(தீர்ப்பு-இரண்டாம் உலகம்-இயக்குனர் செல்வராகவனை ஒரு புறம் இந்திய ஜேம்ஸ் கேமரூன் என்று அழைக்க வைக்கின்றது இன்னொரு புறம் அட... என்னக் கொடுமையடா இங்கே அதிமேதாவி பார்வையாளர்களுக்கு மட்டுமே படம் காட்டும் இப்படியும் ஓர் அதிமேதாவி இயக்குனரா...? என்று நம்ம தலையை சொரிய வைக்கிறது....)
கதை...காதல் புனிதமானது காதலுக்காக எவ்வளவு தூரம்...? வேண்டுமானாலும்....... இன்னொரு உலகம் இருந்தால் அங்கேயும் போய் அலையலாம் என்பதை இப்படி பிரமாண்டமாக சொல்லியிருக்கின்றார்
இது இயக்குனரின் கனவு படம் என்றார் ஆனால் அவர் பகலில் கனவு கண்டாரோ..? ஒரு சரியான கோர்வை இல்லாமல் துண்டு துண்டாக படம் காட்டுகின்றார் கடைசியில் மூன்றாம் உலகம் என்று இன்னொரு கனவுப் படத்திற்கு அஸ்திவாரம் போட்டு வைத்துள்ளார்.......சுருக்கமாகச் சொல்வதென்றால் இதுதான் இந்தப் படத்தின் கதை என்று கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் என்று பார்வையாளர்களுக்கு புதிர் போடும் வேலையை செய்துள்ளார்
செல்வராகவன் அண்ணேன்...படத்தின் கதையை சரியாகச் சொல்பவருக்கு ஆயிரம் பொற்காசு என்று அம்மா விடம் சொல்லலாமா...? அம்மா என்று நான் சொன்னது எங்க அம்மாவோ...? உங்க அம்மாவோ..? அல்லது தமிழ் நாட்டு அம்மாவோ..? அல்ல இது படத்தில் வரும் 18 வயது அழகான சாமி அம்மா... அம்மம்மா.....
படம் துவங்கும் போது...இந்தப் பெரிய பிரபஞ்சத்தில் பல கோடி பூமிகள் உள்ளது என்றும் இறப்புக்குப் பிறகு பிறப்பு உள்ளது என்றும் சில அதிமேதாவிகளின் புரியாத வார்த்தைகளைச் சொல்லி அதையும் குழந்தைகள் கார்டூன் போன்று படம் காட்டி......ஆர்யா தண்ணீருக்குள் மயங்கியபடி நடந்த நிகழ்வுகளை நினைத்துப் பார்க்கும் (காக்க காக்க சூர்யா மாதிரி...) ஆரம்பிது பயங்கர எதிர்பார்ப்புடன் நகர்கின்றது
நாம் வாழும் முதல் நிஜஉலகம் என்றும் சாசுவத (ETERNAL) இரண்டாம் உலகம் என்று இன்னொரு உலகம் அங்கேயும் இங்கேயும் எங்கேயும் இரண்டு ஆர்யா..க்கள் -இரண்டு அனுஷ்கா..க்கள் காதல் மோதல் ஊடல் என்று மாறிமாறி....... நிறைய எதிர்பாராத திருப்பங்களுடன் இடைவேளை வரைக்கு விறுவிறுப்புடன் வந்தப் படம்........
இடைவேளைக்குப் பிறகு முழுக்க இரண்டாம் உலகம் இரண்டு ஆர்யா...க்கள் ஆனால் ஒரு அனுஷ்கா என்று காதல் தொடர்ந்து.....கடைசியில் கிளைமாக்ஸ் ஒரு மிகப்பெரிய திருப்பம்
என்ன திருப்பம் என்று தெரிந்துகொள்ள வேண்டுமா...? ஹா...ஹா.. திரையில் போய் திரும்பிப் பாருங்கள்
அனால்..ஓன்று மட்டும் நிச்சயம்...இரண்டாம் உலகம் படம் பார்த்தீர்கள் என்றால் வெள்ளித் திரையில் ஒரு காதல் ஓவியத்தை காண்பீர்கள் நீங்கள் ஒரு வித்தியாசமான ஓவியக் கண்காட்சியை பார்த்த உணர்வை நுகர்வீர்கள் ஒரு மாய உலகத்தில் சஞ்சரித்த பிரமையில் மிதப்பீர்கள்
thanks-YouTube-by PVP Cinema
இப்படத்தின் கதையைவிட சிறப்பூட்டும் காட்சிகள் நிறைய உள்ளன....
