(தீர்ப்பு-சமுதாயத்தில் நிலவும் அரசியல் அதிகார முறைகேட்டை தனியாளாக நின்று தட்டி கேட்கும் ஒரு சாதாரண மனிதனின் திகில் சாகசம் காட்டும் படம்......இவன் வேறமாதிரி-நளினமாக காதலுடன் பின்னப்பட்ட வித்தியாசமான திகில் திரைப்படம்)
கதை....... சட்டத்துறை அமைச்சர் சதாசிவம் சிறையிலிருக்கும் தன் தம்பி ஈஸ்வரன் (வம்சி கிருஷ்ணா)னை பரோலில் எடுத்து சமுதாயத்தில் பல கொலைகள் கலவரங்கள் செய்வதை அறிந்த குணா என்ற குணசேகரன் (விக்ரம் பிரபு) அவருக்கு பாடம் புகட்ட ஈஸ்வரனை ஆள் நடமாட்டமில்லாத ஓர் இடத்தில் சில நாட்கள் அடைத்து வைத்து சதாசிவத்தை அரசு கைது செய்ததும் வெளியே விடுகின்றான்
மருத்துவமனையில் இருக்கும் ஈஸ்வரன் சில போலிஸ் அதிகாரிகளை கொன்று தப்பி...தன்னை அடைத்துவைத்த குணாவை கொலை செய்ய தேடி அலைந்து.... அவனது காதலி மாலினி (சுரபி) யை பிடித்து கொடூரமாக மறைத்து வைக்கின்றான் ஈஸ்வரனைத் தேடி அரவிந்தன் IPS (கணேஷ் வெங்கட்ராமன்) ஒருபுறமும் குணா இன்னொரு புறமும் அலைய..........ஈஸ்வரன் அகப்பட்டனா...? குணா தன் காதலி மாலினியை மீட்டானா...? என்பதை திரையரங்கில் பாருங்கள்
படத்தில் சிறப்பான காட்சிகள் நிறைய உள்ளன அதனால் குறைகள் எதுவும் பெரிதாக தெரியவில்லை முதல் பாதி காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்தும் இரண்டாம் பாதி திகிலுக்கும் பரிதாபம் கலந்த எதிர்பார்ப்புமாக.... இதுவரை இப்படி எந்தவொரு படத்திற்கும் இவ்வளவு நிசப்தம் அரங்கில் நிலவியதை நான் பார்த்ததில்லை
இயக்குனர் சரவணன் குணா-மாலினி காதலை நகைச்சுவையுடன் நளினமாக எவ்வித விரசமுமின்றி சொல்லிச்செல்வதும் அப்படியே பார்வையாளர்களை திகிலுடன் படத்தில் ஒன்றிட வைப்பதும் அருமையாக செய்திருக்கின்றார் அதிலும் சில வருடங்களுக்கு முன் நடந்த சென்னை சட்டக்கல்லூரி போன்ற கலவரத்தை நிஜத்தின் பிரதிபலிப்பாக வெளிப்படுத்தியுள்ளார் கிளைமாக்ஸ் கொஞ்சம் சொதப்பலாக தெரிந்தாலும் அந்த மாலினி திருஸ்டி பொம்மை காட்சிகள் அத்தனையும் திகிலுடன் பரிதாபத்தை பார்வையாளர்களுக்கு விதைக்கின்றது
விக்ரம் பிரபு.......கதையின் தீவிரத்தை உணர்ந்து யதார்த்தமாக நடித்துள்ளார் நிறைய படங்களில் நாம் பார்க்கும் அலப்பறை நாயகர்கள் மாதிரி இல்லை அவரது பார்வையே கதை சொல்கிறது...காதல் செய்கின்றது சண்டைக்காட்சிகளிலும் அவரது உயரம் அவருக்கு பிளஸ் பாயின்ட்.
சுரபி........புதுமுகம் ...தமிழ் திரையுலகுக்கு நல்ல அழகான உயரமான நளினமான வரவு....நடிப்பும் வருவதால் நல்ல முன்னேற்றத்திற்கு வாய்ப்பு இருக்கிறது....தங்க மீன்கள் பாக்கட்டை கையில் வைத்துக்கொண்டு... ரங்கா...ரங்கா என்று குணாவை தேடியலையும் பாடலில் அம்மணியின் முகபாவங்கள் அருமை........மிதமான கவர்ச்சி
கணேஷ் வெங்கட்ராமன்........ போலிஸ் அதிகாரியாக கொஞ்ச நேரமே வந்தாலும் சிறப்பாக நடித்துள்ளார் வம்சி கிருஷ்ணா....படத்தின் மிகப்பெரிய கதாபாத்திரம் ஆரம்பமும் கடைசியும் அவரைச் சுற்றியே.... அவரும் அருமையாக நடித்துள்ளார் மற்றபடி படம் சீரியஸாக போவதாலும் நகைச்சுவை தேவையில்லை என்பதாலும் குறைந்த கதாப்பாத்திரங்கள்
thanks-YouTube-by IndiaGlitz Tamil
பாடல்கள் அருமை சத்யாவின் பின்னணி இசை படத்துக்கு தேவையான அளவு சரியாக உள்ளது அதே போல் சக்தியின் ஒளிப்பதிவு ஆங்கிலப் படத்துக்கு நிகராக பிரமாண்டமாக உள்ளது ஏரியல் வியுவில் அந்த பல மாடி கட்டிடமும் அதில் உள்ள திருஷ்டி பொம்மையும் திகிலூட்டும் காட்சிகள்...
thanks-YouTube-by UTV Motion Pictures
இப்படி நிறைய சொல்லிக்கொண்டு போகலாம்.....
இது சமுதாயத்தில் நிலவும் அரசியல் அதிகார முறைகேடு பற்றிய விழிப்புணர்வு செய்தியுடன்... காதலும் நளினமாக திகிலோடு பின்னப்பட்டுள்ள......சினிமா
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |