google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: ரஜினி மட்டும்தான் சிறந்த இந்தியரா?அடங்...கொய்யால...

Monday, December 16, 2013

ரஜினி மட்டும்தான் சிறந்த இந்தியரா?அடங்...கொய்யால...

சமீபத்தில் சினிமா நடிகர்கள் அமிதாப்பச்சன், ஷாருக்கான், ரஜினிகாந்த்,  உள்ளிட்ட 25 பேர் சிறந்த இந்தியர் என்று விருது பெற்றுள்ளனர்
என்.டி.டி.வி. சேனல் தொடங்கி 25 ஆண்டுகள் ஆனதையொட்டி, இணையத்தில் நடத்திய கருத்துக்கணிப்பில்  இந்த சினிமா நடிகர்களும் இடம் பெற்றுள்ளனர்
இவர்கள் இந்தியர்களாக இந்த நாட்டுக்கு செய்த சாதனைகளை நினைத்துப் பார்க்கின்றேன் எதுவும் என் மண்டையில் ஏறமாட்டேன் என்று அடம் பிடிக்கின்றது

Made with .freeonlinephotoeditor.com

அதிலும் நம்ம தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினி எந்த வகையில் சிறந்த இந்தியர் என்று அலசி ஆலோசித்து தலையிலிருந்த கொஞ்ச மூளையும் குழம்பிப் போனதுதான் மிச்சம் 


நம்ம சூப்பர் ஸ்டார் சினிமாவில் அன்று கொடிகட்டிப் பறக்கும் காலகட்டத்தில் திரையரங்குகளில் படம் ஆரம்பிக்கும்போது அல்லது இடைவேளையில் ஒரு விளம்பரம்  வரும் அதில்  ஒருவர் மலையில் ஜீப் ஒட்டிக்கொண்டு களைத்து போய் ஸ்டைலாக ஒரு பாறையில் அமர்ந்து ஒரு SCISSORS சிகரெட்டை எடுத்து பற்றவைப்பார் அப்போது திரையில் ACTION......SATISFACTION......SCISSORS  என்று கத்திரி சிகரெட் விளம்பரம் வரும் ஆனால்...இப்போதுதான் கண்டுபிடித்தார்கள் போல நுரையீரல் பஞ்சு போன்றது என்று திரையரங்கங்களில் பல்லவி பாடுகின்றார்கள் 

அப்போதெல்லாம் நம்ம சூப்பர் ஸ்டார்  சிகரெட்...பீடி..சுருட்டு கம்பெனிகளுக்கு  விளம்பரதாரர் போன்று தனது படங்களில் வித விதமாக புகைப்பான்களை தூக்கிப்போட்டு புகைபிடித்து தமிழ் நாட்டு இளைஞர்களுக்கு தூக்கிப் போட்டு செய்த சேவைதான் இப்போது எனது கண் முன்னாடி படமாக ஓடுகின்றது....அதற்குப்பிறகு இப்போது சிகரெட்டினால் உடல்நிலை பாதிக்கப்பட்டு இன்று அவர் முகேஷ் போன்று புகைக்காதீர்கள் விழிப்புணர்வு  செய்ததால் சிறந்த இந்தியராக தேர்ந்த்தேடுக்கப்பட்டாரோ....?


இங்கே இப்போது ஒரு கூட்டமே தமிழ்நாட்டுக்கு சேவை செய்து தமிழ் நாட்டு அரசு கஜானாவை நிரப்பிக் கொண்டிருக்கின்றார்கள்...... மங்காத்தாவில் தல அஜித் அடைத்திருக்கும் மதுக்கடையை திறக்கவைத்து பாட்டில் வாங்குவார் 


தலைவாவில் இளையதளபதி வாங்கன்னா...வணக்கங்கண்ணா என்று நல்லாவே போதை போட்டு ஆட்டத்தோடு தள்ளாடுவார் 
இவர்கள்தான் இப்படியென்றால் வளர்ந்துவரும் விஜய் சேதுபதி இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்று பாட்டலுக்கு பிரேயர் செய்வார்...சிவ கார்த்திகேயன் தனுஷுடன் சேர்ந்து டாஸ்மாக் பாரில் எதிர்நீச்சல் போடவில்லையா....?
இப்படி  இளைய தலைமுறைக்கு சினிமா மூலம் நல்லது சொல்லி நாட்டு கஜானாவை நிரப்பும் அஜித்,விஜய்,விஜய் சேதுபதி,தனுஷ்....இப்படி இவர்கள்  போன்ற நடிகர்கள் சிறந்த இந்தியர்கள் இல்லையா...? அவர்கள்  அந்த விருதுக்கு தகுதி  இல்லையா..? 

                                     thanks-YouTube-by vikatanwebtv·

இங்கே தெருவெங்கும் டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்துவிட்டு அப்புறம் குடிகாரன் என்று திட்டுகின்றீர்களே என்று ஆதங்கப்படும் புரட்சி கலைஞர்கள் இல்லையா....? அவர்களும் சட்டசபைக்கு ஜெயித்து வரவில்லையா..? அய்யோ நியாயன்மார்களே! அவர்களைப் பார்த்தால் சிறந்த இந்தியர்களாக தெரியவில்லையா...?

powerstar

இங்கே பவர் ஸ்டார் என்று ஒரு நடிகர் இருக்கின்றார் என்பதை எல்லோரும் மறந்து விட்டீர்களே அய்யா நியாயன்மார்களே! இது நியாயமா...?அவர் தமிழ் சினிமா கண்டெடுத்த தங்கம் ....ஆண்டு கணக்கில் ஓடிய லத்திகா நாயகன் நடிகர்-இயக்குனர்-தயாரிப்பாளர் மட்டுமின்றி பஞ்சரான தமிழ் சினிமா சமுதாயத்தை காற்றடித்து நிரப்ப வந்த உண்மையான அக்கு பஞ்சர் டாக்டர் 


இன்னும் உலகத்துக்கே LIP-LOCKING புது கலாச்சாரத்தை சொல்லிக்கொடுக்கும் உலக நாயகர்கள் இங்கே இல்லையா...? இப்படி நிறைய நடிகர்கள் இங்கிருக்க....
இங்கே ரஜினி மட்டும்தான்   சிறந்த இந்தியரா...? அடங்...கொய்யால...

  
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1