google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: வணக்கம் சென்னை-வெற்றிக்குக் காரணம்?

Tuesday, October 15, 2013

வணக்கம் சென்னை-வெற்றிக்குக் காரணம்?


(தீர்ப்பு-பஞ்சும் நெருப்பும் பக்கத்தில் வைத்தும் விரசமாக பற்றிக் கொள்ளாத காதலை மிக நேர்த்தியாக காட்சிப்படுத்திய புது இயக்குனரிக்கு வாழ்த்துக்கள்..நல்லதொரு காமெடி காதல் படம் பார்த்த நிறைவு.....)



நமது  கலாச்சாரத்தைப் படம் பிடிக்க லண்டனிலிருந்து வந்த அஞ்சலி (பிரியா ஆனந்த்) யும் தேனியிலிருந்து  IT வேலைக்கு வந்த அஜய் (சிவா) யும் 29/8 என்ற சுடுகாடு முகவரி கொண்ட நாராயணன் (சந்தானம்) என்ற வீட்டுப் புரோக்கரால் ஏமாற்றப்பட்டு ஒரே வீட்டில் தங்க வேண்டிய நிர்பந்தம்...

freeonlinephotoeditor

ஆரம்பத்தில் அவர்கள் டாம் அன்ட் ஜெரி போல் மோதிக்கொண்டாலும் லண்டனில் வேறு ஒரு மாப்பிளைக்கு நிச்சயிக்கப்பட்ட அஞ்சலி மீது  அஜய் காதல் கொள்ள....அவரது காதலுக்கு மீண்டும் வீட்டு புரோக்கர் நாராயணன் காதல் புரோக்கர் பில்லாவாக மாறி உதவி செய்ய.... அஞ்சலியும் அஜய் மீது காதல் கொள்ள.....

freeonlinephotoeditor


அந்த நேரத்தில்  லண்டன் மாப்பிள்ளை தீபக் (ராகுல் ரவீந்திரன்) அஞ்சலியை தேடி சென்னைக்கு வந்துவிட..ஊஞ்சலாடும் அஞ்சலியின் காதல்.........கடைசியில் அஜய்-அஞ்சலி இவர்களின் இந்தக் காலத்துக்கேற்ற கலாச்சாரக் காதல் வென்றதா...? என்பதை அறிந்து கொள்ளத்  திரையரங்கில் பார்க்கவும் 

freeonlinephotoeditor


2.15 மணி நேரம் ஓடக்கூடிய  இப்படத்தின் சிறப்பு  நமக்கு அலுப்புத் தட்டாமல் அதன் இயக்குனர் கிருத்திகா உதயநிதி காமெடிக் காட்சிகளை கதம்ப மாலையாகக் தோரணம் கட்டி படம் முழுக்கத் தொங்க விட்டு இருப்பதே....

காவல் நிலையத்தில் போலிஸ் அதிகாரிகள் மனோ பாலா-ஊர்வசி  செய்யும் கூத்துக்கள்...உண்மையான வீட்டு உரிமையாளர் கலோனல் பாலசுப்ரமணிமாக வரும் நாசர் ..... ஊர்வசி அடிக்கும் லூட்டி...இப்படி படத்தில் நிறைய சொல்லலாம் கடைசியில் தோன்றும் தயாரிப்பாளர் உதயநிதியும் அவர் பங்குக்குக் கலக்கிறார்....ஆனாலும் ஆரம்பத்தில் சில தேவையற்ற காட்சிகளை நறுக்கியிருந்தால் படம் இன்னும் விறுவிறுப்பாக இருந்திருக்கும் 


beach

மிர்ச்சி சிவா.........ரொம்ப நாளைக்குப் பிறகு இந்தப்படத்தில் கொஞ்சம் நடித்திருக்கிறார்...எப்பவும் இவரது முகம் சிரித்த முகமாக..... பளபளப்பாக இருப்பதும்  இந்தப் படத்துக்கு நல்லா பொருந்துகிறது.


priyanand


பிரியா ஆனந்த் இந்தப் படத்தில் நன்றாகவே தேறிவிட்டார்.....நிறைய நடிக்க வாய்ப்பு...அதை உபயோகித்துள்ளார்...இப்படியே போனால்  கவர்ச்சியில் எல்லா நடிகைகளையும் மிஞ்சிவிடுவார்....மார்டன் கதாப்பாத்திரத்திற்கு நன்றாகவே பொருந்துகிறார் 

சந்தானம்.........இப்படத்தில் வித்தியாசமாகத்  தனது ஓட்டவாயை மூடிக்கொண்டு தேவையான அளவு வசனங்களைப் பேசி ஓரளவுக்குத் தனது நடிப்பு பாணியை நிலைநாட்டுகிறார் 


                                      thanks-YouTube-Sony Music India Sony Music India

இப்படத்தின் இசை அனிருத் ரவிச்சந்தர் ....பின்னணி ஏனோதானோ என்று இருக்க......ஒசாக்கா பாடல் மட்டுமே கேட்கும் படி...
ரிச்சர்ட் நாதன் ஒளிப்பதிவு பாடல்களில் அருமை....கிராமங்கள் மற்றும் மலைப் பகுதிக் காட்சிகள் கண்ணைப் பறிக்கின்றன......இயக்குனரின் நல்ல தேர்வு    


                           thanks-YouTube-by Skshabiforce

இப்படம்  முழுக்க முழுக்க மேல் தட்டு படம்......பொழுது போக்கு மட்டுமே முதலிடம் .அனைத்து ஆங்கில வலைதளங்களும் பாராட்ட...கொஞ்ச தமிழ் வலைத்தளங்கள் மட்டுமே எதிர்மறையாக எழுதி உள்ளன...சுமார் 9 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் 4 நாட்களில் 21.5 கோடி(14/10/2013 வரை)  வசூலித்து...வெற்றிப்படம் வரிசையில் வருகிறது 


vanakkamchennai

இப்படி ஒரு காதல் கதையை அதுவும் ஒரு பெண் இயக்குனர் கிருத்திகா உதயநிதி.....நாம்  முகம் சுழிக்காமல்   படம் காட்டியதற்கும் நம்மை 
நய்யாண்டி செய்து வதைக்காமல் விட்டதற்காகவும் பாராட்டலாம் 

உங்கள் பார்வையில்..............

வணக்கம் சென்னை திரைப்படத்தின் வெற்றிக்குக் காரணம் யார்....? 




வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி.........முடிவு-18/10/2013


okok

இயக்குனரிடம் ஒரு கேள்வி.....
ஹி...ஹி...உங்க வீட்டுக்காரர் ஒ.கே.ஒ.கே.உதயநிதியும் நல்ல நடிகர்தானே அப்புறம் அவரை கதாநாயகராக வைத்து.....
வணக்கம் சென்னையை கலக்கு கலக்கு என்று கலக்கியிருக்கலாமே.....?



(யோவ்...பதிவரே! இப்படி எத்தனை பேருயா கிளம்பியிருக்கிங்க...? அப்புறம் 3 படம் இயக்கி கலக்கிய  ஐஸ்வர்யா தனுஷ்......... கொலைவெறி படம் போல் ரொம்ப கலங்கி போய் இருக்கும் ....... அதற்குத்தானே ஆசைப்பட்டாய் குத்தல் தொத்தல் கலக்கல் பதிவரே.......?)   


   
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1