(குறிப்பு-இங்கே இந்த வருடம் சர்ச்சைகளில் சிக்கிய கோடம்பாக்கம் கோமான்களையும் சீமாட்டிகளையும் பற்றி ஓர் அலசல்.........)
ஓடிப்போன அஞ்சலி
தன் அத்தையின் தொந்தரவு தாங்காமல் திடிரென்று ஓடிப்போன நடிகை அஞ்சலி...ஊடகங்களுடன் கண்ணாமூச்சி விளையாண்ட அஞ்சலி ....இப்போது முழுவதுமாக கோடம்பாக்கத்தை மறந்து போன அஞ்சலி....ஆனாலும் மறக்கமுடியவில்லை அம்மணி சிங்கம்-2 படத்தில் ஏலே...வாலே... என்று போட்ட ஆட்டத்தை.........அய்யோ பாவம்நாட்டில் எத்தனையோ பேர் ஓடிப்போகிறார்கள் அதெல்லாம் யாருக்கும் பெரிதாக தெரியவில்லை அம்மணி ஓட்டத்தை மட்டும் ஒலிம்பிக் ஓட்டம் போன்று ஊதி பெரிதாக்கின இந்த ஊடகங்கள்.......
புழலில் அடைக்கப்பட்ட பவர் ஸ்டார்
கண்ணா லட்டு தின்ன ஆசையா என்று எல்லோருக்கும் இணிப்பு கொடுத்த பவர் ஸ்டார் காசோலை மோசடியில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில்....நமெக்கெல்லாம் லட்டு கொடுத்த பவர் யாருக்கோ அல்வா கொடுத்திருக்கிறார்.....அய்யோ பாவம் நியாயன்மார்களே! நாட்டில் இப்படி எத்தனையோ ஏமாற்றுப் பேர்வழிகள் இருக்க நம்ம பவர் ஸ்டார் பவரை மட்டும் பிடுங்கிவிட்டீர்களே....இது நியாயமா?
மகளை மீட்ட சேரன்
சந்துரு என்ற வாலிபச் ஜந்து பாடிய காதல் சிந்து....வகையாக மாட்டிக்கொண்ட தன் மகளை கஷ்டப்பட்டு கண்ணீரும் கவலையுமாக மீண்டும் மீட்டு வந்தார் பல காதல் படங்களை இயக்கி நடித்த சேரன்..ஒரு தந்தையாக அவர் பட்ட கஷ்டம்.........அய்யோ பாவம்...நாட்டில் எங்கு பார்த்தாலும் இந்த காதல் கன்றாவிகள் வெளியே தெரியாமல் அரங்கேறிக் கொண்டிருக்க இந்த ஊடகங்கள் ஊதி பெரிதாக்கி விட்டன
சிறையில் ஜேம்ஸ் வசந்தன்
கண்கள் இரண்டால்....என்று தன் கையசைவால் காதுக்கினிய திரையிசை தந்தவர் ஒரு பெண்மணியை அநாகரீக சைகையை கையசைத்து பாலியல் கேலி செய்தார் என்று இரண்டு நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார் அய்யோ பாவம்...அவர் மீது குற்றம் சாட்டிய அம்மணியின் வயது 63........அதுதான் ஜீரணமாக மாட்டேங்குது
நான் இறக்கவில்லை-நடிகை கனகா
உயிரோடு இருக்கும் போதே தன் மரணச் செய்தியை ஊடகங்களில் கேட்டும் பார்த்தும் அதிர்ந்து போன நடிகை கனகா......தன் வீட்டுக்கு இரங்கல் செய்தி சேகரிக்க வந்த ஊடகங்கள் முன்பு உயிரோடு தோன்றினார்...அவரது அப்பா கிளப்பிய வதந்தி...இப்படியும் ஒரு தந்தை .... அய்யோ பாவம்....வதந்தீ அப்பாவி பிரபலங்களின் வாழ்க்கையில் அநாகரீகமாக விளையாடுது...ஊடகங்கள் அதற்கு உடந்தையாகிறது
இதுவரை நாம் பார்த்த நிகழ்வுகளை பார்த்தால் நமக்கு ஒரு உண்மை தெரிகின்றது நாட்டில் சில கேடுகெட்ட ஊடகங்கள் வாய்க்கு கிடைத்த அவல் பொரி போன்று பாவம் இந்த சினிமா பிரபலங்கள் அவர்களிடம் மாட்டிக்கொண்டு விழி பிதுங்குகின்றார்கள்
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |