google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: மதுரைக்குப் போகாதீங்க...

Wednesday, January 15, 2014

மதுரைக்குப் போகாதீங்க...


வரிசையாக பாண்டியநாடு,தகராறு,மதயானைக் கூட்டம்,ஜில்லா.... இப்படி  படங்களாக பார்த்து அய்யா... வீட்டுல காய்கறி வெட்டும் கத்தியைக் கண்லக் கண்டாக்கூட பயமாயிருக்கு




காலம் காலமாக   மதுரையையும் அதைச் சுற்றிய பகுதிகலும் உள்ள கதையாக மண்வாசனை வீசும்  நளினமான காதல் மேலோங்கியும் கொலையும் கொள்ளையும் சுற்று குறைவாக இருக்கும் 




இப்போது வரும் படங்களில் காதல் கால்வாசியும் மோதல் முக்கால்வாசியும் என்று கம்பும் அருவாளுமாக அலையிராயிங்க...
கேட்டா மதுரனா அப்படித்தான் என்கிராயிங்க....அப்படியா மதுரக்கார மக்களே?  



வருசத்துல  ஒருதடவ ஜல்லிக்கட்டுன்னு மாட்டோடு மல்லுக்கட்டிக்கிட்டு இருந்தவியிங்க....இப்ப 365 நாளும் மனுஷனுங்க மனுசனோடு மல்லுக்கட்டுராயிங்க...அய்யோப் பாவம் அதப் பெருமையா இவியிங்க படம் காட்டுறாயிங்க........


  

எது  எப்படியோ....இப்படி சமுதாயத்தில் வன்முறை,ரத்தக் கலாச்சாரத்தை விதைப்பதில் வித விதமாக கொலை செய்வது எப்படி...? என்று படம் காட்டுவதில் இன்றைய சினிமாவே ஒரு வன்முறை ஆயுதமாக உள்ளது 



அதே சினிமாவில்  இவியிங்க வன்முறை படங்களுக்கு இசையமைத்த இசைஞானியே ஒரு கட்டத்தில் வெறுப்படைந்து ஒரு சினிமா விழாவில்.............
"வன்முறை,அரிவாள் கலாச்சாரம் அதிகமாக உள்ள படங்களுக்கு இசையமைக்க மாட்டேன்.நீ அறிவாள கீழே போடுய்யா...இசை அமைக்கிறேன்"  என்று இயக்குனர் அமீரிடம் சொன்னவர் இளையராஜா 

சினிமா என்ற பணமே பிரதான மாய உலகில்......படம் காட்டுபவர்களாலும் மக்கள் அரசாலும்  மக்கள் நலன் காக்கப் படுவதில்லை படம் பார்க்கும் மக்கள் இப்படிபட்ட வன்முறைப் படங்களை புறக்கணித்தால் மட்டுமே இது சாத்தியமாகும்  






























இப்படி இவியிங்க  படங்களைப்  பார்த்ததிலிருந்து வீட்டுல காய்கறி வெட்டும் கத்தியை கண்ல கண்டாக்கூட பயமாயிருக்கு அய்யா... கோடம்பாக்கத்து கோலிவுட் சினிமாக்காரங்களே!  கொஞ்ச காலத்துக்கு மதுரைக்குப் போகாதீங்க...



ஏலே புன்னாக்குப் பதிவரே....எல்லா ஊரிலும்தான் வெட்டிக்கிறாங்க... திருநெல்வேலி,தூத்துக்குடி படங்களில் வன்முறை இல்லையா....? என்று  யாரும் ஆத்திரப்படவேண்டாம்...இப்ப அதிகமா இவியிங்க ஊர் படங்கத்தான் அது என்னவோ சங்கு அருக்குறேன் -னு அவியிங்க ஊரு பெருமையா காட்டிக்கிறாயிங்க...அதனாலத்தான் அப்படிச் சொன்னேன்....சினிமாக்காரங்களே!....உங்க விளக்கெண்ணெய் கதையோட படம்பிடிக்க மதுரைக்குப் போகாதீங்க...

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1