google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: பிரபுதேவாவின் R...RAJKUMAR (இந்தி) - சினிமா விமர்சனம்

Wednesday, December 11, 2013

பிரபுதேவாவின் R...RAJKUMAR (இந்தி) - சினிமா விமர்சனம்


(தீர்ப்பு-பாலிவுட்டில் கோலிவுட் மானத்தை கப்பலேற்றிய பிரபுதேவாவும்  அவரது R...RAJKUMAR இந்தி திரைப்படமும்......இதுவரை இப்படியொரு மட்டமான மொக்கை திரைப்படத்தை எந்த திரையுலகமும் பார்த்திருக்காது)

http://www.globalgujaratnews.com/uploads/news/12_2013/1386331053_r...rajkumar_first_look.jpg

R...RAJKUMAR என்ற இந்த இந்தி படம் முதலில் RAMBO RAJKUMAR என்ற பெயரில் வெளிவருவதாக இருந்தது அண்ணன் சில்வஸ்டர் ஸ்டலோன் உலகளவில் RAMBO என்ற பெயரையும் அதனுடன் இணைப்பதையும் காப்பீடு செய்து வைத்துள்ளதால் ரம்போ...அம்போனு போனது R.......ரம்பம் மட்டும் இருந்தது 



பாலிவுட்டில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்த ரவுடி ரத்தோர்  படம் பிரபுதேவாவை  புகழின் உச்சிக்கு கொண்டு சென்று வெள்ளித்திரையின் மந்திரவாதி என்று பாராட்டியும் தெனிந்திய திரைப்பட கலைஞர்களுக்கு மிகப்பெரிய மரியாதையையும்  தந்தது அதெல்லாம் இப்போது கப்பலேறிப் போனது 

http://i1.ytimg.com/vi/IJoaBWgo1lY/hqdefault.jpg
கதை........சிவராஜ் (சோனு சூத்) என்ற போதை பொருள் விற்பவனிடம் வேலைசெய்யும் இளைஞன் ராஜ்குமார் (ஷாஹித் கபூர்) இன்னொரு எதிரி போதை பொருள் விற்கும் மெனிக் பார்மர் (ஆஷிஷ் வித்யார்த்தி)யை கொலை செய்ய ஒரு கிராமத்திற்கு வருகின்றான் அங்கே மெனிக் பார்மரின் கொழுந்தியா சாந்தா (சோனாக்ஷி சின்ஹா​​)வின் அழகில் மயங்கி இருவரும் காதலிக்க.....அப்புறம்....... ஆங்... சிவராஜ்க்கு சாந்தாவை கட்டிவைக்க பார்மர் தீர்மானிக்க......ராஜ்குமார் எதிர்க்க...அட...போங்க பிரபுதேவா அண்ணேன் என்ன சொல்ல வாருறீங்க...எதுவும் புரியல... அவ்வவ்.....

http://www.globalgujaratnews.com/uploads/news/08_2013/1375341708_chennai-express.jpg

(ஆனா பிரபுதேவா அண்ணேன் உங்கள பாராட்டனும் அவியிங்க சென்னை எக்ஸ்பிரஸ் எடுத்து நம்மளையும் நம்ம தமிழையும் கொலை செய்ததற்கு நல்லாவே பலிவாங்கிட்டீங்க...ஹா...ஹா )  


படம் ஆரம்பிக்கும் போது ரயில் நிலையத்தில் ஷாஹித் கபூர் யாரையோ கொலை செய்ய கத்தியை தூக்க...அம்மணி சோனாக்ஷி சின்ஹா எங்கேயோ தூரத்தில் நடந்து போக.....அம்மணி அழகில்...? அப்படியே அவரு ரோமியோ மாதிரி ஓர் ஆட்டம் போட.........அப்புறம் எரியும் வீட்டில் யாரோ ஒரு பெருசை அவரு காப்பாற்ற......அம்மணியும் அப்படியே ஜூலியட் மாதிரி புசுக்குன்னு லவ் பண்ண ...அப்புறம்....?
அதுக்கு மேல என்னால அரங்கில் இருக்க முடியல....இருந்த இருபது பேரில்...பாதி எஸ்கேப்..நானும் இடைவேளை தாண்டி கொஞ்ச நேரம் இருந்துப்பிட்டு பிடித்தேன் ஓட்டம் 


ஆனா...தியேட்டர் வாட்ச்மேன் கேட்ட கேள்விதான் என்னால் மறக்க முடியல....
"அப்படியே போறியளா..? திரும்பி வந்தா உள்ள விடமாட்டேன்......ஆங்"



        
நாளைய சிறப்பு வெளியீடு............













       ரஜினியின் 12 சிறந்த படங்கள் 


  ரஜினியை சூப்பர் ஸ்டார் ஆக்கிய 12 படங்கள் எவை.....? 
 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1