google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: ஜில்லா-வில் விஜயின் பாடல்

Tuesday, October 22, 2013

ஜில்லா-வில் விஜயின் பாடல்

இதுவரை கூகுள்....கூகுள் என்று துப்பாக்கியில் வேகத்துடன் விறுவிறுப்பாகவும் தலைவா-வில் வாங்கண்ணா....என்று குத்துப்பாட்டுமாகவும் பாடிக்கொண்டிருந்த நடிகர் விஜய் ஜில்லா-வில் D.இமான் இசையில் ஸ்ரேயா கோஷல்-வுடன்  பாடப்போவதோ....... நாட்டுப்புற மெலடி 


jilla

மதுரையில் நடைபெறும் கதையாகச் சொல்லப்படும் ஜில்லாவில் விஜய்-காஜல் அகர்வால் நடிக்கும் இந்த காதல் டூயட் பாடலுக்கான வரிகள் கவிப்பேரரசு வைரமுத்துவிடம் இருந்து மதுரை மண்ணுக்கே உரிய காதல் வார்த்தைகளுடன்  பிறக்கின்றன...

freeonlinephotoeditor

மேலும் இப்பாடலுக்கான இசையை ஒரு மாத காலத்திற்கு முன்பே பதிவு செய்து நடிகர் விஜயிடம் கொடுத்து....அவரும் நன்றாகவே பயிற்சி செய்து.....தமிழ் சினிமா வரலாற்றிலேயே இப்படியொரு மெல்லிசையை இதுவரை யாரும் கேட்டிருக்க முடியாது அந்த அளவுக்கு தத்ருபமான பாடலாக இப்பாடல்  இருக்கும் என்று ஊதா கலர் ரிப்பன்....கலக்கல் இசைக்கு சொந்தகாரரான அண்ணன் D.இமான் அடக்கமாக சொல்கிறார்.2007-ல் விஜயின் போக்கிரியும் அஜித்தின் ஆழ்வார் படங்கள் மோதிக்கொண்டதால் பாக்ஸ் ஆபிஸ் வசூல் வேட்டையில் சிக்கல் ஏற்பட்டதால்...ஜில்லா படத்தின் 80% சதவிகித வேலை முடிந்து விட்டாலும்   பொங்கலுக்கு வரும் அஜித்தின் வீரம் படத்திற்குப் பிறகே பிப்பரவரியில் பொறுமையாக வெளிவந்து தனி அறுவடை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

freeonlinephotoeditor

ஆக....குத்துப்பாட்டை கழட்டிவிட்டு காதல் மெலோடி-க்கு இறங்கிவிட்ட விஜயின் செயல்பாடு ஜில்லாவில் விவேகமாக உள்ளது....ஜில்லா இயக்குனர் நேசன் சொல்வது போல்.....இதுவரை நீங்கள் சமீபத்திய படங்களில் பார்த்திராத வித்தியாசமான இளையதளபதியை ஜில்லாவில் காண்பீர்கள் 
ஜில்லா படம் அதிரடி-த்திரிலிங்-காதல்-சென்டிமென்ட் கலவை

freeonlinephotoeditor

(அண்ணேன்... அதெல்லாம் சரிதான்...மதுரையில் நடக்கும் ஜில்லாவின் கதைக்கு பாடல் எடுக்க ஜப்பானுக்கு பறக்கிராயிங்களாமே அப்படித்தான் ஆஸ்திரேலியாவை காட்டுறேன் என்று தலைவா டைரடக்கர் சிட்னி மேம்பாலத்தை காட்டி ஏமாற்றிப் புட்டாரு....இவரு எப்படியோ?)

freeonlinephotoeditor


 
அடேய் தம்பி...இப்ப நாம ஜில்லா-வில் விஜயின் பாடல்  என்று பதிவுக்கு தலைப்பு வைச்சிப்புட்டு ஊரு கதை பேசலையா..அப்படித்தான்..இப்பலாம் நம்ம தமிழ் சினிமா ரசிகர்கள் எல்லோரும் ரொம்பவே கெட்டுப்போயிட்டாயிங்க...  ஆளாளுக்கு கையில ஒரு பிளாக் வச்சிக்கிட்டு இவிங்க பண்ணுற அழிச்சாட்டியம் தாங்க முடியல்ல... 


                           thanks-YouTube-by IndiaGlitz Tamil Movies

அதிலும் இந்த சினிமாப் பதிவருங்க இருக்கிராயிங்களே இவிங்க இப்பலாம் எப்படி படமெடுத்தாலும்   கடிச்சி குதருராயிங்க...இது கொரியா படத்தில சுட்டது என்கிறாயிங்க...இல்லனா ஏதாவது பழைய தமிழ் படம் காப்பி...டீ..என்கிறாயிங்க...

freeonlinephotoeditor

அப்புறம் இந்த ட்வீட்டர்வாதிகளும் முகநூல் வாசிகளும் இருக்கிராயிங்களே தியேட்டரில் படம் ஸ்டார்ட் ஆன அடுத்த நிமிசமே அக்குவேறா ஆணிவேரா கீச்சுராயிங்க........அரசியல்வாதிகள் மதவாதிகள் தொல்லையைவிட இவிங்க லொல்லு தாங்க முடியல...

freeonlinephotoeditor

 

(அண்ணேன்...அதுக்குத்தான் இந்த தடவ இளைய தளபதி ரொம்ப உஷாரா மாலிவுட் மோகன்லாலையும் டோலிவுட் மகத்  ராகவேந்திராவையும் கூட்டு சேர்த்துக்கிட்டு......இங்க இல்லைனா அங்க கலக்கப் போகிறாரு...)
 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1