விஜய் சேதுபதி-ஆர்யா இணைந்து நடிக்கும் இயக்குனர் S.P.ஜனார்த்தனனின் புறம்போக்கு படத்தில் யார் புறம்போக்கு...? என்ற கேள்விக்கு இயக்குனரின் பதிலோ...........
ஆர்யாவும் விஜய் சேதுபதியும் புறம்போக்கு படத்தில் போட்டோ ஷூட்-க்கு வந்த இடத்தில் சந்த்தித்துக்கொண்ட போது அவர்களுக்குள் எழுந்த கேள்வி...
"நம்மள்ள யாரு நண்பா புறம்போக்கு...? நீங்களா...? அல்லது நானா...?" என்று ஆர்யா விஜய் சேதுபதியிடம் கேட்க.........
அவரே அவருக்குள்ள நகைச்சுவை உணர்வுடன்...
"அண்ணேன்...ஒன்னு நீங்களா இருக்கணும் அல்லது நானாக இருக்கணும் நம்ம இரண்டுபேரையும் தவிர வேறு யாரு புறம்போக்கு...?" என்று சொல்ல அப்போது அங்கே வந்த இயக்குனர் மேலும் அவர்களை குழப்பிவிட்டார்
"பொதுமக்களுக்கு பயன்படும் உபயோகமான ஒன்றே புறம்போக்கு என்று அழைக்கப்படும் அப்படி உங்கள் இருவரில் யார் பொதுமக்களுக்கு பயன்படக்கூடியவர்களோ அவர்களே புறம்போக்கு"... என்று புதிராக சொல்லிச்சென்றார்
ஆனால் அவியிங்க இரண்டு பேரும் கருப்பு-சிவப்பு கலர் சட்டை போட்டிருக்கிறதைப் பார்த்தா...உண்மையில் தேசிய விருது பெற்ற பேராண்மை இயக்குனர் ஜனநாதன் இப்படத்தின் கருவாக.......சமீபத்திய அரசியல் தில்லாலங்கடி மேட்டரான புறம்போக்கு இடங்களை வளைத்துப்போட்டு கம்பி எண்ணிய அரசியல்வாதிகளை பற்றிய அதிரடி கலக்கல் படமாக இருக்கலாம் என்று கோடம்பாக்கம் கோடாங்கி....
இரண்டு ஹீரோக்கள் உள்ள இப்படத்திற்கு திரைக்கதைப்படி ஒரு ஹீரோயின் மட்டுமே தேவை என்று சொன்ன இயக்குனரின் நாயகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது கார்த்திகா நாயர் என்பது கூடுதல் தகவல்
(யார் புறம்போக்கா இருந்தா என்ன...?அண்ணாச்சி....விஜய் சேதுபதி இஸ் ஹேப்பி.... புறம்போக்கு படத்தில அவரது அட்டகாசமான ஸ்டில்ஸ்களப் பார்த்தா....அலப்பறையா இருக்குல்ல...)
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |