(தீர்ப்பு-டோலிவுட் மெகா பவர் ஸ்டார் ராம்சரண் தேஜா-பிரியங்கா சோப்ரா இணைந்து நடித்துள்ள தூபான் (தெலுங்கு) திரைப்படம்.... காரசாரமிக்க கிக்கான சிக்கன் மசாலா...என்று போனால் ஏதோ எண்ணை கடத்தல்னு என்னைத்தான் எண்ணையில போட்டு பொரிச்சுப்புட்டாயிங்க...படு பாவிக )
ராம்சரண் தேஜா நம்ம பழைய பேவரிட் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் மகன் என்பதாலும் இப்போதைய தெலுங்கானா பிரைச்சனையால் ஆந்திராவில் இப்படம் போலிஸ் காவலுடன் ஓடுவதாகவும் BIG-B அமிதாபின் இந்தி வெற்றிப்படத்தின் தழுவல் என்றும் கேள்விப்பட்டு படம் பார்க்க போனேன்....ஆனால் சினிமாக் கடவுள் புண்ணியத்தால் முழுசா சிதையாமல் தப்பி வந்துவிட்டேன்
1989-ல் அமிதாப் பச்சனும், ஜெயா பச்சனும் இணைந்து நடித்த, ஜாஞ்சீர் என்ற கற்பனை சூப்பர் ஹீரோ பாலிவுட் படத்தை பாலிஷ் போட்டு....
இயக்குனர் அபூர்வ லகியா இந்தியில் அதே ஜாஞ்சீர் என்ற பெயரிலும் தெலுங்கில் தூபான் என்றும்.........தமிழ்லயும் டப்புறாயிங்க அப்புறம் சைனீஸ்லயும் டப்புறாயிங்க என்று கேள்விப்பட்டு 7 மணி படத்துக்கு 7.15 மணிக்குப் போனால்..ஆரம்பமே சரியில்ல அந்த மால் தியேட்டரின் தியைரங்கின் உள்ளே விடவில்லை.இன்னும் யாரும் வரலைங்க (படம் பார்க்கத்தான்) அப்புறம் 7.30-மணிக்குத்தான் உள்ளே அனுமதிச்சாயிங்க
படம் ஆரம்பிக்கும் போதே...நேர்மையான ACP விஜய் கண்ணா (ராம்சரண் தேஜா) ஹாக்கி மட்டையால் ரோடு மறியல் செய்யும் ஆளுங்கட்சி பிரமுகரை அடித்து நொறுக்க அவருக்கு 22-வது ட்ரான்ஸ்பராக மும்பைக்கு மாற்றப்படுகிறார்
அங்கே ஆயில் கடத்தலை வீடியோ எடுக்கும் ஒரு துணை-தாசில்தாரை மண்ணெண்ணெய் மாபியா கும்பல் ஆட்கள் அவரை பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரிக்கும் காட்சியை மாலா (பிரியங்கா சோப்ரா) பார்த்து நள்ளிரவில் ACP விஜய்க்கு போன் செய்ய...
பல ஆராய்ச்சிக்குப் பிறகு அந்த மாபியா கும்பலுக்கு தலைவன் தேஜா (பிரகாஷ் ராஜ்) என்பதை அறிந்த விஜய் கண்ணாவுக்கு உயர் அதிகாரியால் சஸ்பென்ட் செய்யப்படுகிறார்.
ACP விஜய்-க்கு கிடைத்த ஒரே நேரில் கண்ட சாட்சி மாலாவுக்கு மாபியா கும்பலால் வரும் ஆபத்துகளில் பாதுகாப்பாக அம்மணியை அவரே அவரது துணைவியாக்கி.....
சஸ்பென்ட் முடிந்து பணிக்கு வரும் ACP விஜய் மாபியா தலைவன் தேஜாவை பிடித்து ஆதாரத்துடன் கோர்டில் தண்டனை வாங்கிக் கொடுத்தாரா..? அல்லது தேஜாவை கொன்றாரா...? என்று எனக்கு தெரியவில்லை
சிங்கத்தின் கர்ஜனையையும் சீற்றத்தையும் ஒன்றை டன் அடியையும் கண்ட என்னால் ஆமை வேகத்தில் போகும் தூபான் படத்தின் கிளைமாக்ஸ் வரை பொறுமையாக திரையரங்கில் இருக்க முடியவில்லை
அண்ணேன்..இப்படம் தமிழிலும் மலையாளத்திலும் டப்புராயிங்கலாம் சைனீஸ் மொழியிலும் Chialo Kaxlaug அப்புராயிங்கலாம் (அடேய் சீனாக்காரன்களே..நீங்க லடாக்ல குடைச்சல் கொடுத்தா இப்படித்தான் நாங்க சினிமா மூலம் தப்பு பண்ணி உங்க மண்டையை உடைப்போம் இன்னும் ரொம்பக் குடைச்சல் கொடுத்தா எங்க தலைவா-கிட்ட சொல்லி அதையும் சைனீஸ்ல டப்பி உங்க மூஞ்சில BALL-அடிப்போம் ..ஆங்..) இந்தத் தூபான்-களைவிட நம்ம தலைவர் ஆயிரம் மடங்கு உசத்தியப்பா
தலைவா..நீவே பெத்த கொடுக்கு
thanks-YouTube-by telugufilmnagar
என் உயிரிலும் மேலான இப்பதிவு வாசிகளே! நீங்கதான் இப்படி பல அறுவைப் பதிவுகளை படித்து அனுபவம் இருக்குமே முடிந்தால் யாராவது பொறுமையின் சிகரமான பதிவு வாசிகள் தூபான் படம்பார்த்து முடிவை எனக்கு தெரியப்படுத்தினால்....
***************************************************************
இங்கே.............
சாம்சாங் ஸ்மார்ட் கடிகாரம்-
புதுமையின் புரட்சி
ஆப்பிள் i-watch சாதனம் அதன் சிறப்பு அம்சங்களால் சாம்சாங் ஸ்மார்ட் கடிகாரத்தை 2014-ல் மிஞ்சிவிடும் என்று தொழில்நுட்ப வல்லுனர்களால்...........மேலும்
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |