விஜய் சேதுபதியின் ரம்மி திரைப்படத்தின் D.இமானின் இசையில் பாடல்கள் உலகநாயகர் கமலஹாசன் வெளியிட்டுப் பேசும்போது....யதார்த்தமான இசையின் வெளிப்பாடு என்றார்
thanks-YouTube-by . Imman
ரம்மி படக்குழுவினரை வாழ்த்திய கமலஹாசன் ரம்மி போன்ற படங்கள் பத்து வருசத்துக்கு முன்பு வரவில்லையே என்ற தாக்கத்தை ஏற்படுத்திய யதார்த்தமான பாத்திரங்கள் மற்றும் நாம் கேட்க வேண்டும் என்று ஆசைப்படுகின்ற இசை உள்ள படம் என்றும் பாராட்டினார்
இயக்குனர் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் வரும் ரம்மி படம் யுகபாரதியின் வார்த்தைகளில் இன்னிசை இமயம் இமானின் மெல்லிசை ஆல்பம் ஆகும்
1-கூடமேல கூடவச்சி...
thanks-YouTube-by sonymusicindiaVEVO
இப்பாடல் பிரசன்னாவின் வேறுபட்ட குரலாலும் வந்தனாவின் தூக்கலான குரலாலும் பிரகாசிக்கும் நமக்கு பரிச்சயமான இனிமையான மெல்லிசையை இமான் இசைத்துள்ளார்
2-அடியே
thanks-YouTube-by sonymusicindiaVEVO
இப்பாடலில் கீரவாணி ராகத்தில் ஓர் ஆச்சரியமான இசை நீருற்றாக இமானிடமிருந்து பொங்கி வழிகிறது...அந்த அற்புதத்தை அபய் & பூர்ணிமா இருவரும் தங்கள் குரல்களால் உருவாக்கிட இமானோ இசையில் சிக்கலற்ற புதிய பரிணாமத்தை சுவராஸ்யமாகப் படைக்கின்றார்
3-ஒரு நொடி
thanks-YouTube-by sonymusicindiaVEVO
இப்பாடலில் ஒரு தெளிவற்ற காதலின் மனநிலையை தீர்க்க மான வார்த்தைகளாலும் திவ்வியமான இசையாலும் இமான்-திவ்யா குரலிசையில் நம்மை தலாட்டுகின்ற்றது
4-எதுக்காக என்னை நீயும்
thanks-YouTube-by sonymusicindiaVEVO
இப்பாடலில் பாரம்பரிய வயலின் இசையும் சமகால கிடார் இசையும் ஒரு மெல்லிசைக் கலவையாக பூஜா-சந்தோஷ் குரலில் நேட்டிவிட்டி அலங்காரத்துடன் நம் இதயத்தில் இடம் பிடிக்கின்றது
இவைகள் தவிர்த்து வயலினிஸ்ட் கார்த்திக்-கின் இன்ஸ்ட்ருமெண்டல் இசையாக வரும் எதுக்காக என்னை நீயும் என்ற மெல்லிசை ஒரு நீண்ட பயணத்தில் நாம் எடுக்கும் ஒய்வு உணர்வைத் தருகின்றது
இன்னுமொரு இன்ஸ்ட்ருமெண்டல் இசை......கூடமேல கூடவச்சி...இசையோ காதல் பிரிவு உணர்வை துல்லியமாகவும் சரியானதாகவும் BGM ஆக வெளிப்படுத்துகின்றது
thanks-YouTube-by sonymusicindiaVEVO
சமீபகாலமாக் திரைக்கு வந்த படங்களில் பாடல்களாலும் பின்னணி இசையாலும் கலக்கிக் கொண்டிருக்கும் இமானின் யதார்த்தமான மெல்லிசை விரைவில் வரும் விஜய் சேதுபதியின் ரம்மியிலும் ரம்மியமாக இருப்பதில் ஆச்சரியமில்லை
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |