google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: இரண்டாம் உலகம்-எப்படியிருக்கும்...?

Wednesday, November 20, 2013

இரண்டாம் உலகம்-எப்படியிருக்கும்...?
















(குறிப்பு-இங்கே செல்வராகவனின் இயக்கத்தில் ஆர்யா-அனுஷ்கா நடிப்பில் விரைவில் வரவிருக்கும் இரண்டாம் உலகம் திரைப்படம் பற்றிய எதிர்பார்ப்பு எகிறச் செய்யும் செய்திகளும்....இப்படம் எப்படியிருக்கும்? என்ற கருத்துக்கணிப்பும்)

Made with .freeonlinephotoeditor.com

இந்திய சினிமாவில் முதல் முறையாக வரும் புதுமையான காதல் பேண்டஸி திரைப்படம் என்பதைவிட திரையில் பார்வையாளர்களுக்கு வித்தியாசமான அனுபவங்களை ஊட்டுவதில்  வல்லவரான செல்வராகவனின் எழுத்திலும் இயக்கத்திலும் வரும் அவரது 7 வருட கனவுப்படம்....இரண்டாம் உலகம்  


எப்பவும் சொதப்பல் நடிப்பு என்றிருந்த நடிகர் ஆர்யாவும் நானும் நல்ல நடிகண்டா என்று இயக்குனர் பாலாவின் நான் கடவுள் படத்தில் தன் திறமையைக் காட்டி இயக்குனரின் நடிகர் என்பதை நிருபித்த ஆர்யாவுக்கும் அவரது  வித்தியாசமான நடிப்பை காட்ட உடலை வருத்தி சிக்ஸ்-பேக் கட்டமைப்புடன் தோன்றும்  படம்  இரண்டாம் உலகம்

ஆட்டம் பாட்டம் என்று தனது இளமை துள்ளலாலும் நடிப்பாலும்  கோலிவுட்-டோலிவுட்  ரசிகர்களை கிறங்கடிக்கும் கனவுக்கன்னி அனுஷ்கா அதிரடி சண்டைக் காட்சிகளிலும் கிளுகிளுப்பூட்டும் ஆட்டத்தாலும் ஏகத்துக்கு ரத்த ஓட்டத்தை எகிறச் செய்யும்......இரண்டாம் உலகம் 


அதே நேரத்தில் அம்மணியோ இப்படத்தின் கதைக் கருவை....(காதலுக்காக எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் போகலாம்)  விரும்பியதால் தான்  100%  கடினமாக உழைத்ததாகவும் தான் ஒரு ரசிகையாக இப்படத்தை பெரிதும் நேசிப்பதாகவும்   இப்படத்தால்தான் தானும் காதலில் விழுந்தேன் என்றும் நமக்கு படம் காட்டுகின்றார்

                            thanks-YouTube-by Sony Music India

இப்படத்தின் பாடல்களுக்கு  ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க பின்னணி இசையை அனிருத் மீட்ட  இரண்டு இசையமைப்பாளர்களும் ரசிகர்களை  இன்னொரு இனிய உலகில் சஞ்சரிக்கச் செய்வதுஉறுதி SPB பாடிய என் காதல் தீயே பாடலும் தனுஷ் பாடிய பனங்கள்ளு...பாடலும் மட்டுமின்றி அனைத்துப் பாடல்களும் இசைப்பிரியர்களால் பாராட்டு பெற்றிட...இதன்  இசை சவுண்ட் ட்ராக் இந்திய i-Tunes வரிசையில் முதலிடம் பிடித்தது. 



ஒரு ஓவியரின் வண்ணக் கலவைத்தட்டு போன்று பல வண்ணங்களின் கலவையாக இன்னொரு வண்ண உலகத்தை காட்டியுள்ளதாக பெருமைப்படும் இப்படத்தின் ஒளிப்பதிவார் ராம்ஜியின் கைவண்ணத்தை  படத்தின் முன்னோட்டமும் படம் உருவாக்க காணொளிக்  காட்சியும்  இப்போதே பிரமிப்பூட்டும் இரண்டாம் உலகத்தை நம் கண்முன் நிறுத்துகின்றது இப்படத்தின் முன்னோட்டம் அதிவிரைவில் 1.2 மில்லியன் பார்வைகள் பெற்றது குறிப்பிடத்தக்கது

                                thanks-YouTube-by PVP Cinema

உலகளவில் 1200 திரைகளில் வெளியிடப்படும்    இப்படம் தமிழ் மட்டுமல்லாது ஹிந்தி,ஜோர்ஜியன்,ரஸ்யன்,உஸ்பெக்,துருக்கி... மொழிகளில் டப்பிங் செய்யப்படுவதும் வருண என்ற பெயரில் தெலுங்கில் உருவாக்கப்பட்டதும்  இப்படத்தின் பிரமாண்டத்திற்கு எடுத்துக்காட்டு

anushka

இப்படத்தின் பேரும் பகுதி பிரேசில் காடுகளிலும் அதன் தலைநகரான மழையும் கடலும் சூழ்ந்த உலகின் மிகவும் அழகு மிளிரும் தொன்மையான  ரியோ (RIO) நகரத்திலும் கோவா கடல் பகுதிகளிலும் காட்சிகள் சுடப்பட்டு நமக்கு பிரமிப்பூட்டும் இந்த இரண்டாம் உலகத்தை காட்ட இருக்கிறார்கள் 

                           thanks-YouTube-by Sony Music India

காதல் திரைப்பட இயக்குனராக காதல் கொண்டேன் படம் மூலம் பிலிம்பேர் சிறந்த இயக்குனர் விருது வாங்கிய  இயக்குனர் செல்வராகவனுக்கு ஆயிரத்தில் ஒருவன் படத்திற்குப் பிறகு இரண்டாம் உலகம் இரண்டாவது பேண்டஸி  படமாகும் 7 ஜி ரெயின்போ காலனி,மயக்கம் என்ன போன்ற காதல் படங்களாலும் ரசிகர்களை கவர்ந்த செல்வராகவனின் சோழ சாம்ராஜ்யம் பற்றிய பேண்டசி திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன் விமர்சகர்களின் போற்றலுக்கும் தூற்றலுக்கும் ஆளானது..........


பதிவுலக நண்பர்களே!   
இதுவரை நீங்கள் அறிந்து கொண்ட  இரண்டாம் உலகத்தின் முன்னோட்டம்  பரபரப்பான செய்திகள் மூலம்.........
உங்கள் பார்வையில்............. 

இரண்டாம் உலகம்-எப்படியிருக்கும்...? 


வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி....முடிவு=21/11/2013

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1