முதல் பாதி....துயில் மயக்கம் குறைபாடு உள்ள ஒருவனின் வாழ்க்கையில் வரும் காதலை காமெடியுடன் படம்காட்டும் கலகலப்பு.இரண்டாம்பாதியில் நட்பு துரோகம்,கள்ளக் காதல்..என்று கில்மா படம் காட்டும் அருவெறுப்பு...நான் சிகப்பு மனிதன்
துயில் மயக்கம் குறைபாடு (Narcolepsy) உள்ள நாயகன் தனக்கு ஆதரவாக இருந்த தன் காதலியை பாலியல் வன்கொடுமை செய்த நான்கு பேரை கண்டுபிடித்து பழி வாங்குவதே........படத்தின் கதை.
பிறவியிலேயே அதீத துக்கம்,பயம்,உணர்ச்சி,சந்தோசம் வந்தால் தூங்கி விழும் துயில் மயக்க குறைபாடு உள்ள நடுத்தர வசதியுள்ள இந்திரன் (விஷால்) தனது குறையை கண்டு வெறுக்காமல் காதலித்து வயிற்றில் குழந்தை சுமக்கும் பெரிய வசதியுள்ள மீரா (லட்சுமி மேனன்) வுடன் நள்ளிரவில் வெளியே காரில் போகும் போது நான்கு ரவுடி கும்பல் வழிமறித்து......
பயத்தில் இந்திரன் காரில் தூங்கிட..மீராவை கற்பழித்து கோமா நிலைக்கு தள்ளிவிடுகின்றார்கள்
தூங்கினாலும் சப்தத்தை பதிவு செய்யும் திறன்கொண்ட இந்திரன் அந்த நாலு ரவுடிகளையும் அவர்கள் பேச்சை வைத்து கண்டுபிடித்து எப்படி பழி வாங்குகின்றார் என்பதை த்திரிலுடன் சொல்கின்றது
இப்படியும் சொல்லலாம்.....இன்னொரு மாதிரியும் சொல்லலாம்
கர்ணன் (சுந்தர் ராமு) தன் மனைவி கவிதா(இனியா)மூலம் அரவிந் என்ற பணக்கார நண்பனிடம் ரூ.2 கோடி ஏமாற்றுவதை காட்டிக் கொடுத்து அதனால் தன் மனைவி கவிதா மரணத்திற்கு காரணமான இன்னொரு நண்பன் இந்திரனை (விஷால்) பழிவாங்க அவனது காதலி மீரா(லட்சுமி மேனன்) வை ரவுடிகளை வைத்து கற்பழித்து கோமா நிலைக்கு தள்ளுவதும்.........இந்திரன் எப்படி அவர்களை பழிவாங்கினான்..? என்றும் சொல்லலாம்
இயக்குனர் திரு.........எதையோ சொல்ல வந்து எங்கேயோ போய் முட்டிக்கிட்டார் ஆனாலும் படத்தின் துவக்க காட்சிகளாக வரும்......ஓடும் ரயிலில் நான்கு ரவுடிகள் போலிஸ் ஒருவரை தள்ளிவிட்டு கொள்ளுவதும்
இன்னொன்று இந்திரன் நடுராத்திரியில் நண்பர்களுடன் கள்ளத்துப்பாக்கி வாங்குவது என்றும் ஏகத்துக்கு எதிர்பார்ப்பை உண்டாக்குவது.......பின் அதற்குரிய டெம்போவை கடைசிவரை கொண்டுபோகாமல் தவறவிட்டதும் திரைக்கதையின் சறுக்கல்.........லட்சுமி மேனன் பையன் வேடம் போட்டு விஷாலுடன் ஷகிலா படம் பார்ப்பது...இப்படி நிறைய லாஜிக் ஓட்டைகள்... நம்மை அரங்கின் மோட்டைப் பார்க்க வைக்கின்றன
விஷால்......அவருக்கு கிடைத்த பூனை-புலி இரண்டு உணர்வுகளையும் முகத்தில் பிரதிபலிக்கின்றார்....லட்சுமி மேனன்....... பாய்ந்து வந்து விஷாலுக்கு லிப்-லாக் கொடுப்பது.....அடடா..... பார்க்கும் நமக்கும் ஏதோ பண்ணுது (அரங்கில் நிறைய சின்ன வாண்டுகள் விசில் சப்தம் காதைப் பிளக்கின்றது)
மீராவின் பணக்கார அப்பாவாக ஜெயப்பிரகாஷ்,இந்திரன் தாயாக சரண்யா பொன்வண்ணன், நல்ல நண்பன் ஜெகன், கெட்ட நண்பன் சுந்தர் ராமு,இனியா ....இப்படி நிறைய பேர் வந்து போகிறார்கள் மயில்சாமி ஒரு காட்சியில் வந்தாலும் நல்ல தமாஷ்
ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் கானாபாலாவின் லவ்லி லேடிஸ் கேட்கலாம் பெண்ணே ஒ பெண்ணே.....காதல் மெலோடி இதயம் உன்னைத் தேடுதே.......சோகம் கலந்த பாடல் இரண்டும் ரசிக்கலாம் BGM கூட பரவாயில்லை என்றுதான் சொல்லவேண்டும்
ரிச்சர்ட் நாதனின் ஒளிப்பதிவில் பாடல்காட்சிள் நள்ளிரவு மழைக்காட்சிகள் அருமை பாடல் காட்சிகளில் வரும் ராஜஸ்தான் மனிதர்கள்,பாலைவனம், கோயில்கள்,பனி மலைகள்....எல்லாம் குதுகலம்
மான் கராத்தே-யில் பாக்ஸிங் விளையாட்டை காமெடியாக அவமதித்தது போல் தாமஸ் ஆல்வா எடிசன்,வின்சன்ட் சர்ச்சில்...போன்றவர்கள் Narcolepsy மனிதர்கள் என்று சொல்லி அதே குறைபாடு உள்ள கதாநாயகனை செக்ஸ்க்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து அசிங்கப் படுத்தும் படம் விஷால்-லட்சுமி மேனன் லிப்-லாக் காட்சி கதைக்கு அல்ல........காசுக்கு திணிக்கப்பட்ட காட்சி
முதல் பாதியில் விஷால் தூங்கி விழுகின்றார் நாம் விழிப்புடன் இருக்கின்றோம் இரண்டாம் பாதியில் அவர் விழித்துக் கொள்கிறார் நாம் தூங்கி விழும் நிலைக்கு வருகின்றோம்....ஆங்...நான் சிகப்பு மனிதன் என்பதை நான் தூங்கும் மனிதன் என்றும் சொல்லலாம்
நீங்கள் படம் பார்த்தவராக இருந்தால்..........அல்லது படம் பார்த்து விட்டு உங்கள் மதிப்பீட்டை தெரியப்படுத்துங்கள்........
நான் சிகப்பு மனிதன்-படம் எப்படியிருக்கு....?
வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி.....முடிவு-18/4/2014
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....துயில் மயக்கம் குறைபாடு (Narcolepsy) உள்ள நாயகன் தனக்கு ஆதரவாக இருந்த தன் காதலியை பாலியல் வன்கொடுமை செய்த நான்கு பேரை கண்டுபிடித்து பழி வாங்குவதே........படத்தின் கதை.

வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |