google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: என்றென்றும்-சினிமா விமர்சனம்

Wednesday, March 12, 2014

என்றென்றும்-சினிமா விமர்சனம்


கிணறு தோண்ட பூதம் வந்த கதையாக.....த்திரிலர் படம் எடுக்கப்போய் தீஞ்சிபோய் எடுத்த  காமெடிபடம் -என்றென்றும்

endrendum

படத்தின்  கதையாக........சென்னைக்கு வரும் கிருத்துவ இளைஞன் சார்லஸ் (சதீஷ் கிருஷ்ணன்) தங்கும் வீட்டில் ஓர் அழகான பேய்...ச்சே...ஆவி டயானா (பிரியங்கா ரெட்டி) வை சந்தித்து அவளுடன் பேசி...செஸ் (செக்ஸ் அல்ல) விளையாடி...பிறகு காதல் செய்கின்றான்....

அந்த ஆவி டையானாவோ.....? இன்னும்  தான் சாகவில்லை என்றும் உயிருடன் ஆஸ்பத்திரியில் இருப்பதாகவும்  சொல்ல....அவளை கோமா நிலையில் ஆஸ்பத்திரியில் கண்டு அவளது இந்த நிலைக்கு காரணம் தேடி அலைகின்றான்....நம்ம கதாநாயகன் சார்லஸ்

டயானா  டீச்சராக வேலை பார்க்கும் பள்ளியில் உள்ள உடல் பயிற்சி ஆசிரியர் அந்தோணி அவளது தோழி ஸ்டெல்லாவை கெடுக்கும் போது பார்த்து அலறி ஓடும் அவள்  விபத்தில் சிக்கி இப்படி  கோமா நிலையில்....

ஆத்திரம்  கொண்ட சார்லஸ் அந்தோணியை கொலை செய்ய போலிஸ் தேடுகின்றது.....அந்தோணி இறந்ததால் பழிவாங்கிய ஆவி டயானா உண்மையில் இறந்து விடுகின்றாள்....? 

காதலியை  பிரியமுடியாத சார்லஸ் கடலில் விழுந்து தற்கொலை செய்து தேவலோகத்தில் என்றென்றும் டயானாவுடன் டூயட் பாடுகின்றான்..........

 இப்படி தெய்வீகமான காதலை கிருத்துவ பின்னணியில் நிறைய பிளாஷ் பேக் கதை உத்திகளுடன் இயக்குனர் சிநிஷ் நமக்கு படம் காட்டுகிறார்

அமானுஷ்ய கதைதான் என்றாலும் பயம் காட்டுவது போல் எதுவும் இல்லை இரண்டு போலிஸ் அதிகாரிகள் புகைபிடிப்பதும் பைக்கில் பாய்வதும் த்திரிலர் என்றால் என்ன சொல்வது.....?

சர்ச்,பாதிரியார்,பைபிள்,கல்லரைத்தோட்டம்,ஆமென்...இப்படி முழுக்க முழுக்க கிருத்துவ வேதாந்தம் நம்மை ஏதோ சர்ச்க்கு தெரியாத்தனமாக நுழைந்து விட்டது போல் உணர்வைத் தருகின்றது...........ஆனாலும் கஞ்சா,புகை,மது...காட்சிகளுக்கு பஞ்சமில்லை 

இயக்குனர் சிரமப்பட்டு சைகோலாஜிக் கதை எழுதி...சார்லஸை அடக்கம் செய்யும் போது  அவர் டயானா கல்லறையை கட்டிப் பிடித்துக் கொண்டு கிடக்கும் புதுமையான காட்சி இப்படி நிறைய   படா படா காட்சிகளை இயக்கி...(படம் பார்க்கப் போனவர்களின் ) நேரத்தையும் பணத்தையும் வீனடித்துள்ளார் 

ஒளிப்பதிவும் ஒலிப்பதிவும் பாடல்களும் நன்றாக இருந்து என்ன பிரயோசனம்..?

இப்படிப்பட்ட சினிமாக்கள் நிறைய வந்தால் நமக்கு சினிமா மீது உள்ள மோகம் இல்லாமல் போய்விடும் எனவே இப்படிப்பட்ட படங்களும் தேவைதான்......அண்ணன் சிநிஷ் இன்னும் நாலு படம் எடுக்க வாழ்த்துவோமாக 
   

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1