google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்-சினிமா விமர்சனம்

Saturday, May 10, 2014

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்-சினிமா விமர்சனம்


இதுவரை காமெடியனாக வலம் வந்த சந்தானத்தை டக்கரு...டக்கரு...டாப் டக்கரு என்று காதல் நாயகனாக மாற்றிய காதல்-குடும்ப சென்டிமென்ட்-அதிரடி கலவையான டக்கர் படம்-வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்

அப்பாவி  ஒருவன் கொலை வெறியும் சென்டிமென்ட்டும் நிறைந்த முட்டாள் (கூட்டத்தில்) முரட்டு குடும்பத்தில்  மாட்டிக்கொண்டு உயிர் தப்பிப்பதே..படத்தின் கதை

27 வருடத்திற்கு பிறகு சென்னையில் சைக்கிளில் வாட்டர் கேன்   சப்ளை செய்யும் சக்தி (சந்தானம்) குட்டியானை வாகனம்  வாங்குவதற்காக தனது சொந்த ஊர் அறவங்காடு கிராமத்தில்  உள்ள  தன் அப்பா சொத்தை விற்க வருகிறான்.

அறவங்காட்டில்  தன்னைத் தேடி வருபவர்களை மரியாதையாக வீட்டில் விருந்து படைத்து  பிடிக்கவில்லை என்றால் கோவிலாக நினைக்கும்  வீட்டை தாண்டியதும் கொலை செய்யும் கொடூர குணம் கொண்ட ஊர் பெரிய மனிதர் சிங்க ராயரை(நாகிநீடு) சந்தித்து தன் அப்பா சொத்தை விற்றுத் தரும்படி கேட்கிறான்

வீட்டுக்குள்  விருந்து சாப்பிடும் போது இந்த சக்திதான் 27 வருடமாக பலிக்கு பலியாக கொலைசெய்ய தானும் தன் இரண்டு மகன்களும் தேடிக்கொண்டிருக்கும் தன் தம்பி மரணத்திற்கு காரணமான கதிர்வேலு (போஸ் வெங்கட்)மகன் என்பதை அறிந்து வீட்டை விட்டு வாசல் படி தாண்டியதும் கொலை செய்ய நினைக்கிறார் சிங்க ராயர்


beach

இதை  அறிந்துகொண்ட சக்தி பல விதங்களில் நாடகமாடி ராயர் வீட்டை  விட்டு வெளியே வராமல் நடிக்கின்றான் இதற்கிடையில் ராயரின் மகள் வானதி  (அஸ்னா ஜவேரி) சக்தியை காதல் செய்கிறாள்.

ராயர் வீட்டிலிருந்து சக்தி தப்பித்தானா...? சக்தி மீது ராயரின் மகள் வானதி கொண்ட காதல் என்ன ஆனது...? என்பதை நகைச்சுவையுடன் அதிரடி சென்டிமென்ட் காட்சிகளுடன் படம் காட்டுகிறார் இயக்குனர் ஸ்ரீநாத்

படத்தின்  சில சிரிப்பூட்டும்-சிலிர்ப்பூட்டும்  காட்சிகளாக............
-படம் ஆரம்பத்திலும் கடைசியிலும் வரும் சந்தானத்தின் நன்பேண்டா...(டி.ஆர்.குரலில் பேசும்-பாடும் ) பழைய சைக்கிள் 

-ஓடும் ரயிலில் கலாய்த்தல் பெயரில் சந்தனத்தின் பன்ச் வசனங்கள்..பவர் ஸ்டார்- சோலார் ஸ்டார் காட்சிகள்மொக்கையாக இருந்தாலும் சிரிப்பூட்டுகின்றன
- ராயர் வீட்டில்  ஊஞ்சலில் சக்தி  அடிபட்டதுபோல் நாடகமாடுவது.
- மொட்டை மாடியில் கரன்ட் கம்பம் மீதேறி தப்பிக்க முடியாமல் சக்தி தொங்கிக் கொண்டு கிடப்பது
-பூக்கூடையில் ஒளிந்து கொண்டு தப்பிக்க நினைப்பது
-கிளைமாக்ஸில் கார்-சைக்கிள் விரட்டல் மற்றும் உடைந்த பாலத்தில் அஸ்னாவுடன் சந்தானம் தப்பிக்க முயல்வது..ஆற்றில் குதித்து காப்பாற்றுவது
-தீர்க்கதரிசியாக வரும்  VTV கணேஷ்...செம கலக்கல்  

