இதுவரை 18-படங்களில் மக்களை அழிக்கும் கொடூர மிருகமாக வந்த காட்ஸிலா இதில் (Godzilla 2014) புது அவதாரமாக மக்களை காக்கும் கடவுள் மிருகமாக காட்டப்பட்டுள்ளது....மற்றபடி பிரமாண்டம் பெரிய அளவுக்கு இல்லை
படத்தின் கதையாக.......
ஜப்பான் விஞ்ஞானிகளின் இயற்கைக்கு மாறான ஆராய்ச்சியில் புதுவிதமான மியுடோ என்ற அணு உலை கதிர்களை உணவாக தின்னும் இரண்டு பெரிய ஏலியன் மிருகங்கள் உருவாகி மக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றன அவைகளை அழிக்கும் பணியில் ராணுவத்துக்கு உதவியாக ஆழ்கடலில் வசிக்கும் காட்ஸிலா மிருகம் உதவுவதும் மக்களைக் காப்பதுமே
டைனோசர், கிங்காங்...உருவங்களுக்கு போட்டியாக கிராபிக்ஸில் உருவாக்கப்பட்ட காட்ஸிலா மிருகத்துடன்...... விஞ்ஞானியாக கென் வாடனாபே (Ken Watanabe ) இராணுவத்துக்கு உதவியாக மியுடோ ஏலியன் முட்டைகளை அழிக்க போராடும் நாயகன் ஆரோன் டெய்லர் ஜான்சன் (Aaron Taylor-Johnson), பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நாயகி எலிசபெத் ஒல்சன் (Elizabeth Olsen) இணைந்து நடித்துள்ளர்
படத்தின் பிரமாண்டமான காட்சிகளாக...........
-1999 ஆம் ஆண்டில் பிலிப்பைன்ஸ் சுரங்கத்தில் கண்டெடுக்கப்படும் மிகப்பெரிய எலும்புக்கூடும் இரண்டு முட்டைகளும் முப்பரினாமத்தில் காண பிரமிப்பாக உள்ளது
-மெட்ரோ ரயிலில் பயணிக்கும் நாயகன் பெற்றோரை பிரிந்த சிறுவனை காப்பாற்றி மீண்டும் பெற்றோருடன் சேர்த்து வைக்கும் நெகிழ்ச்சியான காட்சி
-மிக உயரமான பாலத்தில் பள்ளிச் சிறுவர்கள் செல்லும் ஸ்கூல் வாகனத்தை மியுடோ ஏலியன்கள் தாக்கும் அதி பயங்கர காட்சி
-ராணுவ ரயிலில் செல்லும் இரண்டு நைட்ரஜன் ஏவுகணைகளை மியுடோ ஏலியன் ஓன்று விழுங்குவதும் இன்னொன்றை கடத்திச் செல்லும் காட்சிகள்
-கிளைமாக்ஸில் காட்ஸிலா மிருகத்துக்கும் மியுடோ ஏலியன்களுக்கும் நடக்கும் பிரமாண்டமான கிராபிக்ஸ் சண்டைக்காட்சிகள்
-கடைசியில் இறந்ததாக கருதப்படும் காட்ஸிலா திடிரென்று விழித்து மீண்டும் கடலுக்குள் சென்று மறையும் உணர்ச்சிமயமான காட்சி...
இப்படி நிறைய சிறப்பான காட்சிகள் இருந்தாலும் குழந்தைகளை கவரும் அதி பிரமாண்டமான காட்சிகள் குறைவு அதுவே படத்தின் தொய்வு... பின்னடைவு
கேன்ஸ் படவிழாவை கலக்கும்
அழகு காட்ஸிலா pic.twitter.com/3E8Tweh94X
— ட்விட்டர் SUN (@PARITHITAMIL) May 21, 2014
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |