எங்கேயோ படித்த நியாபகம். மேடையில் பேசும் போது எதிரில் அமர்ந்திருக்கும் பார்வையாளர்களை அறிவாளிகள் என்று நினைத்தால் பேசுபவருக்கு எதுவும் பேச முடியாதாம் அவர்கள் அத்தனை பேரும் முட்டாள்கள் அவர்களுக்கு எதுவும் தெரியாது என்று நினைத்தால்தான் பேச்சாளனுக்கு வாயிலிருந்து வார்த்தைகள் வடியுமாம்
பொதுவாக இந்தப் பேச்சாளர் தத்துவத்தை சரியாகக் கடைபிடிப்பவர்கள் அரசியல்வாதிகளாகத்தான் இருக்கும் அவர்கள்தான் மக்களை மடையர்களாக நினைத்துக்கொண்டு எதையாவது பேசுவார்கள்...இப்போதெல்லாம் அவர்கள் மேடையில் அது அரசியல் மேடையாக இருந்தாலும் திருமண மேடையாக இருந்தாலும் அல்லது சுடுகாட்டில் எழவு மேடையாக இருந்தாலும் ஒரு குட்டிக்கதைசொல்லவில்லை என்றால் அவர்களுக்கு தூக்கமேவராது
அவர்கள் மனிதர்களுக்குச் சொல்லும் அந்தக் குட்டிக்கதைகளில் எந்த உருப்படியான தத்துவமும் இருக்காது ஆனால் பஞ்ச தந்திரக்கதை போல பல்வேறு மிருகங்கள் நாய்..நரி..சிங்கம்...புலி...கரடி என்றுஅனைத்தும் வந்து ஊளையிடும் ...குறைக்கும்...கதைக்கும் அவர்கள் கதை சொல்லி முடிந்ததும் எதிரில் அமர்ந்திருக்கும் அறிவாளிக்கூட்டம் காதைக் கிழிக்க கைகளைத் தட்டும்
இன்று எழுத்தாளர்களுக்கும் இந்த அரசியல்வாதிகளின் நோய் பற்றிக்கொண்டது இவர்கள் எழுத்துக்களில் மேல்நாட்டு அறிஞர்கள்,எழுத்தாளர்கள்,தத்துவவாதிகள்... இப்படி சிலரது கோட்பாடுகள் மிளிரும் ஈ..அடிச்சான் காப்பியாக.....படிப்பவர்கள் அத்தனை பேரும் அடிமுட்டாள்கள் என்று நினைத்து எழுதுவார்கள் அவர்களுக்கு என்று ஒரு வாசகர் வட்டம் அவர்களே உருவாக்கிக் கொள்வார்கள்
இப்படிப்பட்டவர்கள் சாதாரண எழுத்தாளர்கள் என்பவர்களை விட முற்றிலும் வேறுபாடு மிக்கவர்கள்......சைகோ எழுத்தாளர்கள்
தாங்கள் எழுதுவதுதான் எழுத்து என்று நினைப்பவர்கள் அதைப் படிப்பவர்கள் எல்லாம் பைத்தியக்காரர்கள் என்று நினைப்பவர்கள்
இப்படி நிறைய சொல்லிக்கொண்டு போகலாம்
என்னைப் பொறுத்தளவில்
இந்த உலக சிக்கலுக்கு காரணம்
இந்த அறிவாளிகள் அல்ல........
இவர்களின் எழுத்துக்களைப் படிக்கும் முட்டாள்கள்தான்
படைப்பாற்றல் என்பது பெரும்பாலான எழுத்தாளர்களை ஆய்வு செய்ததின் படி பெரும்பாலும் ஒரு மனநோய் பகுதியாக உள்ளது அதிகப்படியான எழுத்தாளர்கள் கவலை,மூளைக்கோளாறு,மன அழுத்தம் போன்றவற்றால் பாதிப்படைந்தவர்கள்
படைப்புத் தொழிலில் இருப்பவர்கள் மற்றவர்களை விட உளவியல் கோளாறுகளால் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர் அதிலும் இந்தப் படைப்பிலக்கியவாதிகள் பசியின்மை,மன இறுக்கம்,...இன்னும் அதிக அளவில் ஆட்டிசம் என்ற மன இறுக்கம் (autism) நோயால் பாதிக்கப்படுகின்றார்கள்
கவிஞர்களும் இதற்கு விதிவிலக்கல்ல..........
அதிகமாகப் பாதிக்கப்படுபவர்கள் கவிஞர்களும் அவர்களது கவிதைப்படைப்புகளும்.....ஆங்கிலக் கவிஞர்களில்
பைரன் ஒரு மோசமான,பைத்தியமான ஆபத்தானவர்......கீட்ஸ் காதல் நோயால் அலைக்களிக்கப்பட்டவர்...... சில்வியா ப்ளா...அதீத சிந்தனையால் தனது வாழ்வை முடித்துக்கொண்டவர்
இப்படிப்பட்டவர்கள் எழுத்தாளர்களாக கவிஞர்களாக தமிழ் மொழியிலும் நிறைய உண்டு அவர்கள் யார் என்று நான் உங்களுக்கு சொல்லித் தெரிவதற்கில்லை
மன அழுத்தம்,பைத்தியக்காரத்தனம்,குழப்பம் (Depression, madness and insanity) இவைகள் மட்டுமே அவர்களின் எழுத்துக்களில் இருக்கும் இப்போது நமது தமிழ் ஊடகங்கள் இவர்களை தீனிபோட்டு தங்கள் சுயநலத்திற்காக வளர்க்கின்றன
எப்படி அரசியல்வாதிகள் பேசக்கூடாததை பேசியும் செய்யக்கூடாததை செய்தும் ஆட்சி அரியாசனத்தை கைப்பற்ற நினைக்கின்றார்களோ அல்லது கைப்பற்றிய ஆட்சியை தக்கவைக்க நினைக்கின்றார்களோ......சைகோ அரசியல்வாதிகள்
அப்படியே இங்கேயும் இருக்கின்றார்கள் சில எழுத்தாளர்கள் எழுதக்கூடாததை எழுதியும் சிந்திக்ககூடாததை சிந்தித்தும் தாங்கள் ஒரு சிறந்த எழுத்தாளர்கள் என்ற இடத்தை பிடிக்கவும் அல்லது பிடித்த இடத்தை தக்கவைத்துக்கொள்ளவும்........சைகோ எழுத்தாளர்கள்
ஓர் இனத்தின் உயிர் - மொழி
அந்த மொழியின் உடல் - எழுத்து
எழுத்தாகிய உடல் இல்லையேல்,
மொழியாகிய உடல் அழியும்...........என்பார் அறிவுடையார்
எந்த மொழியால் எழுதி பிழைக்கின்றானோ
அந்த மொழியை அழிக்க நினைப்பவன்
உண்ட வீட்டுக்கே இரண்டகம் நினைப்பவன்...என்றும் அறிவிலான்
(அண்ணேன்....நீங்க என்ன அண்ணேன்...இப்படி சுற்றி வளைச்சு நீட்டி முழக்கீறீங்க .......
இவரப் பாருங்க நச்சுனு...பொட்டுல அடிக்கிறாரு....
thanks-YouTube_by priyasaravan
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |