(குறிப்பு-விஜயின் ஜில்லா பாடல்கள் விமர்சனமும்...விஜயின் ஜில்லா படப்பாடல்கள் எப்படியிருக்கு? விஜயின் ஜில்லா படப்பாடல்களில் உங்களுக்கு பிடித்த பாடல் எது? கருத்துக்கணிப்பும் )
இன்னிசை வேந்தன் டி.இமானின் இசையில் விஜய் நடித்து வெளிவரவிருக்கும் ஜில்லா திரைப்படத்தின் தித்திக்கும் பாடல்கள் ஆறு...அவைகள் கேட்பவர்களின் காதுகளில் தேனாறு....
1-பாட்டு ஒன்னு....
யுகபாரதியின் வார்த்தைகளில் எஸ்.பி.பாலசுப்ரமணியம்-சங்கர் மகாதேவன் இணைந்து பாடும் இப்பாடல்....எலெக்ட்ரிக் கிட்டார்+மலையாள செண்டை ஒலிகளின் கலவையாக... இமானின் அதிரடி கலக்கல் ஒப்பனிங் படப்படலாக வருகின்றது இப்பாடலில் இரண்டாவது மற்றும் மூன்றாவது பதிகங்கள் அதீத உச்ச ஸ்தாயில் ஓங்கி ஒலிக்கின்றது இப்பாடலின் அர்த்தம் பரஸ்பர உறவு மற்றும் நம்பிக்கையான நட்பு இவைகளின் பிரதிபலிப்பு.....
2-வெரசா போகையிலே......
பாடகர்-இமான் பாடலாசிரியர்-பார்வதி
இமானின் காதல் திரையிசைகளில் வயலின் வாத்திய இசை ஓங்கியிருக்கும்...இந்தக் காதல் மெல்லிசையும் அதற்கு விதிவிலக்கல்ல...
இப்பாடலைக் கேட்டால் காதல் வராத கபோதிகளுக்கும் நெஞ்சில் காதல் பிறக்கும் ....வாய் முணுமுணுக்கும் இப்பாடலின் தொடக்கமும் முடிவும் விசில் சப்த்தத்துடன் ஒலிப்பதே.........இமானின் சிறப்பு.
3-ஜிங்குனாமணி....
பாடலாசிரியர்: விவேகா
பாடகர்: ரஞ்சித், சுனிதி சவுஹான்
நாட்டுப்புற பாணியில் அமைந்துள்ள இப்பாடல் கேட்பவருக்கு எதிர்பாராத ஆச்சரியமூட்டும் ஓசை....இமானின் இயல்பான இசை இப்பாடல் தொடக்கம் காற்று இசைக்கருவிகளால் பாடப்பட்டு.....பின்னர் கிட்டார் கருவிகளின் வேறுபட்ட ஓசைகளின் கலவையாக.........கேட்பவரை ஆனந்தத்தின் உச்சத்திற்கு அழைத்துச் செல்கின்றது.
4-கண்டாங்கி....கண்டாங்கி....
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள்: விஜய், ஸ்ரேயா கோஷல்
ஜில்லா படத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடல் இது....அது உங்களுக்கே தெரியுமே விஜயின் முதல் முத்தமிடும் காதல் மெலோடி...
கேட்பவர்கள் காதுகளில் ஓடும தேனருவி பாய்ந்தோடி.....
5-எப்ப மாமா ட்ரீட்டு....?
பாடலாசிரியர்-விவேகா
பாடியவர்கள்-இமான்,பூஜா,ஸ்னிக்தா சந்த்ரா
ஜில்லா படத்தில் உள்ள இப்பாடல் ஹிப் ஹாப் பாணியில் அமைந்து.....விஜய் ரசிகர்களுக்கு அபூர்வமான இசை விருந்து அதே நேரம் இப்பாடல் ஒலிக்கிறது வேடிக்கையும் நகைச்சுவையும் மிளிர்ந்து....இப்பாடலில் அவ்வப்போது ஏறி இறங்கும் மகிழ்ச்சியான பீட்ஸ்.......ஆனாலும் சீரான நோட்ஸ்
6-ஜில்லா தீம்.....
பாடலாசிரியர்-விவேகா
பாடியவர்கள்-சந்தோஷ் ஹரிஹரன்,தீபக்,ஆனந்த்,சென்பகராஜ்,
டிஸ்கோ பாணியில் தொடங்கும் இப்பாடல்படத்தின்நாயகனின் எழுச்சியும் ஆற்றலையும் இசையாலும் வார்த்தைகளாலும் ஓங்கி...ஓங்கி ஒலிக்கின்றது இப்பாடலின் இரண்டாவது சரணம் நாயகனின் சவாலை பிரதிபலிக்கும் தமிழ் ராப் இசைப் பாடலாக...........அப்படியே ஆற்றல் மிகுந்த செண்டை ஒலியின் சக்த்தியில் கேட்பவருக்கு இதயத்தில் ஓர் அசாதாரன உணர்வை விதைக்கின்றது
மேற்கண்ட கொஞ்சும் பாடல்கள் அனைத்தும் கொஞ்சம் இங்கே கேட்டு மகிழுங்கள்......
thanks-SoundCloud byVijayTheActor
இதுவரை நீங்கள் கேட்டுனர்ந்த விஜயின் ஜில்லா திரைப்பாடல்கலும் அதன் இசையும் சொல்வது..... இவை இந்த பொங்கலுக்கு இமான் இதயத்தில் பொங்கிய இசை
thanks YouTube by Vijay in Jilla
உங்கள் பார்வையில்.................
விஜயின் ஜில்லா படப்பாடல்கள் எப்படியிருக்கு?
விஜயின் ஜில்லா படப்பாடல்களில் உங்களுக்கு பிடித்த பாடல் எது?
வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி....முடிவு-1/1/2014
இங்கே..........
விஜய் பாடிய கண்டாங்கி
சிறப்பு விமர்சனமும் வாக்கெடுப்பும்
http://kavithaivaanam.blogspot.in/2013/12/vijaypadiya-kandangi.html
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |