ஒருபுறம் காதல் கவர்ச்சி கிளுகிளுப்பு காட்சிகளால் பார்வையாளர்களை மூச்சு முட்ட வைத்து திக்கு முக்காட வைக்கும் ரன்வீர் சிங்-தீபிகா படுகோன் காதல்....
இன்னொரு புறம் இரண்டு சமூகங்களுக்கிடையில் நிலவும் பகைமையின் அடையாளமாக நிலவும் துப்பாக்கி வன்முறைக் காட்சிகளின் கலவையாகவும் உள்ள படமே.....கோலியோன் கி ராஸ்லீலா ராம்-லீலா
ஷேக்ஸ்பியரின் ரோமியோ-ஜூலியட் காதல் காவிய நாடகத்தின் தாக்கம் தந்த ஆக்கம் என்று சொல்லும் ராம் லீலா படத்தின் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி நாடத்தன்மையை விரட்டியடிக்க பல வண்ணமயமான காட்சிகள்,பாடல்கள்,இசை,வன்முறைச் சண்டைகள்,பிரமிக்கவைக்கும் உடை அலங்காரங்கள்...போன்ற மசாலா சினிமாத்தனங்களால் பிரமாண்டத்தைக் காட்டியுள்ளார்
500 ஆண்டுகள் பகைமையுள்ள இரண்டு சமுகத்தை சேர்ந்த ராம் (ரன்வீர்)-லீலா (தீபிகா) இருவரும் முதல் பார்வையிலையே காதலில் விழ...ஆனால் அவர்களது காதலுக்கு மேலும் சிக்கலாக பல கொலைகள் சண்டைகள் என்று தொடர...ராம் தனது தந்தைக்குப் பதிலாக அவரது சமுகத்தின் டான் ஆவதும்.....லீலா அவளது தாய்க்குப் பதிலாக அவளது சமுகத்தின் தலைவி ஆவதும்.....இப்படி சிக்கல் மேல் சிக்கலாய் விக்கலில் தவிக்கும் ராம்-லீலா காதல் வென்றதா....? என்பதுதான் கதை
படம் ஆரம்பிக்கும் போது ராம் சமூகத்தைச் சேர்ந்த ஒரு சிறுவன் லீலா சமுகத்தைச் சேர்ந்த இன்னொருவர் மீது உச்சா பண்ண.. அவனோ அந்தச் சிறுவனை விரட்டி விரட்டி சுடும் காட்சி... அதனால் உண்டாகும் சமூகக் கலவரம் என்று திகிலுடன் ஆரம்பிக்கும் படம் கடைசி வரை அதே தீ பிடிக்கும் பயங்கர பகை உணர்வுடன் செல்வதும்..............
அதுபோலவே ராம் ஆட்டம் பாட்டத்துடன் அறிமுகமாகி லீலாவை சந்தித்து...முதல் சந்திப்பு முதல் முத்தம் என்று முத்தமிடும் காட்சியில் துவங்கும் படம் கடைசிவரையில் அதே பற்றிக்கொள்ளும் காதல் உணர்வுடன்......
இப்படி விறுவிறுப்பாக கதை சொல்லும் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி பாராட்டப் படவேண்டியவர்
படத்தின் காவியத் தன்மைக்கு உதய்பூர் அரண்மனை, கங்கார் காட்..என்றும் பிரமாண்டமான அரங்குகள் அமைத்தும் காட்சிகளுக்கு உயிரோட்டம் தர நிறையவே மெனக்கெட்டுள்ளார் இயக்குனர்...துப்பாக்கி முனையில் காதலர்கள் சந்திப்பு அப்படியே துப்பாக்கி முனையில் காதலர்கள் பிரிவு...நல்ல இயக்கம்
ராமாக நடித்துள்ள ரன்வீர் சிங் தனது கட்டுமஸ்தான உடல் அமைப்பாலும் இளமைத் துடிப்பாலும் ரோமியோ வேடத்திற்கு கனகச்சிதமாக உள்ளார்.
அப்படித்தான் கரீனா கபூரைத் தள்ளிவிட்டு லீலா வேடத்திற்கு இடம் பிடித்த அம்மணி தீபிகாவும் சரியானத் தேர்வு பால்கனி காட்சியில் மட்டுமின்றி ரன்வீர் அம்மணி தீபிகாவைக் காணும் போதெல்லாம் இளமைத் துள்ளலுடன் இருவர் உதடுகளும் ஒட்டிக்கொள்வது இருவருக்கும் ஏதோ கெமிஸ்ட்ரி என்பாயிங்களே அது எது? இதுதானோ?....போதாதக்குறைக்கு பிரியங்கா சோப்ராவின் போதையூட்டும் கவர்சிக் குத்தாட்டம் வேறு...
thanks-YouTube-by Eros Now
படத்தில் நம்ம ஊரு சொர்ணக்காக்கள் நூறு பேரை ஓன்று சேர்த்தால் எப்படியோ அப்படி ஒரு தாரகை வில்லி கதாப்பாத்திரம் லீலா வின் அம்மாவாகவும் அவளது சமுக தலைவியாகவும் வரும் சுப்ரியா பதாக் கபூரின் கொடூர நடிப்பும் ஆச்சரியமூட்டும் உருவமும்
thanks-YouTube-by Eros Now
பன்சாலி-மொண்டி சர்மா இசையில் பத்து பாடல்கள் போதாது அத்தனையும் இனிமை...வெவ்வேறு உணர்வுகளுடன் இருக்க இன்னும் பத்து பாடல்கள் இருந்தாலும் வெறுக்காது
thanks-YouTube-by Eros Now
அப்படித்தான் ரவிவர்மன் ஒளிப்பதிவில் பாடல் காட்சிகள்... சண்டைக்காட்சிகள் என்று வேறுபட்ட கலர் டோன்...படத்தை காவியமாக்குகின்றது
thanks-YouTube-by Eros Now
மிகப்பெரிய வெற்றியை நோக்கி சென்றுக்கொண்டிருக்கும் ராம் லீலா திரைப்படம் ஒரு புறம் காதல் காவியம் என்றாலும் இன்னொருபுறம் வன்முறை காட்சிகளையும் விதைத்துக்கொண்டு......
காட்சிக்கு காட்சி துப்பாக்கி சத்தமும் முத்தம் சப்தமும் என்று நிறைந்திருக்கும் ராம்லீலா.......
சினிமாவை சினிமாவாகப் பார்க்கும் வடஇந்தியர்களுக்கு...? வேண்டுமானால் இப்படிப்பட்ட பாலிவுட் சினிமாக்கள் பெரிதாக எதையும் செய்யாது ஆனால் தமிழ்நாட்டு மக்களுக்கு இந்தப் பாலிவுட் கலாச்சாரம் பல சமூகக் கேடுகளை விளைவிக்கும்
அங்கேயும் டெல்லி-மும்பாய் பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு இப்படிப்பட்ட படங்கள் காரணமாகக் கூட இருக்கலாம்.. இல்லாமலும் இருக்கலாம்....எப்படியோ போறாயிங்க இங்கே தமிழில் எந்தப் பக்கியும் ரீமேக் படமெடுக்கிறேன் என்று படையெடுக்காமல் இருந்தால் சரி......
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |