google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: மான் கராத்தே-சினிமா விமர்சனம்

Friday, April 04, 2014

மான் கராத்தே-சினிமா விமர்சனம்

சிவ கார்த்திகேயனின்  மான் கராத்தே படம் அவரை ரஜினி,கமல்,விஜய்,அஜித்.. நட்சத்திர நடிகர்கள் வரிசையில் இடம் பிடிக்கச் செய்யுமா? என்ற கேள்விக்கு....

மான் கராத்தே படத்தின் கதையாக..........பூனையை புலியாக காட்டும் காதலும் காமெடியும்  கலந்த பேண்டஸிக் கதை 

சந்திரகிரி மலைக்கு விடுமுறை கொண்டாடச் செல்லும் சத்வம் கம்பெனி ஐ.டி.ஊழியர்கள் சாண்டி (சதீஷ்) யும் அவரது நான்கு நண்பர்கள்-நண்பிகள் ஒரு அபூர்வ சித்தரை சந்தித்து கிண்டலாக..... வரும் 2014 விடுமுறை தினமான ஆயுத பூஜை தேதியிட்ட தினத்தந்தி நாளிதழை வரமாக கேட்க...அவரும் அந்த நாளிதழை மந்திரத்தால் வரவழைத்துக் கொடுக்கின்றார் 

அதில் சொல்லப்பட்டது போல் அவர்கள் கம்பெனி மூடப்படுகிறது... வேலையிழந்த அவர்கள் பணம் சம்பாதிக்க அந்த தினத்தந்தி நாளிதழில் சொல்லியிருப்பது போல்........ ஒரு குத்துச் சண்டை டோர்ணமேன்டில் அவர்கள் ஆதரிக்கும் ராயபுரம் பீட்டர் வெல்லுவார் என்றும் அதனால் அவர்களுக்கு 2 கோடி பணம் கிடைக்கும்...என்ற முன் நிகழ்வை அறிந்து....

குத்துச்சண்டை பற்றி எதுவும் தெரியாத  ராயபுரம் பீட்டர் (சிவகார்த்திகேயன்)     உடன் அக்ரிமென்ட் போட்டு களம் இறக்குகின்றார்கள் பல லட்சம் அவருக்கு செலவு செய்வது மட்டுமில்லாமல் அவர் காதலிக்கும் குத்துச் சண்டை ரசிகை யாழினி (ஹன்ஷிகா) யின் காதலுக்கும் உதவுகின்றார்கள்

ஆனால்..கடைசி நேரத்தில் உண்மையான குத்துச்சண்டை வீரர் கில்லர் பீட்டர் (வம்சி கிருஷ்ணா) டோர்ணமேன்டில் களம் இறங்க.........ராயபுரம் பீட்டருக்கு ஆதரவாக இருந்த சாண்டியும் அவரது நண்பர்களும் சூதாக கில்லர் பீட்டருடன் சேர்ந்து கொள்ள...........

சங்கி மங்கி குங்பூ போல் கோமாளித்தனமான குத்துச்சண்டை (மான் கராத்தே) கண்டுபிடித்த அப்பாவி ராயபுரம்  பீட்டர் அந்த டோர்ணமென்ட் கடைசி சுற்றில் கில்லர் பீட்டரை ஜெயித்தாரா...? யாழினியுடன் அவரது காதல் வென்றதா...? என்பதே.....

ஆக...மொக்கையான ஏ.ஆர்.முருகதாஸின் கதையை காமெடி காட்சிகளாலும் வயறு குழுங்க  சிரிக்க வைக்கும் நறுக் சுறுக் சிரிப்பு வசனங்களாலும் பட்டை தீட்டிய இயக்குனர் திருக்குமரன் உழைப்பு மான் கராத்தே படத்திற்கு 25 % என்றால்.... 

தனக்கென்று நக்கலும் விக்கலும் கலந்த  புதுப் பானி, தனிப்பாணி நடிப்பால்  75% படத்தை தோளில் சுமப்பது சிவகார்த்திகேயன் ஆகும் 

சிவ கார்த்திகேயன்..... கொஞ்சம் தவறினாலும் சொதப்பலாகக் கூடிய மான் கராத்தே கதையில் தனது நடிப்பால் வெற்றிப்படமாக்கியது  இவரது நடிப்பு-ரஜினி,கமல்,விஜய்,அஜித்...கலவையாக அதே நேரம் வித்தியாசமாகவும் உள்ளது 

ஹன்ஷிகா.......அம்மணிக்கு உடல் மெலிந்தாலும் இரண்டு கண்ணங்களும்   புசு..புசு.. என்று அப்படியே இருக்கின்றன  ........ம்.. யாருக்கோ கொடுத்து வைக்கவில்லை.. ரெப்ரி டைகர் டய்சனாக கொஞ்ச நேரமே வந்தாலும் சூரியின் அலப்பறை அட்டகாசம் 

அனிருத் இசையில் பாடல்கள் படத்தில் சரியான இடத்தில் வருவதால் கேட்பது போல் உள்ளது ஓபன் த டாஸ்மாக்...பாடல் குத்துப்பாட்டுரகம் மாஞ்சா பாடலும் டார்லிங் டம்பக்கும்...படத்தில் சிச்சுவேசன் சாங் ரகம் 

சுகுமார் ஒளிப்பதிவில் பாடல்கள் குளுமையாக உள்ளன மலை,அருவி,சித்தர்  காட்சிகள் அருமை...குத்துச்சண்டை டோர்ணமென்ட் காட்சிகள் நல்ல படபிடிப்பு எடிட்டிங் அஸ்வின் பாராட்டுக்குரியவர் 

ஆக...மொக்கை கதையை உள்ள   படத்தை  தன் லைட்-வெயிட் நடிப்பால் தோளில் சுமந்து பார்வையாளர்களை கலகலப்பாக்கிய  சிவ கார்த்திகேயன் மான் கராத்தே படத்தின் மூலம் ரஜினி,கமல்,விஜய், அஜித்..  நட்சத்திர நடிகர்கள் வரிசையில் இடம் பிடித்துவிட்டார் என்றுதான் சொல்வீர்கள் நீங்கள் அவர்களது தீவிர ரசிகர்களாக இல்லையென்றால்.......
நான் படம் பார்த்த மாலில் உள்ள இரண்டு திரையரங்குகளில்  மான் கராத்தே படம் அரங்கம் நிறைந்த காட்சிகளாகவும் அம்புட்டும் சிவ கார்த்திகேயனை திரையில் காணும் போதெல்லாம் விசிலடிக்கும் ரசிகர்  கூட்டமாகவும்  இருந்ததே இதற்கு சாட்சி.............. 

உங்கள் பார்வையில்.............
நீங்கள் படம் பார்த்தவராக இருந்தால்
 மான் கராத்தே படம் எப்படி இருக்கு....?


வாக்களிக்கும்  அனைவருக்கும் நன்றி....

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1