"ரசம் வைக்கிறவன் எல்லாம் ரகுவரன் போல பேசிட்டு போறான்"
போன்று இன்னும் கணக்கிலடங்கா சந்தானத்தின் நக்கல் வசனங்கள் படம் பார்ப்பவரை அவ்வப்போது அப்-டேட்டாக வைக்கின்றது    சிரிப்பதற்காக உருவாக்கப்பட்ட கதை...லாஜிக் பார்க்கக் கூடாது

மரியாதை ராமண்ணா  படத்தின் ரீமேக் என்பதால் ஆந்திரா குண்டூர் குண்டு மிளகாய் போல் வன்முறைக் காட்சிகளும் காரமாய் இருக்கிறது...அவை சிவகாசி சரவெடி பட்டாசுபோல் சந்தானத்தின் டைமிங் நக்கல் காமெடிகள் சரிசெய்கின்றன

சந்தானம்-இந்தப் படத்தில் அதிரடி சண்டைக்காட்சிகள் தவிர காதல், சென்டிமென்ட் உணர்வுகளை பிரதிபலிக்கிறார்... பாடல்காட்சிகளில் நல்லாவே டான்ஸ் ஆடுகிறார் நடனத்தில் எம்ஜிஆர்,ரஜினி,விஜய், அஜித்,சிம்பு...எல்லா நடிகர்களின் சாயலும் வந்துபோகிறது படம் முழுக்க சந்தானமே நிறைந்துள்ளார்.

அஸ்னா ஜவேரி...புதுமுகம் என்றாலும் நடிப்பில்  அனுபவ முகம் போல் நடிக்க அவரது அழகும் துணை செய்கிறது பாடல் காட்சிகளில் ரம்மியம் .கொஞ்ச நேரம் வந்தாலும் VTV கணேஷ் தன் கரகரப்பான கட்டைக் குரலால் சிரிப்பூட்டுகிறார் 

சித்தார்த் விபின் இசையில் சந்தானத்தின் அறிமுகம்  டக்கரு...டக்கரு பாடல் மூலமாக பெரிய சூப்பர் ஹீரோ படங்களில் வருவது போல் உள்ளது.ரயிலில் பாடும் பாடல்...ரை அடே....குதுகலம் என்றால் ஒற்றை தேவதை...காதல் டூயட் பாடல்...இனிமையோ இனிமை.செல்லக்குட்டி...பாடல் குத்துப்பாட்டு ரகம் சக்தி ரிச்சர்ட் நாதன்...ஒளிப்பதிவில் கிளைமாக்ஸ் காட்சி பாலம் பிரமாண்டமாக உள்ளது டூயட் பாடல் காட்சியில் புதுமையான போட்டோ ட்ரிக்ஸ் நன்றாக  உள்ளது

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்-சந்தானத்தை நாயகன் வரிசையில் உயர்த்த அவருக்கு  கிடைத்த சிறப்பான ஆயுதம் இது போன்ற கதைகள் உள்ள படங்கள்  தேர்வு செய்து சந்தானம் நாயகனாக தொடரலாம்...தொடர்ந்தால் தொடர்ந்து  வெற்றிபெறலாம்  
சந்தானத்தின்  ஹீரோ வளர்ச்சியும் சூப்பர் ஓபனிங்கும்   மற்ற ஹீரோக்களுக்கு வயிற்று எரிச்சலை ஊட்டுவது நிச்சயம் 

சந்தானம்-இன்னும்  கொஞ்சம் சினிமா சண்டைப் பயிற்சியும் சினிமா உலக தில்லாலங்கடி வேலைகளையும்  கற்றுக்கொண்டால் ரஜினி,கமல்,விஜய், அஜித்...வரிசையில் இடம்பிடிப்பார்

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1