நம்ம வானிலை மைய இயக்குனர் ரமணன் அய்யா அறிவிப்பது போல்...சினிமா வானில் அவ்வப்போது காதல் மழை பெய்யும் பெய்யாது என்று அறிவிக்கும் நம்ம சின்ன சூப்பர் ஸ்டார் STR-ஹன்ஷிகா இணைந்து.....? நடித்த விரைவில் வரவிருக்கும் வாலு படம் பற்றி...........
தமிழ் சினிமா நாட்டில் அவ்வப்போது சில அதிசயங்கள் நடக்கும் நல்ல கதை,நடிப்பு,இயக்கம்...என்று உள்ள படம் மண்ணைக் கவ்வும் எதுவுமில்லாத சில குப்பை படம் அடிக்கும் அதிஷ்ட காற்றில் கோபுர கலசத்தில் போய் ஒட்டிக்கொள்ளும்
ஆனால் நம்ம STR-க்கு அதிர்ஷ்டமும் உண்டு திறமையும் உண்டு...சில நேரம் இவரு கோபுர கலசத்தை தொடுவார் சில நேரம் கோபுரம் குனிந்து இல்லனா....உடைஞ்சி விழுந்து கலசங்கள் இவரைத் தொடும்
அறிமுக இயக்குனர் விஜய் சந்தர் அவரது வாலு.....ஒரு காமெடி படம் என்கிறார் அதற்கேற்ப சந்தானம்,கணேஷ்,பிரமானந்தம்...என்று காமெடி நடிகர்கள் இப்படத்தில் உண்டு....(அண்ணேன்...இப்படித்தான் ஆல் இன் ஆல் அழகுராஜா ஏமாற்றிப் புட்டார்.....எதுக்கும் ட்ரைலர நல்லாப் பாருங்க.....ஆங்)
thanks-YouTube-by STR609
இப்படத்தின் முதல் டீசரில் அம்மணி ஹன்ஷிகா சொல்லும் கலக்கல் டயலாக் ......
"ஒரு சில பசங்கள பார்க்க பார்க்கத்தான் புடிக்கும், ஆனா,உன்ன மாரி பசங்கள பார்த்த உடனே புடிச்சிடும்...."
(அண்ணேன்....இது நடிகர் தனுஷ் படிக்காதவன் படத்தில் சொன்ன டயலாக் என்போரும் உண்டு....அது எதுக்கு நமக்கு....? ஒரு சில படங்கள பார்க்க பார்க்கத்தான் புடிக்கும்...ஆனா,வாலு மாரி படங்கள பார்த்த உடனே புடிச்சா சரிதான்....ஆங்)
அண்ணன் ரமணனின் அறிவிப்பு போல் பொயித்துப் போகாமல் அலப்பறை நடிப்புக்கு பேர்போன STR-ரின் வாலு ஓடும் அரங்குகளில் வசூல் மழை பெய்தால் சரிதான்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |