(குறிப்பு-இது 86-வது ஆஸ்கார் பிறமொழி விருதுக்கு இந்தியாவிலிருந்து பரிந்துரைத்துள்ள தி குட் ரோட் திரைப்படம் பற்றிய சிறப்புப் பார்வை.....)
கியான் கோரியா எழுதி இயக்கிய தி குட் ரோட் இந்திய சினிமா-100 வரலாற்றிலேயே அந்நிய மொழி ஆஸ்கார் விருதுக்குப் பரிந்துரைக்கப்பாட்டுள்ள முதல் குஜராத்தி திரைப்படமாகும்
இத்திரைப்படம் இதற்கு முன்பாகவே சிறந்த படமாக 60-வது தேசிய திரைப்பட விருது பெற்றுள்ளது.
தி குட் ரோட் திரைப்படம் பெயரைப் போலவே ஒரு நெடுஞ்சாலையில் நடைபெறும் மூன்று கதாப்பாத்திரங்களின் உட்கதை கொண்டது......
1-அந்த நெடுஞ்சாலையில்... பப்பு (சாம்ஜி தனா)என்ற ட்ரக் டிரைவர் நோயால் கஷ்டப்படும் தனது பெற்றோர்களுக்குத் தனது காப்பீடு தொகை மூலம் உதவிடப் போலியான ஒரு விபத்தைச் சித்தரித்து இறந்தது போல நடிக்கும் கதையும்...
2-அந்த நெடுஞ்சாலையில்...விடுமுறை சுற்றுலா வந்த நகர்புற டேவிட்-கிரண் (அஜய் கேஹி-சோனாலி குல்கர்னி) தம்பதியினர் தங்கள் மகன் ஆதித்யா(கேவல்)வை தொலைத்து....தேடும் கதையும்...
3-அந்த நெடுஞ்சாலையில்....வசிக்கும் தனது பாட்டியைத் தேடி வந்த ஒரு 11-வயது பூணம் (பூணம் கேசார் சிங்) சிறுமியின் கதையும்
ஆக...மூன்று உட்கதைகளால் ஒன்றுக்கொன்று தொடர்புடையனவாகத் தி குட் ரோட் படத்தின் திரைக்கதை சிறப்பாக உள்ளது.
thanks-YouTube-by cinemasindia
தொழில்நுட்பத்திலும் இப்படம்......... அமிதாப சிங் கேமரா கைவண்ணத்தில் ஒளிரும் காட்சிகள்......ஸ்லம்டாக் ஆஸ்கார் விருது புகழ் ராசூல் பூகுட்டியின் ஒலி சேர்ப்பு திறமையில்...ராஜத் தோலாக்கியாவின் இசை
thanks-YouTube-by cinemasindia
எல்லாவற்றிற்கும் மேலாக தேசிய திரைப்பட மேம்பாட்டு கார்ப்பரேஷன் NFDC நிதி உதவியுடன் ரூ.2 கோடி முதலீட்டில் எடுக்கப்பட்ட மினி பட்ஜெட் படம்......
ரூ.100-மிகப் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட விஸ்வரூபம் படத்தை ஆஸ்கார் பரிந்துரைப் போட்டியில் வீழ்த்திய..தி குட் ரோட்
படத்தை எல்லோரும் வெகுவாகப் பாராட்டியதுடன் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி......முதன் முதலாக ஒரு குஜராத்தி திரைப்படம் ஆஸ்காருக்கு பரிந்துரை செய்யப்பட்டதில் தான் பெருமை கொள்வதாக....தனது ட்வீட்டரில் கீச்சியுள்ளார்
அந்த அளவுக்குத் தி குட் ரோட் படத்தின் சிறப்பு என்ன...?
குஜராத்தி மொழி பேசத்தெரியாத ஒர் இயக்குனர் எடுத்த குஜராத்தி படம்...
தி குட் ரோட் ஆஸ்கார் விருதை வெல்லுமா?
என்ற கேள்விக்கு....2014-மார்ச் 2 அன்று விடை கிடைக்கும்
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
Follow @PARITHITAMIL |