(குறிப்பு-இங்கே சுவைக்க, ருசிக்க சில சினிமா செய்திகள்
1-அஜித்தின் ஆரம்பம் படத்தைப் பாராட்டிய ஷாருக்கான்
2-மீண்டும் சிம்பு-நயன்தாரா இணையும் காதல் சினிமா
3-அனுஷ்கா-இது சினிமா காதல் அல்ல நிஜம்
4-பாலிவுட்டைக் கலக்கப் போகும் அஜித்?.....)
1-அஜித்தின் ஆரம்பம் படத்தைப் பாராட்டிய ஷாருக்கான்
ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான சந்தோஷ் சிவனிடம் உதவியாளராக இருந்த விஷ்ணுவர்த்தனுக்கும் பாலிவுட் பாதுஷா ஷாருக்கானுக்கும் அசோகா படத்திலிருந்து நல்ல பழக்கம் அதிலும் தல அஜித் சிறு வேடத்தில் தலையை காட்டியுள்ளார்
அஜித்தின் ஆரம்பம் படம் முக்கால்வாசி படபிடிப்பு மும்பையில் நடைபெற்றதும் ஆரம்பம் படம் மும்பாய் திரையரங்கங்களிலும் நல்ல வசூல் அறுவடை செய்துக் கொண்டிருக்கின்றது இப்போதும் விஷ்ணுவர்த்தன் அடிக்கடி ஷாருக்கானை சந்தித்து உரையாடுவது உண்டு..அப்போது ஷாருக்கான் அஜித்தின் ஆரம்பம் படத்தின் முன்னோட்டத்தைப் பார்த்தே தான் பிரமித்துவிட்டதாக விஷ்ணுவர்த்தனை பாராட்டியுள்ளார்
(அண்ணேன்...டிரைலர்க்கே இந்தப் பாராட்டு என்றால் படத்தைப் பார்த்தார் என்றால்.......விரைவில் விஷ்ணுவர்த்தன் பாலிவுட் இயக்குனராக பரிணாம வளர்ச்சியடைவார் என்று கோலிவுட் கோழி கூவுது)
2-மீண்டும் சிம்பு-நயன்தாரா இணையும் காதல் சினிமா
பசங்க படம் விருது இயக்குனர் பாண்டிராஜ்... சிம்புவை வைத்து இயக்கும் புதுப் படம் புதுமையான காதல் சினிமாவாகும் அதற்காக மன்மத நடிகர் சிம்புக்கு இணையாக தேவதை போல் ஒரு ரதியை தேடி அலைந்து களைப்படைந்த இயக்குனர் கண்டேன் சீதையை என்பதுபோல் தன் புதுப் படத்தின் கதாநாயகியாக கண்ட தேவதை நயன்தாரா என்று கீச்சி உள்ளார்
(அண்ணேன்...நயன்-சிம்பு இருவருக்கும் உள்ள காதல் கணக்குத்தான் தப்பாப் போச்சி ஆனால் ரசாயனம் அதுதாங்க கெமிஸ்ட்ரி...ரொம்ப சரியாக இருக்கும் என்று தீர்மானித்த இயக்குனர் பாண்டிராஜை படம் ஊத்திக்காம இருந்தா பாராட்டலாம்)
3-அனுஷ்கா-இது சினிமா காதல் அல்ல நிஜம்
thanks-YouTube-by Baahubali Movie
இன்று டோலிவுட்-கோலிவுட் இரண்டையும் கலக்கிக் கொண்டிருக்கும் அனுஷ்காவுக்கும் நிஜத்தில் ஆஹா...காதல் வந்துடுச்சி என்று சமீபத்தில் ஒரு தெலுங்கு தொலைக்காட்சியில் பேட்டியளித்த அம்மணி....காதலன் பெயரை உடம்பில் பச்சை குத்திக் கொள்ள........ இது சினிமா காதல் அல்ல நிஜக் காதல் வேணும்னா என் காதலை வெளிப்படித்த விரலில் மோதிரம் அணிந்துகொள்வேன் என்று சொல்ல........
(அண்ணேன்...இனிவரும் படங்களில் அம்மணியின் நடிப்பை பார்ப்பதை விட்டுவிட்டு.........? அம்மணியின் மோதிர விரலை நீங்கள் உற்றுப்பார்த்தால் ஹா..ஹா..அதற்கு நான் பொறுப்பல்ல)
4-பாலிவுட்டைக் கலக்கப் போகும் அஜித்?.
பாலிவுட்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் விரைவில் வரவிருக்கும் அமிர்கானின் தூம்-3.இதில் அமீர்கானுடன் அபிஷேக் பச்சனும் இணைந்து நடிக்க.......நம்ம கோலிவுட் தல அஜித் அடுத்து வரவிருக்கும் தூம் 4 தொடர் திரைப்படத்தில் இந்த கூட்டணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப் படுகின்றது
ஆரம்பம்படத்தில் தல அஜித்தின் அதிரடி சண்டைக்காட்சிகள் அதிவிரைவு பைக் பாய்ச்சல், கலக்கல் படகு விரட்டல்...இது போன்ற அதீத நடிப்பால் பாலிவுட் ரசிகர்கள் மனதிலும் இடம்பிடித்துள்ளார் சிறந்த கார்-பைக் பந்தய வீரரான அஜித்தையும் அதீத செயல்களில் அவரது சீரிய ஈடுபாட்டையும் கண்டுணர்ந்த பாலிவுட் திரையுலகம் அவரை தங்கள் படங்களில் ஜான் ஆபிரகாம், ரித்திக் ரோஷன் அமீர் கான்...போன்று பயன்படுத்திக் கொள்ள நினைப்பதில் தவறில்லை
(ஆக...அண்ணேன்....ஆரம்பம் படம் தல அஜித்தின் சினிமா வாழ்க்கைக்கு மீண்டும் ஒரு நல்ல ஆரம்பம் ஆனது.........அடடா...ஆட்டம் ஆரம்பமே)
அப்பாடா...பதிவின் தலைப்புக்கு ஏற்ப பதிவின் முதலிலும் கடைசியிலும் தல பற்றிய செய்தியை கொடுத்து..........
இதுபோன்ற சினிமா துக்கடா செய்திகளையும்
சுவையான பக்கோடா நொறுக்குத்தீனியையும்
உடனடியாக விலையில்லாமல் வாங்கிட.....?
இங்கே சமுக வலைதளங்களில்
இணைந்துகொள்ளுங்கள்...
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |