google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: தகராறு-சினிமா விமர்சனம்

Friday, December 06, 2013

தகராறு-சினிமா விமர்சனம்


















நிறைய நட்பு...கொஞ்சம் காதல் என்று திகிலூட்டும் திருப்பங்களுடன் விறுவிறுப்பாக திரைக்கதை...அருமையான இயக்கம் என்று மதுரை கதைக்களத்தில் தகராறு புல்லரிக்க வைக்கும் காதல் சஸ்பென்ஸ் த்திரிலர்  திரைப்படம்.




கதை.... மதுரையில் திருடுவதும் குடிப்பதுமாக வாழும் நான்கு நண்பர்களில் ஒருவர் கொலை செய்யப் படுவதால் மற்ற மூன்று நண்பர்கள் யார் கொலையாளி...? என்று தேடி பழிவாங்க நினைக் கின்றார்கள் அவர்கள் கொலையாளியை கண்டுபிடித்து பழி வாங்கினார்களா...? அல்லது கொலையாளியிடம் பலியானார்களா...? 
இதுவே படம்....இயக்குனர் அதை சஸ்பென்ஸ் நிறைந்த எதிர்பார்க்காத   திருப்பங்களுடன் காட்சி படுத்தியுள்ளார்..... 




படம் துவங்கும் போதே டாஸ்மாக் பாரிலிருந்து வெளியே வரும் சரவணன் (அருள்நிதி) நண்பர்களில் பழனி (தருண் சத்ரியா) கொலை செய்யப் படுகின்றார்...பிறகு ஒரு பிளாஷ் பேக் மூலம் அந்த கொலைக்கான காரணமாக மூன்று கதைகள் காட்சியாக விரிகின்றது   


1-கோயில் திருவிழாவின் போது அம்மன் சிலை கடத்தியதார்காக கூலித்த்கராறு செய்யும் செங்கல் சூளை அதிபர் (அருள்தாஸ்)
2-சரவணன் காதலிக்கும் மீனாட்ஷி (பூர்ணா)  இவர்களின் காதலை எதிர்க்கும்   கந்துவட்டி தாதா அப்பா (ஜெயபிரகாஷ்) 
3-பீரோ புல்லிங் திருட்டை விசாரிக்க வந்த போலிஸ் அதிகாரியை அடித்து அவமானப் படுத்தியதால் என்கவுண்டர் போட நினைக்கும் போலிஷ் அதிகாரி 
முதல் பாதி இவர்களில் யார் கொலையாளி என்பதை காட்சிப் படுத்தியும் இரண்டாம் பாதி தேடுதலிலும் படம் விறுவிறுப்பாக நகர்கின்றது சரவணன்-மீனாட்சி காதல் நளினமாகவும் வீரமாகவும் உள்ளது இடையிடையே டாஸ்மாக் பாரை போதையில் தள்ளும் மயில்சாமி சிரிக்க வைக்க...


  ஆக...ஓர் அறிமுக இயக்குனர் போல் இல்லாமல் கணேஷ் விநாயக் நல்ல திரைக்கதையாலும் உரையாடல்களாலும் இயக்கத்தாலும் அனுபவ இயக்குனர் போன்று மிளிர்கின்றார் 



அருள்நிதியின் சண்டைக்காட்சிகளில் ஆவேசமான நடிப்பும் காதல் காட்சிகளில் குழையும் சொங்கி நடிப்பும் அருமை அவரது நண்பராக வரும் செந்தில் (பவன்) ஆறுமுகம் (முருகதாஸ் ) பழனி (தருண்) மற்றும் கந்துவட்டி ஜெயபிரகாஷ்,அருள்தாஸ்   அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர் மீனாட்ஷியாக நடித்துள்ள  பூர்ணாவின் நடிப்பு....அம்மணி  எங்கேயோ போய்விட்டது.



                             thanks-YouTube-by seventhstarcompany
படத்தின் நிறைய காட்சிகள் இருளிலும் மழையிலும் நடை பெறுவதை திகிலூட்டும் ஒளிப்பதிவு....பின்னணி இசை அரங்கில் மழை பெய்வதுபோல் பிரமை.......அருமை 


பிட்சா...வில்லா...வரிசையில் மதுரை யதார்த்த வாழ்வை கதைக்களத்துடன் கொண்டு திகிலூட்டும் தகராறு திரைப்படம் திகில் திரைப்பட பிரியர்களுக்கு நல்ல விருந்து...வெல்டன் கணேஷ் விநாயக் 
  
 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1