google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: ரஜினியை சூப்பர் ஸ்டாராக்கிய 12 படங்கள்...?

Thursday, December 12, 2013

ரஜினியை சூப்பர் ஸ்டாராக்கிய 12 படங்கள்...?














கே.பாலசந்தரின் அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் 1975-ல் தனது திரைவாழ்க்கையை துவக்கிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படிப்படியாக நட்சத்திர நடிகராகஉருவானார்



பஞ்ச் டயலாக்,ராக்கிங் ஸ்டைல்,சிகரெட் தூக்கிப் போட்டு பிடிக்கும் ஸ்டைல்...இப்படி பல திறமைகளால் திரையுலகில் உயர்ந்த நிலையைப் பிடித்த  அவரது  12 சிறந்த படங்களைப் பற்றிய ஒரு பார்வை....


1-மூன்று முடிச்சு
ஆரம்பக் காலகட்டங்களில் எதிர்மறை வேடங்களில் நடித்த ரஜினிக்கு இப்படம்  குறிப்பிட்டு சொல்லும்படி.....கமலின் காதலி ஸ்ரீதேவி மீது அவரது நண்பனான ரஜினிக்கும் காதல்....அதுவே வில்லத்தனமாக கமலை கொலைசெய்யும் அளவுக்கு....அனால் அதை அறிந்த ஸ்ரீதேவியோ ரஜினியின்  அப்பாவுக்கு இரண்டாம் தாரமாக வந்து....ரஜினியை மகனே என்று அழைப்பார்...  இப்படி இயக்குனர் பாலச்சந்தரின் வித்தியாசமான திருப்பத்துடன் திரைக்கதை

rajini

2- 16 வயதினிலே.......
கிராமத்து பொறுக்கி பரட்டையாக வரும் ரஜினி இது  எப்படியிருக்கு...? என்று பேசியே பரபரப்பை உருவாக்கிய படம்...பரட்டை (ரஜினி) தன்னை அவமானப்படுத்திய கிராமத்து பெண் மயில் (ஸ்ரீதேவி) யை பாலியல் வன்கொடுமை செய்ய எத்தனிக்க அவள் மீது காதல் கொண்ட சப்பாணி (கமல்) யால் கொலை செய்யப்படுவார் 

rajini

3-பைரவி
இப்படத்தில்தான் ரஜினி முதன் முறையாக முழு கதாநாயகனாக நடித்தார் இப்படத்தின் மிகப்பெரிய வெற்றி அவரை சூப்பர் ஸ்டார் ஆக்கியது

                                thanks-YouTube-by apinternational

4-முள்ளும் மலரும்
இப்படத்தில் இயக்குனர் மகேந்திரனின் திரைக்கதை-இயக்கத்தில்...  காளியாக நடித்த ரஜினி அவரது தங்கை ஷோபா  மீது காட்டும் தங்கச்சி பாசம் மிகப்பெரிய பெண் பார்வையாளர்கள் கூட்டத்தை அவருக்கு பெற்றுத் தந்தது 

rajini

5-நினைத்தாலே இணிக்கும் 
இதுவும் கே.பாலசந்தர் இயக்கத்தில் கிட்டாரிஸ்ட் ரஜினி பாடகர் கமலுடன் இணைந்து நடித்தப் படம் இதில் ரஜினி சிகரெட்டை தூக்கிப் போட்டு பிடிக்கும் ஸ்டைல் பந்தயம் பெரிதும் பேசப்பட்டது 




6-தில்லு முல்லு 
ரஜினி முதன் முதலாக மீசை இல்லாமல் நடித்த இப்படம் அவருக்குள் இருந்த நகைச்சுவை நடிப்பை வெளிக்காட்டியது 



7-ஸ்ரீ ராகவேந்திரர் 
ரஜினியின் 100-வது படமான இதில் அவர் அவரது ஆன்மீக குரு ஸ்ரீ ராகவேந்திரராக   நடித்து இருந்தார் அவரது நடிப்பு மிகவும் பேசப்பட்டாலும் கடைசியில் அவர் ஜீவசமாதி அடைவது போல் காட்டப்பட்டதால்  படம் தோல்வி ஆனாலும் ரஜினிக்கு மிகவும் பிடித்த படம் இதுவே 

rajini

8-பிளட் ஸ்டோன் (BLOOD STONE)
இது ரஜினி நடித்த ஒரே ஆங்கிலப்படம்..... திகிலூட்டும் பயணங்கள் நிறைந்த இப்படம் மிகப்பெரிய தோல்வி ஆயினும் அன்றே உலகளவில் பேசப்பட்டது 

http://roughinhere.files.wordpress.com/2009/03/thalapathi2.jpg 

 9-தளபதி
மணிரத்தினம் இயக்கத்தில் ரஜினியும் மம்முட்டியும் இணைந்து நடித்த இப்படம் மகாபாரதத்தில் உள்ள கர்ணன்-துரியோதனன் கதையின் உல்டா..இப்படத்தின் மலையாள பதிப்பில் ரஜினி மரணம் அடைவது போல் காட்டப் பட்டாலும் தமிழில் மம்முட்டி மரணம் அடைவது போல் காட்டப்பட்டது .....திரையில் கூட ரஜினியின் மரணத்தை அவரது ரசிகர்கள் விரும்பவில்லை என்பதை நிருபித்தது


10-முத்து 
இங்கே மிகப்பெரிய வெற்றிப்படமான இப்படம் ஜப்பானிலும் Muthu Odoru Maharaja என்று மொழிமாற்றம் செய்யப்பட்டு  மிகப்பெரிய வசூல் அறுவடை செய்து உலகளவில் ரஜினி பேசப்பட்டார் 
 



11-பாட்சா
தன் நண்பனை கொன்றவனை பழிவாங்கும் த்திரிலர் படமான இது ரஜினிக்கு புகழின் உச்சத்தை எட்ட வைத்தது அவரது பஞ்ச் வசனமும் மேனரிஸமும் பெரிதும் பேசப்பட்டது 
 


12-எந்திரன்    
ஷங்கர் இயக்கத்தில் சிவாஜி-யின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு ரஜினி இரண்டு வேடங்களில் நடித்த இப்படம் மிகவும் வெற்றியுடன் பேசப்பட்ட படமாகும் இதில் ரோபோ ரஜினி வில்லன் ரோபோவாக மாறியப்  பகுதி அவரது ரசிகர்கள் மட்டுமின்றி அனைவராலும் ரசிக்கப்பட்டது

 
Made with .freeonlinephotoeditor.com
 

இங்கே நாம் பார்த்த படங்கள் ரஜினியின் உயர் நிலைக்கு படிக்கட்டுகளாக அமைந்தவைகளில் ஓன்று இரண்டு தவிர அனைத்தும் அவரது சிகரெட் பிடிக்கும் ஸ்டைல்..போக்கஸ் செய்து வந்தவைகள் ஒரு தலைமுறையை சீரழித்த அவரது சினிமா சிகரெட் மேனரிசம் 

                                       thanks-YouTube-by parithimuthurasan

அன்று அவருக்கு அது உயர்வு தந்தது..பணத்தை அள்ளிக் கொட்டியது  இன்று அவருக்கே வினையானது...அவரது உயிரையே விலை பேசியது அவரே புகைக்காதீர்கள் என்று புலம்ப வேண்டிய நிலை......... இதற்காகவே இந்த மாமனிதரை அவரது பிறந்த நாளான இன்று நன்று வாழ வாழ்த்துவோம்.....ரஜினி அண்ணேன் இன்னைக்கும் ஏதாவது அட்வைஸ் சொல்லுவீங்களா....?


  
 

விரைவில்.......... 














  
இவன் வேறமாதிரி-சினிமா விமர்சனம் 
 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1