திகில் திரைப்படங்கள் போன்று அதி பயங்கரமாகவும் மண்டையை பிளக்கும் லாஜிக் குழப்பமாகவும் உள்ளது தேர்தல் முடிந்தப்பிறகு ஊடகங்கள் வெளியிடும் எக்ஸிட் போல்கள் (தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள்)
இறுதிகட்ட தேர்தல் முடிந்ததும் தேர்தல் கருத்துக்கணிப்புக்கு இருந்த தடையை தேர்தல் ஆணையம் விலக்கிக்கொள்ள ஆளாளுக்கு எதையாவது உளறிக் கொட்டி மக்கள் மண்டையை பிளக்கிறார்கள் இந்த ஊடகங்கள்.........
என்.டபிள்யு.எஸ்.சி ஓட்டர் நிறுவன தயாரிப்பில் வெளிவந்துள்ள அதிரடி கருத்துக் கணிப்பில்.........
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 289 தொகுதிகளை கைப்பற்றும் என்றும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 101 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி,அதிமுக,திமுக..உட்பட மற்றவைகள் 153 இடங்களிலும் வெற்றிபெறும் என்று தெரிவிக்க.......
பாஜக கூட்டணி 298 இடங்களும், காங்கிரஸ் கூட்டணி 93 இடங்களும், மற்றவர்கள் 152 இடங்களும் பெறுவார்கள் என்று ஆஜ்தக் டிவி வெளியிட்டுள்ளது.
315 இடங்களை பாஜக கூட்டணியும், 80 இடங்களை காங்கிரஸ் கூட்டணியும், 148 இடங்களை மற்றவர்களும் பெறுவார்கள் என்று இந்தியா நியூஸ் டிவி படம் காட்டுகிறது
பாஜக கூட்டணி 299, காங்கிரஸ் கூட்டணி 112, மற்றவர்கள் 132 இடங்களை பெறுவார்கள் என்று ஜீ நியூஸ் (புரொடக்சன்) தயாரித்து வெளியிட்டுள்ளது
இந்தியா டிவி வெளியிட்டுள்ள எக்ஸிட் போல்..... பாஜக கூட்டணி 317 இடங்களையும், காங்கிரஸ் கூட்டணி 104 இடங்களையும், மற்றவர்கள் 122 இடங்களையும் பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளது.
இந்தக் கண்ணாமூச்சி ரே...ரே... அல்லது கிச்சு கிச்சு தாம்பழம் விளையாட்டு நம்ம தமிழ் நாட்டிலும் ஊடகங்களால் அமோகமாக விளையாடப்படுகிறது
இவைகளை முழுக்க வாசித்து நீங்கள் ஒப்பிட்டுப் பார்த்தால் நமக்கு பைத்தியம் பிடிக்க வைத்துவிடுவார்கள் இந்த பைத்தியக்கார ஊடகங்கள்....
ஆனால் ஓர் ஒற்றுமை எல்லா கணிப்புகளிலும் மோடியே கதாநாயகனாக சித்தரிக்கப்படுகிறார்
அரசியல் கட்சிகள் ஊடகங்களுக்கு பணம் பட்டுவாடா செய்து இப்படி நாடகம் ஆடுவதும் உண்டுஎன்பார்கள் ஆனால்...தேர்தல் முடிந்தப் பிறகு இப்படி நாடகம் ஆடினால் யாருக்கும் ஆதாயம் இல்லையே உண்மையான தேர்தல் முடிவுகள் வருவதற்குள் வீண் கலவரத்தை இது உருவாக்கும்
நண்பர்களே! உங்கள் பார்வையில் ..........
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புக்கள் (எக்ஸிட் போல்) உண்மையா...? இதுபோன்ற கணிப்புகள் தேவையா...?
வாக்களித்து உண்மையை தெரிவியுங்கள்...முடிவு-15/05/2014
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |