google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: விஜய் வசந்தின் என்னமோ நடக்குது

Thursday, November 07, 2013

விஜய் வசந்தின் என்னமோ நடக்குது


சென்னை 28 கலக்கல் நடிகர்களில் ஒருவரான விஜய் வசந்த் தனது மதில் மேல் பூனையின் மாபெரும் தோல்விக்குப் பிறகு திரையுலகில் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள   நினைக்கும் படம்.........என்னமோ நடக்குது 

ennamonadakuthu

 

சென்னை 28 படத்தில் தனது நண்பர்கள் வற்புறுத்தலுக்காக கிரிக்கெட் வெறியர் கோபியாக  நடித்த விஜய் வசந்த்......தனது வித்தியாசமான நகைச்சுவை கலந்த சோக நடிப்பால்  பார்வையாளர்களைக் கவர்ந்த அவர் தோழா...சரோஜா போன்ற படங்களில் தலையைக் காட்டினாலும் நாடோடிகள் படத்தில்  நண்பனின் காதலுக்காக தன் ஒரு காலை இழந்த சந்திரனாகவும்  நடித்து தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார் 

vijayvasanth

மீண்டும் அவர் கனிமொழி...மங்காத்தா-வில் தலையைக் காட்டினாலும் இயக்குனர் ஷங்கரின் நண்பன் படத்தில்கல்லூரி முதல்வர் சத்யராஜின் டார்ச்சரால் தற்கொலை செய்துகொள்ளும் பன்னீர் செல்வமாக வந்து எல்லோருடைய பரிதாபத்தையும் பெற்றுக்கொண்டார்.

Made with .freeonlinephotoeditor.com

எவ்வித ஹீரோயிசமும் இல்லாமல் தனக்கென்று ஒரு நடிப்பு பாணியை வைத்திருக்கும் விஜய் வசந்தின் மதில் மேல் பூனை அவரது இயல்பான நடிப்பையும் மீறி சரியான திரைக்கதை இயக்கம் இல்லாமல் தோல்வியை அடைந்தது 

ennamonadakuthu

அதனால் அவரது என்னமோ நடக்குது படத்தில் அதிரடியும் காமெடியும் கலந்த சரியான காதல் த்திரிலர் கதையை தேர்ந்தெடுத்தது மட்டுமல்லாமல்   இயக்குனர் மணிரத்தின் உதவியாளர் ராஜபாண்டியை இயக்குனராகவும் தேர்வு செய்துள்ளதாக சொல்கிறார் இளம் தயாரிப்பாளர் வினோத்குமார்

Made with .freeonlinephotoeditor.com

என்னமோ நடக்குது திரைப்படத்தின் இன்னொரு சிறப்பு அப்படத்தில் ரகுமான்- பிரபு முக்கிய வேடங்களில் நடிப்பதும் தேசிய விருதுகள் பெற்ற தம்பி ராமையா-சரண்யா  இருவரும் காமெடியில் கலக்குவதும் ஆகும் 

Made with .freeonlinephotoeditor.com

என்னமோ நடக்குது திரைப்படம் பார்வையாளர்களுக்கு ஒரு நாவல் படத்த உணர்வு தரும் என்று சொல்லும் விஜய் வசந்த் இப்படத்தில் அவர் சுவர்களில்போஸ்டர் ஓட்டும் வடசென்னை இளைஞனாக நடித்துள்ளதாக சொல்கிறார்.

mahima


மேலும் இப்படத்தின்  கதாநாயகி மகிமா ஒரு நர்சாகவும் ரகுமான் அரசியல்வாதியாகவும் பிரபு பிஸ்னஸ்மேனாகவும் நடித்துள்ளதாகவும் சொல்லும் விஜய் வசந்த் தனது திறைமை அத்தனையும் இப்படத்தில் மிளிரும் என்று உறுதியளிக்கின்றார் 

                               thanks-YouTube-by IndiaGlitz Tamil Movie

என்னமோ நடக்குது படத்தில் பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ளார் இப்படத்தில் வரும் தி மணி புரோமோ பாடல் பிரபலமாகும் என்று சொல்லும் பிரேம்ஜி நடிகை சரண்யாவை  முதன் முதலாக ஒரு குத்துப்பாடலும் பாடவைத்துள்ளார்

எது எப்படியோ....என்னமோ நடக்குது என்று அசால்ட் ஆறுமுகமாக இல்லாமல் விஜய் வசந்த் இந்தப் படத்திலாவது தன் நடிப்பை நிலைநாட்டி...வெற்றிபெற வாழ்த்துவோம் 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1