முதல் உலகத்தில் வரும் மருத்துவக் கல்லூரி புரபசர் அப்பாவித்தனமான மது (ஆர்யா-1)வின் உதவும் நெஞ்சத்தைக் கண்டு காதல்கொள்ளும் டாக்டர் ரம்யா (அனுஷ்கா-1) வில் வசீகரிக்கும் அழகு ...முதலில் மறுக்கும் மது பிறகு ரம்யாவை விரட்டி விரட்டி கோவா வரை சென்று காதலிக்கும் காட்சிகள்
இரண்டாவது உலகத்தில் வரும் வீரமில்லாத ஆனால் வீரமான மாறன் (ஆர்யா-2 ) அதி வீரமான வர்ணம் (அனுஷ்கா-2) வுடன் செய்யும் காதல் சேட்டைகள் நல்ல நகைச்சுவை
காளான் பொறுக்கும் அனுஷ்கா-2 அவதார் படத்தில் வரும் விசித்திர புலி போன்ற மிருகத்தை காலால் பந்தாடுவதும் ஆர்யா சிங்க உடலும் மனித முகமும் இறக்கைகளும் உள்ள விசித்திரமான பறக்கும் சிங்கத்தை வேட்டையாடுவதும் சிரிப்பூட்டும் நல்ல சண்டைக்காட்சிகள்
பனிப்பொழிவு காட்டுக்குள் இரண்டு ஆர்யாக்களும் ஒரு அனுஷ்காவும் அம்மா சாமியை மீட்டு வரும் காட்சிகளும் அங்கே ஆர்யா-2 வும் அனுஷ்கா-2 வும் கட்டிப்பிடித்து ராட்டினம் சுத்தும் முதல் காதல் உருவான காட்சியும்...காண்பவர்களுக்கு கிளுகிளுப்பூட்டும் அருமை
கடைசியில் ஆர்யா-1 மூன்றாம் உலகத்தில் அனுஷ்கா-3 வை சந்திப்பது அடடா...அடுத்து வருது வருது மூன்றாம் உலகம்னு ஒரு படம் வருது........டே என்று நம்ம மூளைக்கு எட்டச் செய்வதில் இயக்குனர் எங்கேயோ போய்விட்டார்
...... இப்படி நிறைய வண்ணமயமான த்திரிலிங்-கம்-சிரிப்பு காட்சிகளுக்கு பஞ்சமில்லை
சில நேரங்களில் இயக்குனரை பாராட்ட தோன்றுகிறது ஆனால் பல நேரங்களில் யாரோ மனநல மருத்துவர் இயக்குனருக்கு தெரியாமல் தனது ஸ்கிரிப்டை மாத்தி வச்சிப்புட்டாரோ...? அப்படின்னு....
thanks-YouTube-by Tibban Sf
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் கனிமொழியே....பாடல் நல்ல காமெடி அதே நேரம் காதல் தீயே...பாடல் நல்ல காதல் மெல்லிசை பழங்கள்ளு....பாடல் தேவதாஸ் வகை ஆனாலும் அதுகாட்டுவதோ இரண்டாம் உலகத்து புதுமையான டாஸ்மாக் பார்...அனிருத்தின் பின்னணி இசையோ பல நேரங்களில் காதில் ஒப்பாரி ஓலமிட்டாலும் சில நேரங்களில் இனிமை
(அது சரி...அண்ணேன் நீங்க என்ன சொல்ல வர்ர்ர்ர்ரீங்க...படம் நல்லாயிருக்கா? பார்க்கலாமா...? அத்த சொல்லாம என்ன சொல்ல வாருறீங்க...? எதுவும் புரிய மாட்டேன்கிறதே....)
ஆமாம்...எனக்கு மட்டுமல்ல இரண்டாம் உலகத்திற்குள் நுழையும் முதல் உலக ஆர்யா பிரமிப்பால் மிரண்டு போய் ஒன்னும் புரியலையேனு இப்படித்தான் சொல்வார்...? அப்புறம் போகப் போக அவருக்கு எல்லாம் புரிந்துவிடும் இன்னும் அடுத்து மூன்றாம் உலகத்தில் ஒரு அனுஷ்காவை பார்த்து இன்னும் அதிகம் குழம்பிப் போவார்....
நான் ஒருதடவை பார்த்ததால் எனக்கு இந்தக் குழப்பம் என்று நினைக்கின்றேன் செல்வராகவன் கண்ட கனவை புரிந்துகொள்ள குறைந்தது ஆறு அல்லது ஏழு தடவைகள் இரண்டாம் உலகம் படத்தை அதிலும் திரையரங்கில் பார்த்தால்தான் புரியும் என்று நினைக்கின்றேன்.....ஆனால் நண்பர்களே கொடுத்த காசுக்கு வீண் போகாது..வண்ணமயமான இன்னொரு உலகத்தை காட்டுராயிங்க...அதை DVD யில் பார்த்தால் பிரயோசனமில்லை
அதனால்.......
பதிவுலக நியாயன்மார்களே!
நீங்கள்தான் அதிமேதாவிகளாச்சே....
என் குழப்பத்தை தீர்க்க....
நீங்கள் படம் பார்த்துவிட்டு வந்து
இங்கே சொல்லுங்கள்
இரண்டாம் உலகம் படம் எப்படியிருக்கு....?
வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி.......முடிவு-29/11/2013
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |