் 100 கோடி பட்ஜெட் என்று படமெடுத்து...அய்யோடோ...அப்போடோ என்று அலறுகிறாயிங்க.. 

http://kollytalk.com/posters/wp-content/uploads/2013/08/6-Movie-Pre-Release-Poster.jpg

ஆனாலும் இந்த சினிமாவின் நூறாவது வருடம் கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருக்கு... அதிரடி..கும்மாங்குத்து...கவர்ச்சீ கூத்து இல்லாம இப்பலாம் தங்கமீன்கள்...மூடர் கூடம்...  6 மெழுகுவர்த்திகள் என்று வரிசையா புதுசா படம் காட்டுறாயிங்க... என்னத்தக் காட்டி என்னபண்ண...? யாரும் பார்க்கத்தான் மாட்டேயிங்கிராயிங்க...

http://images.desimartini.com/media/versions/main/original/9b78ddcd-f905-4083-90a5-d296b6418656_original_image_500_500.jpg

இந்த சினிமா 100-வது வருடம் தமிழ் சினிமாவுக்கு ஏதும் ஜுரம் வந்துடுச்சா.....? இல்லை தமிழ் சினிமா ரசனைதான் சோரம் போச்சா...?

freeonlinephotoeditor

தங்க மீன்கள் ரொம்ப கஷ்டப்பட்டுத்தான் உயிர் வாழ்கிறது....மூடர் கூடம் முழுசா கூட்டமில்லை.....6 மெழுகுவர்த்திகள் அப்படியொன்றும் அதிக வெளிச்சமில்லை........இப்படியே போனால் 
தமிழ் சினிமாவைப் பிடிச்ச ஜுரம் என்று தீரும்....?
  
    
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1